என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தராமையா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக முதலமைச்சரை தி.மு.க. குழுவினர் நேரில் சந்தித்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகனை சந்தித்த தமிழக குழு, சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தது.

    இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சரை தி.மு.க. குழுவினர் நேரில் சந்தித்தனர்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்குமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

    இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கும் தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது.

    • சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது இடஒதுக்கீடு பற்றி பேசவில்லை.
    • சித்தராமையா தலை கணம் பிடித்த அரசியல்வாதி.

    கொள்ளேகால் :

    சாம்ராஜ்நகருக்கு நேற்று முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சித்தராமையா ஒரு தலை கணம் பிடித்த அரசியல்வாதி. முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளிவிட்டு தான் முதல்-மந்திரி அரியணையில் அமர்ந்துவிட வேண்டும் என்று சித்தராமையா கணக்கு போட்டுள்ளார். அவர் தான் மற்றவர்களுக்கு தலைவலியாக இருக்கிறார்.

    சாதிகளின் பெயரால் சித்தராமையா அரசியல் செய்வது வெட்கக்கேடானது. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது இடஒதுக்கீடு பற்றி பேசவில்லை. அவர் எந்த சாதியினருக்கு இடஒதுக்கீடு கொடுக்கவில்லை. ஆனால் தற்போது அவர் இடஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தும்படி ஒவ்வொரு சமுதாயத்தினரையும் ஊக்குவித்து வருகிறார்.

    இடஒதுக்கீடு பற்றி சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்ய வேண்டுமோ?, அதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு செய்து வருகிறது.

    அரசியல் ஆக்கவில்லை

    ராய்ச்சூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையா, ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை அவமதிக்கும் வகையில் பேசினார். இது கண்டிக்கத்தக்கது. இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சித்தராமையா மன்னிப்பு கேட்கும் வரை நான் ஓய மாட்டேன். இதை நான் அரசியல் ஆக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதாவினரை போல் நாங்கள் தரம் தாழ்ந்து பேச மாட்டோம்.
    • சித்தராமையாவை நாங்கள் தோற்கடிக்க வேண்டியது இல்லை.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தோற்கடிக்க அந்த தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும் என்று சிலர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அந்த கட்சியுடன் நாங்கள் எந்த விதமான ரகசிய கூட்டணியும் வைத்துக்கொள்ளவில்லை.

    அது தொடர்பாக நாங்கள் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. சித்தராயைா கோலார் உள்பட எங்கு போட்டியிட்டாலும் சரி, அவருக்கு எதிராக நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து செயல்பட மாட்டோம். பா.ஜனதாவினரை போல் நாங்கள் தரம் தாழ்ந்து பேச மாட்டோம். நாங்கள் என்ன செய்தாலும், வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பது மக்கள் தான்.

    கோலாரை பொறுத்தவரையில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஜனதா தளம் (எஸ்) சார்பில் யாரை நிறுத்துவது என்பதை நாங்கள் முடிவு செய்தோம். சித்தராமையாவுக்கு எதிராக போட்டியிட எங்கள் கட்சியில் தகுதியான வேட்பாளர்கள் உள்ளனர். சித்தராமையாவை நாங்கள் தோற்கடிக்க வேண்டியது இல்லை. கோலாரில் காங்கிரஸ் கட்சியினரே அவரை தோற்கடிப்பார்கள். வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து எங்கள் கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.

    பா.ஜனதாவினர் பள்ளி கட்டிடங்களுக்கு காவி நிறத்தை பூச திட்டமிட்டுள்ளனர். இதனால் கற்றலின் முக்கியத்துவம் போய்விடும். மைசூருவில் பஸ் நிறுத்தம், மசூதி போல் கட்டப்பட்டுள்ளதை இடிப்பதாக பிரதாப் சிம்ஹா கூறியுள்ளார். அவர்களுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டி பழக்கமில்லை. இடித்து தான் பழக்கம். மக்களுக்கு நிழல் கொடுப்பது தான் முக்கியம். நிழல் கொடுக்க பஸ் நிறுத்த நிழற்குடை எப்படி இருந்தால் என்ன?.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • பா.ஜனதா அரசை மக்கள் 40 சதவீத கமிஷன் அரசு என்று மக்களே சொல்கிறார்கள்.
    • லஞ்ச அரசு என்று விதான சவுதா சுவர்கள் கூறுகின்றன.

