என் மலர்
முகப்பு » தல 59
நீங்கள் தேடியது "தல 59"
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்திருக்கிறார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59-வது படமாக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.
இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் கே கே மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இவர் இதற்கு முன்பாக உதயம் என்.எச்.4, காஸி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்து பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Nerkonda Paarvai AK59 Thala 59 Ajith Kumar Thala Ajith Boney Kapoor H Vinoth Yuvan Shankar Raja Nirav Shah Pink Remake Vidya Balan Shraddha Srinath Delhi Ganesh Kalki Koechlin Kay Kay Menon நேர்கொண்ட பார்வை பிங்க் தல 59 அஜித் குமார் எச்.வினோத் போனி கபூர் யுவன் ஷங்கர் ராஜா நிரவ் ஷா ஷ்ரத்தா ஸ்ரீநாத் வித்யா பாலன் டெல்லி கணேஷ் கல்கி கோச்லின் கே கே மேனன்
`நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அஜித்துக்காக 3 ஆக்ஷன் கதைகளை தேர்வு செய்து வைத்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். #NerkondaPaarvai #AjithKumar
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் முடிந்தது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.
இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனி கபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
Saw the rushes of #NerkondaPaaravai. Happy... What a performance by Ajith.... I hope he agrees to do Hindi films soon. Have 3 action scripts, hope he says yes to atleast one of them. #NerkondaPaaravai#Ajithkumar
— Boney Kapoor (@BoneyKapoor) April 10, 2019
அஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போனேன், அவர் விரைவில் இந்தி படமொன்றில் நடிப்பார் என்று நம்புகிறேன். அவருக்காக 3 ஆக்ஷன் கதைகளை கேட்டு வைத்திருக்கிறேன். அதில் ஒன்றுக்காவது அவர் சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan #BoneyKapoor
Nerkonda Paarvai AK59 Thala 59 Ajith Kumar Thala Ajith Boney Kapoor H Vinoth Yuvan Shankar Raja Nirav Shah Pink Remake Vidya Balan Shraddha Srinath Delhi Ganesh Kalki Koechlin நேர்கொண்ட பார்வை பிங்க் தல 59 அஜித் குமார் எச்.வினோத் போனி கபூர் யுவன் ஷங்கர் ராஜா நிரவ் ஷா ஷ்ரத்தா ஸ்ரீநாத் வித்யா பாலன் டெல்லி கணேஷ் கல்கி கோச்லின்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான கல்கி கோச்லின் தமிழில் அறிமுகமாகிறார். #NerkondaPaarvai #AjithKumar
அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் கல்கி கோச்லின் ஒரு பாடலுக்கு நடனமாடுவதன் மூலம் தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான `பிங்க்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கு ஏற்றவாறு வினோத் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் வித்யா பாலனின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan #KalkiKoechlin
Nerkonda Paarvai AK59 Thala 59 Ajith Kumar Thala Ajith Boney Kapoor H Vinoth Yuvan Shankar Raja Nirav Shah Pink Remake Vidya Balan Shraddha Srinath Delhi Ganesh Kalki Koechlin நேர்கொண்ட பார்வை பிங்க் தல 59 அஜித் குமார் எச்.வினோத் போனி கபூர் யுவன் ஷங்கர் ராஜா நிரவ் ஷா ஷ்ரத்தா ஸ்ரீநாத் வித்யா பாலன் டெல்லி கணேஷ் கல்கி கோச்லின்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகி வரும் `நேர்கொண்ட பார்வை’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #NerkondaPaarvai #AjithKumar
அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
இது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
It is officially announced by Mr Boney Kapoor that the release date of his Tamil Production @nerkondapaarvai is confirmed for August 10th @thisisysr@ProRekha#DirVinoth#NerkondapaarvaifromAug10
— Suresh Chandra (@SureshChandraa) March 25, 2019
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக படம் மே 1-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவித்திருந்தார்கள். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் `நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் - வித்யா பாலனுக்கு ஒரு காதல் பாடல் ஒன்று இருக்கிறதாம். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan
அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
இது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. `பிங்க்’ படத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தை இந்த படத்தில் வடிவமைத்துள்ளார் வினோத். அந்த கேரக்டரில் தான் வித்யா பாலன் நடிக்கிறார். இதில் அஜித்-வித்யா பாலனுக்காக ஒரு காதல் பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய்.
