என் மலர்
நீங்கள் தேடியது "கார்த்திக்"
- பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்
- இப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர்.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிக்காமல் இருந்த நிலையில் எடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.
அந்தகன் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான `அந்தாதூன்' படத்தின் ரீமேக் ஆகும். பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் அந்தகன் படத்தை இயக்குகிறார்.
மேலும் இப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அந்தகன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின.
- கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது
நடிகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் கூட்டணியில் பிரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் X. விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க முதல் கவுதம் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சரத்குமார், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்துக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு உகாண்டா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. ஆர்யாவின் காட்சிகள் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இடையில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைத்துள்ளது. கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. படத்தைக் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'.
- இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.
'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், 'ரெய்டு' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலான 'அழகு செல்லம்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. காதல் பாணியில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா, நல்ல தம்பி, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கார்த்திக்.
- இவர் தற்போது நடித்து வரும் தீ இவன் படத்தில் சன்னி லியோன் இணைந்துள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்திக். அதன்பின்னர் நினைவெல்லாம் நித்யா, நல்ல தம்பி, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் தற்போது மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "தீ இவன்" படத்தில் நடித்து வருகிறார்.
இதில் சுகன்யா, ராதா ரவி, சுமன்.ஜே, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கி தயாரித்த டி.எம்.ஜெயமுருகன் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஒய்.என். முரளி மேற்கொள்ள படத்தொகுப்பை மொகமத் இத்ரிஸ் கையாளுகிறார். இப்படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது, நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.
இந்த படத்தில் இடம் பெறவுள்ள "மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம்" என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாட்கள் காத்திருந்தோம், அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது. நேற்றைய முன்தினம் மும்பை சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து படம் பற்றி கூறினேன் கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடமாட ஒப்புக்கொண்டார். அதோடு பாடல் வரிகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.
இந்த பாடலின் படப்பிடிப்பு நவம்பர் 15-ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடைபெற உள்ளது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'இந்தியன் 2'.
- இப்படத்தில் மீண்டும் நடிப்பதாக நடிகை காஜல் அகர்வால் சில தினங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தினார்.
கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் ஷங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். 'விக்ரம்' பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்' என தெரிவித்திருந்தார்.
இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்து, படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தியன்-2 படத்தில் நடிக்கவிருக்கும் முக்கிய நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக் இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சமீபகாலமாக படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.