    பெங்களூரு :

    கொப்பலில் நேற்று காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

    1991-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டேன். அப்போது ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் அப்போது நான் தோல்வி அடைந்தேன். அதில் தோல்வி அடைந்ததால் எனக்கு பயன் ஏற்பட்டது. அதனால் தான் நான் முதல்-மந்திரி ஆனேன். கொப்பலில் பேசிய பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடப்பதாக கூறியுள்ளார்.

    ஆனால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கொள்ளை அடிப்பதை தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. தங்களது இரட்டை என்ஜின் அரசு என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஆனால் கொப்பல் நீரேற்று திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்ததா?. மராட்டியத்திலும் பா.ஜனதா அரசு தான் உள்ளது. அந்த அரசிடம் இதுபற்றி பேசாதது ஏன்?.

    இந்த பா.ஜனதா அரசை மக்கள் 40 சதவீத கமிஷன் அரசு என்று மக்களே சொல்கிறார்கள். இது லஞ்ச அரசு என்று விதான சவுதா சுவர்கள் கூறுகின்றன. பணி நியமனங்கள், பணி இடமாற்றங்கள் என அனைத்திலும் லஞ்சம் வாங்கப்படுகிறது. பெலகாவியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல், 40 சதவீத கமிஷன் விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மந்திரி ஈசுவரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

    நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு தலா 7 கிலோ இலவச அரிசி வழங்கினேன். அதை பா.ஜனதா அரசு 5 கிலோவாக குறைந்துவிட்டது. எனது ஆட்சியில் 15 லட்சம் வீடுகளை ஏழை மக்களுக்கு கட்டி கொடுத்தேன். கல்யாண-கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு இந்த அரசு எதையும் செய்யவில்லை.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அங்கு அரசு துறைகளில் 35 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பினோம். அந்த பகுதிக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறப்பு அந்தஸ்தை பெற்று கொடுத்தோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்த கல்யாண கர்நாடக பகுதிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜனதா மக்களுக்கு 600 வாக்குறுதிகளை அளித்தது.

    அதில் இதுவரை 25 வாக்குறுதிகள் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பா.ஜனதாவில் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். சொல்வது போல் பசவராஜ் பொம்மை செயல்படுகிறார். பிரதமர் மோடியின் முன்பு அவர் கைகட்டி நிற்கிறார்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    • காங்கிரசின் பஸ் யாத்திரை, வருகிற 29-ந் தேதி நடைபெற உள்ளது.
    • ஒட்டுமொத்த பா.ஜனதா அரசும் ஊழலில் மூழ்கியுள்ளது.

    பெலகாவி :

    காங்கிரஸ் கட்சியின் பஸ் பயணம் நேற்று பெலகாவியில் தொடங்கியது. சிக்கோடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

    கர்நாடகத்தில் இருக்கும் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அதற்காக நாங்கள் இந்த பயணத்தை தொடங்கியுள்ளோம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள், கர்நாடக பா.ஜனதா ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள், தவறுகளை மக்களிடம் எடுத்து கூறுவோம். ஒட்டுமொத்த பா.ஜனதா அரசும் ஊழலில் மூழ்கியுள்ளது.

    அதனால் இந்த அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் முறைகேடுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதனால் இந்த அரசு, கர்நாடகத்திற்கு ஒரு சாபக்கேடாக உள்ளது. இந்த அரசை அகற்றியே தீருவோம். ஊழலின் தலைநகரமாக கர்நாடகத்தை பா.ஜனதா மாற்றிவிட்டது. இந்த நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களுக்கு நல்லாட்சி நிர்வாகம் வழங்கப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி நிர்வாகத்தை வழங்குவோம் என்று நாங்கள் மக்களிடம் எடுத்து சொல்கிறோம்.

    இவ்வாறு சித்தராமையா பேசினார்.

