என் மலர்
நீங்கள் தேடியது "கொடுங்கையூர்"
கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் மொத்தம் 94 கடைகள் உள்ளன.
வியாபாரிகள் சிலர் கடையை நடத்தாமல் முத்தமிழ்நகர் மெயின் ரோட்டில், சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் வணிக வளாகத்தில் எடுத்த கடைக்கு முறையாக வாடகை மற்றும் வரி செலுத்தாமல் இருந்தனர்.
இதுபற்றி ஏராளமான புகார்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு வந்தன. இதையடுத்து இன்று காலை அதிகாரிகள் மங்களாராம சுப்பிரமணியன், காமராஜ், திருநாவுக்கரசு மற்றும் ஊழியர்கள் முத்தமிழ் நகரில் உள்ள வணிக வளாகத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கு சாலையோரத்தில் அமைக்கப்பட்டு இருந்த கடைகளை இடித்து அகற்றினர். மேலும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கவும் முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து வியாபாரிகள் தங்களது வாடகை, வரி பாக்கியை உடனடியாக அதிகாரிகளிடம் கொடுத்தனர். அவர்களுக்கு அந்த இடத்திலேயே ரசீது வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.2 லட்சம் வரை வசூலானது.
வணிக வளாகத்தில் கடைகள் அமைக்க வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதற்கு முன்பு இதே போல 2 முறை சாலையோர கடைகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் குற்றவாளிகள் தப்பிச் சென்றால் அவர்களை எளிதாக அடையாளம் காண்பதற்கு வசதியாக துல்லியமான பதிவுகளை கொண்ட கேமராக்களை பொறுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
கொடுங்கையூரில் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களிலும் கேமராக்கள் பொறுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கொடுங்கையூர் ஆர்.வி. நகர் குடியிருப்பு அப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த குடியிருப்பாகும்.
அப்பகுதி முழுவதையும் 3-வது கண் என்று அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அப்பகுதி மக்கள் திட்ட மிட்டனர். இதன்படி முதல் கட்டமாக 15 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
கொடுங்கையூர் சட்டம், ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இதில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஆர்.வி.நகர் சொசைட்டி தலைவர் கண்ணன் மற்றும் குடியிருப்போர் நல மேம்பாட்டு சங்கத்தினர் ஒருங்கிணைந்து இந்த கேமராக்களை நிறுவி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ஆர்.வி.நகரில் கேமராக்கள் பொறுத்தப்பட்டதன் மூலம் அது பாதுகாப்பான பகுதியாக மாறியுள்ளது. இங்கு வந்து தப்பு செய்து விட்டு இனி குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றார்.
ஆர்.வி.நகர் நுழைவு வாயிலில் தொடங்கி குருமூர்த்தி பள்ளி வரையில் பொறுத்தப்பட்டுள்ள இந்த கேமராக்கள் இரவிலும் துல்லியமாக படம்பிடிக்கும் தன்மை கொண்டவையாகும். கட்டபொம்மன் தெருவும் கேமரா பார்வைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 2 கட்டங்களாக ஆர்.வி.நகரில் 30 கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொறுத்தப்பட உள்ளன.
சென்னை கொடுங்கையூரில் செல்போன் கடை நடத்தி வருபவர் பிரேம்குமார். இவர் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் 2 கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர்.
அவர்கள் செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கொடுங்கையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கமுத்து, ஏட்டு மணிவண்ணன் ஆகியோர் ரோந்து வாகனத்தில் வந்தனர்.
அப்போது செல்போன் கடையின் ஷட்டர் கொஞ்சமே திறந்திருந்ததால் சந்தேகம் அடைந்தனர். அருகே சென்ற போது உள்ளே கொள்ளையர்கள் 2 பேர் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஷட்டரை வெளிப்புறமாக பூட்டிவிட்டு எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு விரைந்து வந்தார்.
உடனே போலீசார் 3 பேரும் ஷட்டரை திறந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டினார்கள். போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பு பி.எஸ். மூர்த்தி நகரை சேர்ந்த மதன்குமார், வ.உ.சி. நகரை சேர்ந்த அபிமன்யூ என்று தெரிய வந்தது. இது தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று இதேபோல் கொடுங்கையூர் ஜி.என்.டி. சாலையில் 2 கடைகளில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
பெரம்பூர்:
கொடுங்கையூர் எழில்நகர் தொப்பை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலான்கோ. இவர் தனது வீட்டு அருகிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் குடும்பத்துடன் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்றிருந்தார். இன்று காலையில் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் 10 பவுன் நகையை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.