என் மலர்
முகப்பு » சோளிங்கர்
நீங்கள் தேடியது "சோளிங்கர்"
- சோளிங்கர் என அழைக்கப்படும் சோழசிங்கபுரம் நரசிம்மர் பெயரால் அமைந்ததாகும்.
- இவர் நான்கு கரஙக்ளுடன் சதுர்புஜ ஆஞ்சநேயராகக் காட்சியளிக்கின்றார்.
யோக நரசிம்ம சுவாமி வீற்றிருக்கும் திருப்பதிகளில் சோளிங்கர் உயர்ந்ததாக கருதப்படுகிறது.
சோளிங்கர் என அழைக்கப்படும் சோழசிங்கபுரம் நரசிம்மர் பெயரால் அமைந்ததாகும்.
இங்கு இரண்டு மலைகள் உள்ளன. பெரிய மலை மீத நரசிம்ம சுவாமி யோக நரசிம்மராக விளங்குகிறார்.
பின்கரங்களில் சங்க சக்கரம் விளங்க, முன் கரங்களில் சிம்மகர்ண முத்திரைகளைக் கொண்டுள்ளார்.
இவருக்கு நேர் எதிரிலுள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் உள்ளார்.
இவர் நான்கு கரஙக்ளுடன் சதுர்புஜ ஆஞ்சநேயராகக் காட்சியளிக்கின்றார்.
இது சிறந்த பிரார்த்தனைப் பதியாகும். இது முன்னாளில் 'கடிகை' என்று அழைக்கப்பட்டது.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகளை செலுத்துகின்றனர்.
×
X