என் மலர்
முகப்பு » தமிழ்வாணன்
நீங்கள் தேடியது "தமிழ்வாணன்"
உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சன் - எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனத்துக்கும் அமிதாப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல்முறையாக எஸ்.சூர்யாவுடன் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ என்ற நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்கிறார். தமிழ்வாணன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இந்த படத்தில் இருந்து அமிதாப் பச்சன் விலகியதாக சில வதந்திகள் பரவி வந்தது.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
Message from Actor/Director @iam_SJSuryah ! pic.twitter.com/eAM0IqOg6M
— Done Channel (@DoneChannel1) May 15, 2019
அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். மான்ஸ்டர் படத்தின் ரிலீசுக்கு பிறகு நான் மும்பை சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பேன். நானும், இயக்குநர் தமிழ்வாணனும் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். படப்பிடிப்பின் மூன்றாவது நாளில் அமிதாப் சார் பதிவு செய்த ட்வீட்டில் அவரது அன்பும், எங்களது உழைப்பின் மீது அவர் வைத்திருந்த மரியாதையும் தெரிந்தது. எதிர்மறை விமர்சனங்களை தவிர்க்கவும்.
தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தை திருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
×
X