என் மலர்
நீங்கள் தேடியது "ஜான்விகபூர்"
- விருந்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- விருந்து ஜூன் 1-ந் தேதி இத்தாலி போர்டோ பினாவில் நிறைவடைந்தது.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் ஜூலை 12-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருமணத்திற்கு முன்னோட்ட நிகழ்ச்சிகள் குஜராத் ஜாம்ஷெட்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக நடந்தது. இதில் இந்திய திரை உலகினர் அனைவருமே பங்கேற்றனர்.
இந்நிலையில் திருமணத்தின் 2-வது முந்தைய விருந்து இத்தாலி, பிரான்ஸ் கப்பலில் வைத்து நடந்தது. இதில் திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விருந்தில் பங்கேற்ற ஜான்விகபூர் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விருந்து நிகழ்ச்சியில் ஜான்விகபூர் காதலன் ஷிகர் பகாரியாவுடன் நடந்து வருவது மற்றும் கடற்கரை அழகை ரசிப்பது என அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மே 29-ந் தேதி 800 விருந்தினர்கள் இத்தாலியில் இருந்து பிரான்சின் தெற்கே 4380 கிலோ மீட்டர் தூரம் சென்று விருந்து நிகழ்ச்சியை கொண்டாடினர். மே 29-ந் தேதி தொடங்கிய விருந்து ஜூன் 1-ந் தேதி இத்தாலி போர்டோ பினாவில் நிறைவடைந்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழில் வெளியான கோலாமாவு கோகிலா இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
- இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஜான்விகபூர் நடித்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த "கோலமாவு கோகிலா" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சாதாரண குடும்பம் எப்படி போதை மருந்தை கடத்துகிறார்கள் என்ற சுவாரஸ்யமான கதையமைப்புடன் உருவாகியிருந்த இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
சித்தார்த் சென் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். "குட் லக் ஜெர்ரி" என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராயின் கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. "குட் லக் ஜெர்ரி" திரைப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று படக்குழு இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தமிழில் "கோலமாவு கோகிலா" ஹிட்டானதைத் தொடர்ந்து ஹிந்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
- தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை ஜான்வி அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.
- இவர் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் 'தடக்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இவர் தனது நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.
இவர் நடித்துள்ள குட்லக் ஜெரி ஜுலை 29-ஆம் தேதி வெளியாகவுள்ளதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி உள்ளார். விளம்பர தூதுவரான இவர் பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார். சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளர். இவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது மட்டுமல்லாமல் இணையத்தில் வைரலாகவும் செய்தது.
இந்நிலையில், மும்பையில் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜான்வி கபூர் கருப்பு நிற ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.