என் மலர்
முகப்பு » ஐபிஎல் 2020
நீங்கள் தேடியது "மாருதி ஆல்டோ 2020"
மாருதி சுசுகியின் 2020 மாருதி ஆல்டோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #MarutiAlto2020
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புதிய ஆல்டோ ஹேட்ச்பேக் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாருதி ஆல்டோ 2020 மாருதியின் ஃபியூச்சர் எஸ் கான்செப்ட் மாடலை தழுவி உருவாகியிருக்கிறது. மாருதி ஃபியூச்சர் எஸ் கான்செப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
2020 வெளியீட்டிற்கு முன் புதிய மாருதி ஆல்டோ இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஆல்டோ ஹேட்ச்பேக் கார் பார்க்க எஸ்.யு.வி. போன்ற தோற்றம் பெற்றிருக்கிறது. ஸ்பை புகைப்படங்களின் படி புதிய காரில் ரேடியேட்டர் கிரில், ஹெட்லேம்ப் யூனிட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
புகைப்படம் நன்றி: Teambhp
புத்தம் புதிய வடிவமைப்பு கொண்ட ஆல்டோ கார் முதல்முறை கார் வாங்குவோருக்கு ஏற்றதாக இருக்கும். இதன் வடிவமைப்பு 2020 மாருதி ஆல்டோ மாடலில் அதிக இடவசதியை வழங்குகிறது. காரின் உள்புறம் புதிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதேபோன்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிய வேகன் ஆர் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது.
புதிய மாருதி கார் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய மாருதி ஆல்டோவில் புதிய வடிவமைப்பு, புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. 2020 மாருதி ஆல்டோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவன வாகனங்களின் விற்பனை குறைந்து வருகிறது. குறைவான விற்பனை 2019 பொது தேர்தல் நிறைவுறும் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என தெரிகிறது.
டோக்கியோவில் 2020 ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே தனது இலக்கு என மேரிகோம் கூறியுள்ளார். #WorldBoxing #Championship #MaryKom
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்.
35 வயதான அவர் சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக குத்துச்சண்டை போட்டியில் லைட் பிளை வெயிட் பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன் போட்டியில் 7 பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.
இந்த நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்று 3 குழந்தைகளுக்கு தாயான மேரிகோம் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த விழாவில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றேன். ஆனால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது கனவு. டோக்கியோவில் 2020 ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே எனது இலக்கு.
இதற்காக நான் 2 அல்லது 3 மடங்கு கடுமையாக உழைக்க இருக்கிறேன். கடினமாக போராடி நாட்டுக்காக தங்கப்பதக்கத்தை கொண்டு வருவேன்.
சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் எனது நம்பிக்கை அதிகரித்துள்ளது.
எனது பயிற்சிக்கான அனைத்து வசதிகளையும் பயிற்சியாளர் இந்திய குத்துச் சண்டை சம்மேளம், இந்திய விளையாட்டு ஆணை யத்திடம் கேட்டுள்ளேன். சிறந்த வசதிகள் அமையும் போது முடிவுகளும் நன்றாக இருக்கும்.
இவ்வாறு மேரிகோம் கூறியுள்ளார். #WorldBoxing #Championship #MaryKom

×
X