என் மலர்
நீங்கள் தேடியது "கறம்பக்குடி"
- திருமணஞ்சேரியில் திருமணம் செய்துகொண்டனர்.
- வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சனை.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தீதான் விடுதி கிராம த்தைச் சேர்ந்தவர் வீரையன் மகன் சுந்தரபாண்டியன் (வயது 23). விழுப்புரம் மாவட்டம் சேந்த நாடு புதுக்காலணியை சேர்ந்த விஜயன் மகள் விஜய தர்ஷினி(19).
இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது வர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த விஜய தர்ஷினி நேற்று முன்தினம் இரவு திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு கறம்பக்குடிக்கு வந்தார்.
தொடர்ந்து சுந்தரபாண்டியனும், விஜய தர்ஷனியும் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இருவரும் திருமண கோலத்தில் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
காதல் ஜோடி இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்தில் பிரச்சனை ஏற்படும் என கருதி காவல் நிலையம் வந்ததாக கூறினார்.