என் மலர்
முகப்பு » தளபதி 64
நீங்கள் தேடியது "தளபதி 64"
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது பற்றி சில தகவல்கள் வைரலாகி வருகிறது.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. பொதுவாக விஜய், அஜித் ஆகிய இரு நடிகர்களுமே ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே அவர்களின் அடுத்த படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாக தொடங்கும்.
இருவருமே அதிக அளவில் இளம் இயக்குனர்களுக்கும் புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்கள். ஆனால் சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் இவர்களை அணுக முடியாத சூழல் இருந்தது. விஜய் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்களுக்கு சில இளம் இயக்குனர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அவரிடமும் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜிடமும் விஜய் கதை கேட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த வரிசையில் இமைக்கா நொடிகள் அஜய் ஞானமுத்துவும் இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அஜய் ஞானமுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்காக தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `சர்கார்' படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்ததாக அட்லீ மற்றும் மோகன் ராஜாவுடன் அடுத்தடுத்த படங்களில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay63
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `சர்கார்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. எப்போதுமே ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போதே தனது அடுத்த படத்தை முடிவு செய்துவிடுவார் விஜய்.
அப்படி அடுத்து அவர் 3 வது முறையாக அட்லீயுடன் இணைய இருக்கிறார் என செய்தி வருகிறது. விஜய்- அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் என 2 படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே காப்பி அடிக்கப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டாலும் விஜய்க்கு வெற்றி படங்களாக அமைந்தன.
எனவே விஜய் 3 வது முறையாக அட்லீயுடன் இணைய சம்மதித்திருக்கிறார். அதற்கு அடுத்து மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Vijay63 #Atlee #MohanRaja
×
X