    நேற்று தொடங்கியுள்ள காங்கிரசின் பஸ் யாத்திரை, வருகிற 29-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த பயணத்தை டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகிய இருவரும் சேர்ந்து மேற்கொள்கிறார்கள். அதன்பிறகு வருகிற பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் அவர்கள் 2 பேரும் தனித்தனியாக பஸ் யாத்திரையை தொடங்க உள்ளனர். வட கர்நாடகத்தில் சித்தராமையாவும், தென் கர்நாடகத்தில் டி.கே.சிவக்குமாரும் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். மூன்று முக்கியமான கட்சிகளுமே பயணத்தை மேற்கொண்டு வருவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    • பெண்களிடம் அளித்த எந்த வாக்குறுதிகளையும் பா.ஜனதா நிறைவேற்றவில்லை.
    • பெண்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் பா.ஜனதா இல்லை.

    பெங்களூரு :

    பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மகளிர் மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியதாவது:-

    மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது பெண்களுக்காக 21 திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்படும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறினர். மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து 3½ ஆண்டுகள் ஆகி விட்டது. தேர்தலின் போது பெண்களிடம் அளித்த எந்த வாக்குறுதிகளையும் பா.ஜனதா நிறைவேற்றவில்லை. 3½ ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கென எந்த திட்டத்தையும் கொண்டு வந்து பா.ஜனதா அரசு செயல்படுத்தவில்லை.

    தற்போது வீட்டுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்த பின்பு, இத்தனை ஆண்டுகளாக தூங்கி கொண்டு இருந்த அரசு, பட்ஜெட்டில் பெண்களுக்கென திட்டங்களை அறிவிப்போம் என்று கூறுகிறார்கள். ஒட்டு மொத்தமாக 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 600 வாக்குறுதிகளை மக்களுக்கு பா.ஜனதா கொடுத்திருந்தது. அவற்றில் 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி இருக்கிறார்கள். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தேன்.

    இந்த நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பெண்களுக்கான வேலை வாய்ப்பை 30 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்தி இருந்தோம். பெண்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் பா.ஜனதா இல்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

    வேலை வாய்ப்பு, அரசியல் ஆகியவற்றில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சட்டசபை தேர்தல், மேல்-சபை தேர்தலிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு சித்தராமையா பேசினார்.

    • நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சிக்கிறேன்.
    • பா.ஜனதா பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை

    உப்பள்ளி:

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் சுமார் 1,450 குக்கிராமங்கள் வருவாய் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி நில உரிமை பத்திரத்தை வழங்கியுள்ளார். அந்த குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றும் முயற்சி காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் பிரதமர் மோடியை அழைத்து, இந்த பணியை பா.ஜனதா அரசு செய்தது போல் அக்கட்சியினர் வெளிக்காட்டி கொள்கிறார்கள்.

    அதாவது சமையல் செய்தவர்கள் நாங்கள், பா.ஜனதாவினர் உணவு சாப்பிடுகிறார்கள். சேவாலால் ஜெயந்தி விழாவை அரசு சாா்பில் நடத்தும் முடிவு எனது ஆட்சியின்போது எடுக்கப்பட்டது. லம்பானி சமூக மேம்பாட்டு வாரியத்தை புதிதாக உருவாக்கினேன். அந்த லம்பானி மக்களின் மேம்பாட்டிற்கு பா.ஜனதா ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் வெறும் ரூ.30 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு நில உரிமை பத்திரத்தை நாங்கள் தயாரித்தோம். அதை பா.ஜனதாவினர் தற்போது வழங்குகிறார்கள்.

    எனது ஆட்சியில் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. அந்த தொகை தற்போது ரூ.42 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால் ரூ.28 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளனர். மீதி தொகையை வேறு துறைகளுக்கு ஒதுக்கிவிட்டனர்.

    பா.ஜனதா பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. பிரதமர் மோடி பொய் பேசுகிறார். மோடியை கண்டால் எனக்கு பயம் இல்லை. ஆனால் என்னை பார்த்து மோடி பயப்படுகிறார். நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சிக்கிறேன். உண்மையை மக்களுக்கு சொல்கிறேன். மோடி பிரசாரம் செய்வதால் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றுவிடாது. அவர் கூறும் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    • ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார்.
    • ஊழலை ஒழிப்பதாக கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கூறியது.

    பெங்களூரு :

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நாட்டை 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், எல்லாவற்றிலும் ஊழல் செய்துள்ளது. ஊழல் காங்கிரசாரின் ரத்தத்தில் கலந்துள்ளது. தங்களை போலவே பா.ஜனதாவினரும் ஊழல் செய்வார்கள் என்று காங்கிரசார் கருதி எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். ஊழலை ஒழிப்பதாக கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கூறியது.