பி.எஸ்.மித்ரன் - சிவகார்த்திகேயன் படத்தின் இசைக்காக துபாய் சென்றுள்ள யுவன், சென்னை திரும்பியதும் இந்தப் பாடலுக்கான பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் நடிப்பில் உருவாகும் பிங்க் ரீமேக் கதையை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளதாக ஷ்ரத்தா ஸ்ரீனாத் கூறியுள்ளார். #NerkondaPaarvai #Thala59 #AjithKumar
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
நேர்கொண்ட பார்வை என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. பிங்க் கதையை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்காக சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று படத்தில் டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
படம் அஜித் பிறந்தநாளான மே1-ந் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட வேகமாக சென்றாலும், விஸ்வாசம் படத்திற்கு இப்போது வரை, வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருக்கிறது.
இதனால் மே 1-ந் தேதி வெளியீட்டுக்கு பதிலாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். #NerkondaPaarvai #Thala59 #AjithKumar #ThalaAjith #VidyaBalan #ShraddhaSrinath
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் நடிக்க பிரபல மூத்த நடிகர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thala59 #AjithKumar
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
தற்போது இந்த கூட்டணியில் நடிகர் டெல்லி கணேஷ் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ‘ஜனா’, ‘பகைவன்’, ‘தொடரும்‘ ஆகிய படங்களில் டெல்லி கணேஷ் மற்றும் அஜித் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது, ‘தல 59’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இந்த படம் மே1-ந் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று ரிலீசாகும் என்று செய்திகள் வருகின்றன. மே 1-ந் தேதி சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த `மிஸ்டர்.லோக்கல்' படமும் ரிலீசாக இருக்கிறது. இதன் மூலம் அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் நேரடியாக மோதும் வாய்ப்பு உருவாகி உள்ளது. #Thala59 #AjithKumar #ThalaAjith #VidyaBalan #ShraddhaSrinath #DelhiGanesh
எச்.வினோத் இயக்கத்தில் தல 59 படத்துக்காக ஐதராபாத் சென்றுள்ள அஜித், படத்திற்காக 20 நாட்களை கால்ஷீட்டாக கொடுத்துள்ளார். #Thala59 #AjithKumar #ThalaAjith
எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்தான் இது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகளில் அஜித் இன்னும் கலந்துகொள்ளவில்லை.
இந்தப் படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகள் மட்டும் இதுவரை படம் பிடிக்கப்பட்டு வந்தன. அஜித் இல்லாமலேயே மூன்று நடிகைகளை வைத்தே படத்தின் 25 சதவீத படப்பிடிப்பு பணிகளை வினோத் முடித்துவிட்டார். நாளை முதல் 2-வது கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
அஜித்தும் படப்பிடிப்பில் சேர இருக்கிறார். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கும் அஜித் இதற்காக தாடி வளர்த்து வருகிறார். மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith #ShraddhaSrinath #VidyBalan
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தின் மூலம் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி தமிழில் அறிமுகமாகவிருப்பதாக கூறப்படுகிறது. #Thala59 #JhanviKapoor
இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோது அஜித்தை வைத்து படம் தயாரிக்கவும், அந்த படத்தில் தங்கள் மகள் ஜான்வியை நடிக்க வைக்கவும் விருப்பப்பட்டுள்ளார்.
அவர் ஆசையை நிறைவேற்றும் வகையில் முதன்முறையாக போனி கபூர் தயாரிப்பில் ரீமேக் படத்தில் அஜித் நடிக்கிறார். இந்தி பிங்க் படத்தின் கதையில் அஜித்துக்காக சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார். வித்யா பாலனுக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், இதில் இன்னொரு மாற்றமாக அஜித்துக்கு ஒரு மகள் இருப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மகள் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கிறார் என்றும் செய்தி வருகிறது.
