என் மலர்
நீங்கள் தேடியது "சாஸ்திரம்"
- நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
- இதன்மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை:
உணவும் மருந்தும் ஒன்றே... படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்... பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே... இதுபோன்ற பழமொழிகளை சும்மாவா சொன்னார்கள்...
சத்தான உணவு உள்பட எந்த உணவாக இருந்தாலும் சாப்பிடும் முறையில் ஆரோக்கியம் உள்ளது என்பது முன்னோர் வாக்கு.
காலையில் அரசனைப் போன்றும், நண்பகலில் சாதாரண மனிதனைப் போன்றும், இரவில் பிச்சைக்காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என பெரியோர் சொல்வது வழக்கம்.
காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு (சுக ஆசனம்) சாப் பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி. இதன்மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.
உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.
சாப்பிடும் போது பேசக்கூடாது என சொல்வார்கள். சாப்பிடும்போது வெளியில் இருந்து காற்று வாய் வழியே உள்ளே செல்லும். எனவே பேசாமல் உதடுகளை மூடியபடி சாப்பிட்டால் உடல் நன்கு ஆரோக்கியம் அடையும்.
மனதில் எந்த உணர்வும் இன்றி உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிட்டால் நூறு வயது வரை வாழலாம். அப்படி இல்லையெனில் ஆரோக்கியத்தோடு வாழலாம்.
சாப்பிடுவது குறித்துசாஸ்திரம் சொல்வது என்ன?
இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்.
ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.
குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு சாப்பிடக் கூடாது.
சாப்பிடும்போது முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு அதன்பின் நீர் அருந்தவேண்டும்.
சாப்பிடும் வேளை தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீரை அருந்தக் கூடாது.
இருட்டில் சாப்பிடக் கூடாது.
சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால் சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிடவேண்டும் என தெரிவிக்கிறது.
- ஓரையை அறிந்து சுபகாரியங்களை செய்தால் சிறப்பாக இருக்கும்.
- வாரத்தில் உள்ள ஒவ்வொரு தினத்திற்கும் ஓரை நேரம் உள்ளது.
பொதுவாக எந்த நற்காரியம் செய்யத் தொடங்கினாலும், அது வளர்பிறையா? சுப கிரக ஓரை வருகிறதா? என்று தினசரி காலண்டரில் பார்த்து செய்யத் தொடங்குவது நல்லது. பொதுவாக ஒரு சுபகாரியம் தொடங்குவதற்கும், திருமணம், புதிய கட்டிட வேலை ஆகியவற்றுக்கும் பெரியவர்கள் ஓரை பார்த்து செய்வது நல்லது என்பார்கள்.
'ஹோரா' என்ற வடமொழி சொல்லில் இருந்து வந்தது தான் தமிழில் 'ஓரை' என்றாகி விட்டது. ஓரை என்பது ஒரு மணி நேரத்தை குறிக்கும். இந்த ஓரையில் ஒவ்வொரு கிரகங்களின் பலன் இருக்கும். அதில் சுப கிரகங்கள் என்று அழைக்கப்படும் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் ஓரை பார்ப்பது அவசியம். அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் ஓரைகளில் எந்த சுபகாரியங்களும் செய்யக் கூடாது என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓரை என்றால் ஆதிக்கம் எனப் பொருள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும். ஓரையை அறிந்து சுபகாரியங்களை செய்தால் சிறப்பாக இருக்கும். வாரத்தில் உள்ள ஒவ்வொரு தினத்திற்கும் ஓரை நேரம் உள்ளது. காலையில் சூரியன் உதயமானது முதல் அன்று எந்த கிழமையோ, அந்த கிழமைக்கான உரிய ஓரை தொடங்கும். மொத்தம் ஏழு விதமான ஓரைகள் உள்ளன. மேலும் ஓரைகள் சுப ஓரைகள், அசுப ஓரைகள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன.
சுப ஓரைகள் :
சுக்கிரன், குரு, புதன், வளர்பிறை சந்திரன் ஆகிய ஓரைகள் சுப ஓரைகள் ஆகும்.
அசுப ஓரைகள் :
சூரியன், செவ்வாய், சனி ஆகிய ஓரைகள் அசுப ஓரைகள் ஆகும்.
ஒவ்வொரு ஓரையிலும் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?
சூரிய ஓரை :
உயர் அதிகாரிகளை சந்திக்க, அரசு சம்பந்தப்பட்ட காரியங்களை செய்வதற்கும், சிகை அலங்காரம் மேற்கொள்ளவும், நதிகளில் நீராடவும், திருத்தலங்களுக்கு செல்லவும், தர்ம காரியம் செய்வதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பண காரியம் மேற்கொள்வதற்கும், வழக்கு தொடர்பான விஷயங்கள் மேற்கொள்ளவும் சூரிய ஓரை சிறப்பானதாக இருக்கும்.