    ஆனால் 5 ஆண்டுகள் ஆட்சி செய்த அக்கட்சியினர், ஊழல்களை செய்தனர். ஊழலுக்கு எதிரான லோக்அயுக்தா அமைப்பை முடக்கினர். ஊழல்களை பாதுகாக்க ஊழல் தடுப்பு படையை ஆரம்பித்தனர். நாங்கள் ஊழல்களை செய்திருந்தால், லோக்அயுக்தா அமைப்புக்கு அதிகாரம் வழங்கி இருக்க மாட்டோம். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அதன் அடிப்படையில் நாங்கள் ஊழலை ஒழிக்க பாடுபட்டு வருகிறோம். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது (2013-18) ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    பெங்களூருவில் 900 ஏக்கர் நிலத்தை அரசின் அரசாணையில் இருந்து விடுவித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் 50 சதவீத கமிஷன் வாங்கியுள்ளனர். ஆனால் எங்கள் அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை காங்கிரசார் கூறுகிறார்கள். ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்குவதாக கூறி இந்திரா உணவகங்களை தொடங்கினர். ஆனால் அதிலும் ஊழல் செய்துள்ளனர். குப்பை கழிவுகளை நிர்வகிப்பதில் ரூ.1,000 கோடி ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பதிலளிக்க வேண்டும்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.

    • பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம்.
    • தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.

    மண்டியா :

    மண்டியாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, மண்டியாவில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரசை வெற்றி பெற வைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியையே வெற்றி பெற வைத்தீர்கள். சூரியன் கிழக்கில் உதிப்பது எவ்வளவு உண்மையோ அதே போல் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதும் உண்மையே. மக்களின் மனநிலையை அறிந்து நான் இதை கூறுகிறேன்.

    காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது, அதில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் இல்லையா?. அதனால் இந்த மாவட்டத்தில் இருந்து குறைந்தது இடங்களில் ஆவது காங்கிரசை வெற்றி பெற வையுங்கள். மண்டியா விவசாயிகளுடன் நாங்கள் உள்ளோம். உங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம். தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.

    பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம். இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு இடையே தான் போட்டி. 123 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று ஜனதா தளம் (எஸ்) சொல்கிறது. நான் அந்த கட்சியில் இருந்தபேது அந்த எண்ணிக்கையை தொட முடியவில்லை. 59 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றோம். அதனால் அந்த கட்சி ஆட்சிக்கு வராது. அதற்கான வாய்ப்பும் இல்லை.

    இந்த முறை அந்த கட்சி அதிகபட்சமாக 20 தொகுதிகளில் வெற்றி பெறலாம். இதுவே அதிகம். இதை வைத்து கொண்டு அக்கட்சி ஆட்சிக்கு வர முடியுமா?. மதவாத கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு நாங்கள் கடந்த முறை வாய்ப்பு அளித்தோம். குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கினோம். ஆனால் எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ளாமல், அவர் வெஸ்ட் என்ட் ஓட்டலில் இருந்தபடி ஆட்சி செய்தார். அதனால் 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு சென்றனர். கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

    ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு நான் தான் காரணம் என்று குமாரசாமி அடிக்கடி சொல்கிறார். அப்படி என்றால் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் விலகினார்களே, அதற்கு யார் பொறுப்பு?. நாங்கள் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2,000 வழங்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். இதை கண்டு பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் பயந்துபோய் உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மண்டியா சர்க்கரை ஆலையை நவீனமயம் ஆக்குவோம். அதை அரசே தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு சித்தராமையா பேசினார்.

    • பிரதமர் பதவியே கொடுத்தாலும் பா.ஜ.கவுக்கு செல்ல மாட்டேன் என்றா சித்தராமையா
    • குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படும்.

    பெங்களூரு:

    ராமநகர் மாவட்டம் மாகடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    என்னை இந்து விரோதி என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். அக்கட்சியைச் சேர்ந்த சி.டி.ரவி என்னை சித்ராமுல்லா கான் என்று சொல்கிறார். மகாத்மா காந்தி இந்து அல்லவா? அவரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை கொண்டாடுபவர்கள் இந்துக்களா?