தடக் என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமான ஜான்விக்கு தமிழில் இது முதல் படமாக அமைய இருக்கிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith #JhanviKapoor
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு, இந்தியில் ஷ்ரத்தா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார். #Thala59 #AK59 #ShraddhaSrinath
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 59 படத்தை வரும் கோடை விடுமுறைக்கே ரிலீஸ் செய்வதற்காக பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு என தென் இந்திய மொழிகளில் நடித்து வந்த டாப்சி இந்தியில் அறிமுகமாகி நடித்து வந்தாலும், அவருக்கு பிங்க் திரைப்படம் தான் பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்தியின் முன்னணி கதாநாயகியாகவும் மாற்றியது.
There were rumours and speculations on the internet that I'm part of #AK59. Glad to announce today that those rumours are actually true. I am INDEED part of this incredible project. :)
— Shraddha Srinath (@ShraddhaSrinath) January 28, 2019
இந்தியில் அமிதாப் பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். டாப்சி நடித்த வேடத்தில் ஷ்ரத்தா கதாநாயகியாக நடிக்கிறார். தான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு, டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Good luck 🤗 hope it becomes as significant a film in your career as it became in mine :) 💓
— taapsee pannu (@taapsee) January 28, 2019
“குட் லக். எனக்கு முக்கியமான படமாக இது அமைந்தது போல் உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் என நம்புகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி சில நாள்கள் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற உள்ளதால் படக்குழு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Thala59 #AK59 #ShraddhaSrinath
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் பணிபுரிபவர்கள் யார் யார் என்பது பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #AK59 #Thala59 #AjithKumar
`விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தல 59 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து போனி கபூர் கூறும் போது, வித்யாபாலன் தமிழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. அவர் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். அவருக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கோகுல் சந்திரன் படத்தொகுப்பையும், திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளையும், கே.கதிர் கலை பணிகளையும், பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பையும் கவனிக்கிறார்கள்.
அஜித் பற்றி போனி கபூர் கூறும்போது, “இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. ‘பிங்க்’ படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்பதால் அதனை உருவாக்குகிறோம். அத்துடன் அஜித்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைவது மகிழ்ச்சி. பிங்க் ரீமேக்கை மே 1-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அஜித்துடனான இரண்டாவது படம் 2020 ஏப்ரலில் திரைக்கு வரும். எச்.வினோத் போன்ற சிறந்த இயக்குநர் அமைந்ததில் மகிழ்ச்சி என்றார். #AK59 #Thala59 #AjithKumar #VidyaBalan #ShraddhaSrinath
எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை உறுதி செய்த வித்யா பாலன், தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். #Thala59 #PinkRemake #VidyaBalan
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் வித்யா பாலன் எப்போதும் கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இந்தி சினிமாவில் உண்டு.
முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார். ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது என்பதையும் வழக்கமாகவே வைத்திருந்தார். மூன்றாம் பிறை படம் இந்தியில் சத்மா என்ற பெயரில் 1983-ம் ஆண்டு உருவானது. அந்தப் படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் செய்வதற்காக ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலனிடம் பேசப்பட்டது. ஆனால் அந்தப் படத்தை ரீமேக் செய்து அதன் தரத்தை குறைத்துவிடக் கூடாது என அதில் நடிக்க மறுத்தார்.
தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் எவ்வாறு நடிக்கச் சம்மதித்தேன் என்பதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “இந்தப் படத்தில் நான் சிறிய வேடத்தில் நடிக்கிறேன். போனி கபூர் தயாரிக்கிறார். அவர்தான் சிறப்பு தோற்றம் தான் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் உங்களுக்காக நடிக்கச் சம்மதிக்கிறேன் என்றேன். எனக்குப் படங்களை ரீமேக் செய்வது பிடிக்காது. முழுக்க முழுக்க போனி கபூருக்காகவே நடிக்கிறேன்” என்று வித்யா பாலன் கூறியுள்ளார். #Thala59 #AjithKumar #PinkRemake #VidyaBalan
×
X