சந்திர ஓரை :
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரை நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது. பிரயாணங்கள் மேற்கொள்ளவும், திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதலுக்கு உகந்தது. பெண்கள் தொடர்பான காரியங்களை மேற்கொள்ள சந்திர ஓரை சிறந்த ஓரையாகும்.
செவ்வாய் ஓரை :
நிலம் வாங்குவது-விற்பது, அக்ரிமெண்ட் போடுவது, சகோதர மற்றும் பங்காளி பிரச்சனைகள், சொத்துக்களை பாகம் பிரிப்பது, உயில் எழுதுவது, ரத்த மற்றும் உறுப்பு தானம் செய்தல், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் செவ்வாய் ஓரையில் மேற்கொள்ளலாம்.
புதன் ஓரை :
கல்வி தொடர்பான வேலை தொடங்குவதற்கும், மற்றவர்களிடம் ஆலோசிப்பதற்கும், அலுவலகங்கள் சார்ந்த பணிகள், பயணங்கள் மேற்கொள்ளவும், வித்தைகள் பயிலவும் மற்றும் அனைத்து சுபகாரியங்களுக்கும் புதன் ஓரை உகந்தது.
குரு ஓரை :
தொடங்கும் நற்காரியத்தின் மூலம் எதிர்பார்த்த முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். ஆன்மிக பெரியோர்களை சந்திக்கவும், வியாபாரம், விவசாயம் மேற்கொள்ளவும், ஆடை ஆபரணப் பொருட்கள் வாங்கவும், வீடு, மனை வாங்கவும்-விற்கவும் மற்றும் அனைத்து சுபகாரியங்களுக்கும் குரு ஓரை உகந்தது.
சுக்கிர ஓரை :
திருமணம் தொடர்பாக பேசவும், பிறருடைய உதவிகளைப் பெறவும், விருந்து உண்பதற்கும், பழைய கடன்களை வசூலிக்கவும், மருந்து சாப்பிடவும், புதிய வாகனங்களை வாங்கவும் மற்றும் அனைத்து சுபகாரியங்களுக்கும் சுக்கிர ஓரை உகந்தது.
சனி ஓரை :
வீட்டை சுத்தம் செய்தல், மனைகள் சோதனை இடுதல், எண்ணெய் தொடர்பான காரியம், கனரக இயந்திரங்கள் இயக்குதல், நடைபயணம் மேற்கொள்வது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல் இவற்றையெல்லாம் சனி ஓரையில் மேற்கொள்ளலாம்.
ஒவ்வொரு ஓரைக்கும் உரிய கடவுளை வணங்கி, அதற்குரிய பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- நந்தி பகவானுக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகம் தான்.
- சாஸ்திரப்படி காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குளித்து விட வேண்டும்.
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று முறை குளிக்க வேண்டும் என்பது நியதி. எப்படி தெரியுமா? சிவபெருமான் மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை குளிக்க வேண்டும்? எத்தனை முறை சாப்பிட வேண்டும்? என்கிற கோட்பாட்டை சொல்லி வர சொல்லி நந்தி பகவானிடம் தூது அனுப்பினார்.
நந்தி பகவானுக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகம் தான். சிவபெருமான் என்ன கூறினார் என்பதை பூலோகத்திற்கு வரும் முன்பே அவருக்கு பாதி மறந்தாயிற்று! சிவபெருமான் மூன்று முறை ஒரு நாளைக்கு குளிக்க வேண்டும்! என்றும், ஒரு முறை சாப்பிட வேண்டும்! என்றும் கூறி அனுப்பினார். ஆனால் நந்தி பகவானோ ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட வேண்டும், ஒரு முறை குளிக்க வேண்டும் என்று அப்படியே தலைகீழாக மாற்றி தவறுதலாக கூறி விட்டு வந்து விட்டார். அன்றிலிருந்து இன்று வரை பூலோகத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் இதை தவறாமல் பின்பற்றி வருகிறோம். ஆனால் இதற்காக நந்தி பகவானுக்கு கிடைத்த தண்டனை தான் மிகவும் பரிதாபமானது.
நான் சொன்னதை மாற்றிக் கூறி காலச்சக்கரத்தையே மாற்றிவிட்ட நீ! அதே மனிதர்களுக்கு உழைத்து கொட்டி கஷ்டப்படு என்று சாபம் அளித்து விட்டார். அதன் காரணமாக தான் நந்தி பகவான் ரூபத்தில் இருக்கும் காளை மாடுகள் மனிதர்களுக்கு வண்டி இழுந்து கொடுத்து கஷ்டப்பட்டு உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு புராணக்கதை இருக்க காலையில் குளிப்பது சரியா? மாலையில் குளிப்பது தவறா? என்று கேள்விகளும் உலவிக் கொண்டிருக்கின்றன.