    பா.ஜனதாவினருக்கு மரியாதை இல்லை. அவர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு மரியாதை உள்ளதா? நான் முதல் மந்திரியாக இருந்தபோது அன்ன பாக்கிய திட்டத்தை அமல்படுத்தினோம். அனைத்து ஏழைகளுக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டது.

    கிருஷி பாக்கிய, ஷீர பாக்கிய உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினேன். நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். பாலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்துவோம்.

    எனக்கு ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ வழங்கினாலும் பா.ஜ.க.வுக்கு செல்ல மாட்டேன். எனது பிணம் கூட பா.ஜ.க.வுக்கு செல்லாது. ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு கொள்கை, கோட்பாடுகள் இல்லை. ஆட்சி அதிகாரத்திற்காக பா.ஜ.க.வுடன் அக்கட்சி செல்லும். ஆட்சி அதிகாரத்திற்காக அக்கட்சியினர் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்வார்கள் என்றார்

    • கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கும்.
    • எடியூரப்பாவுக்கும், பசவராஜ் பொம்மைக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யக்கூறி நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள். ஆனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையோ, கட்சி மேலிடமோ ஆர்வம் காட்டவில்லை. இதன் ரகசியம் என்ன என்று எனக்கு தெரியும்.

    எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்குமாறு கேட்டிருந்தார். தற்போது மந்திரிசபையை விரிவாக்கம் செய்தால், எடியூரப்பாவின் மகனுக்கு மந்திரி பதவியை கொடுக்க வேண்டி இருக்கும் என்ற காரணத்தால் பா.ஜனதாவினர் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யாமல் இருக்கிறார்கள். இதன்மூலம் பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.

    ஆர்.எஸ்.எஸ்.சின் பேச்சை கேட்டுக்கொண்டு எடியூரப்பாவை தரம் தாழ்த்த பார்க்கிறார்கள். தற்போது எடியூரப்பாவுக்கும், பசவராஜ் பொம்மைக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் எடியூரப்பாவின் மகனுக்கு மந்திரி பதவி கொடுக்காதது தான். கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக மந்திரிசபையில் 6 இடங்களை காலியாக வைத்திருக்கும் பசவராஜ் பொம்மை, முக்கியமான துறைகளை தன்னிடமே வைத்திருப்பது ஏன்?.

    ஏனெனில் அப்போதுதான் அவரால் பல்வேறு ஊழல்களில் ஈடுபட முடியும். மொத்தம் உள்ள துறைகளில் 4-ல் ஒரு பங்கு துறைகள் பசவராஜ் பொம்மையிடமே உள்ளன. அவற்றை விட்டுக்கொடுக்க அவரால் முடியாது. பசவராஜ் பொம்மை, கட்சி மேலிட தலைவர்களிடம் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அழுத்தம் கொடுத்தால் கண்டிப்பாக அனுமதி கிடைக்கும். ஆனால் அதை அவர் செய்ய மாட்டார். கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகத்தில் பெரும் ஊழல், மதவாத அரசு உள்ளது.
    • பா.ஜனதாவால் அடிமட்டத்தில் உள்ள சமூகங்களுக்கு நல்லது நடக்காது.

    கதக் :

    காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டம் கதக்கில் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

    கர்நாடகத்தில் பெரும் ஊழல், மதவாத அரசு உள்ளது. பா.ஜனதாவால் அடிமட்டத்தில் உள்ள சமூகங்களுக்கு நல்லது நடக்காது. ஆபரேஷன் தாமரை மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி சட்டவிரோதமாக பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. பெட்ரோலிய பொருட்கள் விலை, சிமெண்டு உள்பட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது.

    திப்பு சுல்தானை போல் சித்தராமையா கொல்ல வேண்டும் என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார். இத்தகைய பா.ஜனதா கட்சிக்கு நீங்கள் ஓட்டு போட வேண்டுமா?. மக்களின் ஆதரவு உள்ள வரை என்னை யாராலும் ஒழிக்க முடியாது. அஸ்வத் நாராயண் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது விவசாய கடன்களை தள்ளுபடி செய்தேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்குவதாக நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு சித்தராமையா பேசினார்.

    ×