என் மலர்
நீங்கள் தேடியது "காம்பீர்"
- நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது
- பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் கேகேஆர் அணியின் இணை உரிமையாளராக உள்ளார்
ஐபிஎல் தொடரில் நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. தொடக்கம் முதலே கொல்கத்தாவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளரான கவுதம் காம்பிர் விளங்குகிறார்.
நேற்றைய போட்டியின் வெற்றிக்குப் பிறகு கேகேஆர் அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரும் கேகேஆர் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக் கான், மைதானத்துக்குள் வந்து அணியில் உள்ளவர்களைக் காட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது கேகேஆர் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக கவுதம் கம்பீரின் நெற்றியில் ஷாருக் முத்தமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வாக அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை கேகேஆர் அணி பயிற்சியாளராகவே நீடிக்க வலியுறுத்தி அவருக்கு ஷாருக் கான் பிளாங்க் செக் கொடுத்தாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.