எப்பொழுதும் சாஸ்திரப்படி காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குளித்து விட வேண்டும். அதற்கு பிறகு தான் எந்த வேலையாக இருந்தாலும் நாம் செய்ய வேண்டும். சாஸ்திர ரீதியாக அந்தி சாய்ந்த பிறகு குளிக்க கூடாது அப்படி யார் குளிக்க வேண்டும் தெரியுமா? கெட்ட காரியங்களுக்கு சென்று விட்டு வருபவர்கள் தான் சூரியன் மறைந்த பிறகு குளித்து அவர்களுடைய துணியையும் துவைத்து விட்டு பின்னர் உள்ளே வருவார்கள். எனவே குளிப்பதை விட குளித்து அதனுடன் சேர்த்து துணி துவைப்பது என்பது தான் தரித்திரம் தரும் செயலாகும்.
இன்று இருக்கும் வைரஸ் பரவல் காரணமாக மாலையில் குளிப்பது ஒன்றும் தவறில்லை. அதை விட வேலைக்கு சென்று விட்டு களைப்போடு வருபவர்கள் மாலை வேளையில் குளிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் உடுத்திய உடையை எப்பொழுதும் சூரியன் மறைந்த பிறகு துவைப்பதை மட்டும் வழக்கமாக கொண்டு விடாதீர்கள். இதனால் குடும்பத்தில் தரித்திரம் ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சினைகளும், தொல்லைகளும், துன்பங்களும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதைத் தனியே ஓரிடத்தில் வைத்து விட்டு மறுநாள் காலையில் துவைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்.
- குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு சாப்பிடக்கூடாது.
* குரு, கர்ப்பிணி, நோயாளி, சன்னியாசி ஆகியோருக்கு ஆபத்து காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். அது மிகவும் புண்ணியம்.
* தாய்க்கு நிகரான அண்ணியை தினமும் வணங்க வேண்டும்.
* சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால், அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்.
* இடது கையால் இருக்கையை தூக்கிப் போட்டால், ஆரோக்கியம் பாதிக்கும்.
* இடது கையால் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டால், பிள்ளைகளுக்கு பாதிப்பு வரும்.
* இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்.
* பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு போன்றவை எதிரில் குறுக்கிட்டால், அவற்றை வலதுபுறமாக சுற்றிச் செல்ல வேண்டும்.
* ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக்கூடாது, மழை பெய்யும் போது ஓடக்கூடாது, நெருப்பை வாயால் ஊதக்கூடாது.
* குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு சாப்பிடக்கூடாது.
* கன்றுக்குட்டியைக் கட்டி வைத்திருக்கும் கயிற்றை தாண்டக்கூடாது.
* திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவரை, சுப காரியங்களில் முன்னிறுத்தக்கூடாது.
* சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.
* சாப்பிடும் வேளை தவிர, மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீரை அருந்தக்கூடாது.
* இருட்டில் சாப்பிடக்கூடாது. சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.
* சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால், அவற்றையெல்லாம் கிள்ளி எறிந்து விட வேண்டும்.
* மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.
* குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி ஆகியோரை பார்க்கச் செல்லும் போதும், ஆலயத்திற்குச் செல்லும் போதும் வெறுங்கையுடன் செல்லக்கூடாது.
* தீ உள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.
* பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் ஆகிய மூன்றும், பரிகாரம் இன்றி அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.
* உடல் குறைபாடு உள்ளவர்கள் (மாற்றுத்திறனாளிகள்), ஆறு விரல் உள்ளவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையில் தவிப்பவர்கள் ஆகியோரின் குறையை குத்திக்காட்டி பேசக்கூடாது.
* பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமல் இருப்பது பாவம்.
* பசு மாட்டை, கோமாதாவாக எண்ணி, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.
* வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.
* நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.
- பசுவின் பின்புறத்தை தொட்டு வணங்கி விட்டுச் செல்வது நல்லது.
- எந்த விலங்கு எதிரில் வந்தால் நல்ல சகுனம் என்று அறிந்து கொள்ளலாம்.
நாம் வெளியில் புறப்படும் பொழுது, பசு நமக்கு எதிரில் வந்தால் நல்ல சகுனமாகும். பசுவின் பின்புறத்தை தொட்டு வணங்கி விட்டுச் செல்வது நல்லது.
ஒரு காரியத்திற்கு புறப்படும் பொழுது குதிரையைப் பார்த்தாலும், குதிரை எதிரில் வந்தாலும் மிக மிக நல்ல சகுனமாகும். செய்யப்போகும் காரியம் மிக எளிதில் நிறைவேறும்.
பயணத்தின் போது நாய் நமக்கு முன்னால் ஓடினால் பைரவரின் ஆசி உண்டு. பயணத்தால் நன்மை கிடைக்கும்.
மூஞ்சூறு எதிரில் வந்தால் விநாயகரின் ஆசி நமக்கு கிடைக்கும். முழுமையாக காரியம் வெற்றி பெறும்.