என் மலர்
முகப்பு » துப்பறிவாளன்
நீங்கள் தேடியது "துப்பறிவாளன்"
துப்பறிவாளன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான அனு இம்மானுவேல், என்னை நான்கு பேர் காதலித்தார்கள் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். #AnuEmmanuel
தெலுங்கில் முன்னணி நடிகையான அனு இம்மானுவேல் விஷாலின் துப்பறிவாளன் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அவருக்கு கிடைத்த நல்ல பெயர் தனுஷ் இயக்கும் பிரம்மாண்ட சரித்திர படத்தில் வாய்ப்பு வாங்கி தந்துள்ளது.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் காதல், திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘நான் படித்த காலத்தில் 4 பேர் என்னை காதலிப்பதாக கூறி இருக்கிறார்கள். நான் யாரையும் காதலிக்கவில்லை. காதல் என்பது அற்புதமான உணர்வு.
இரண்டு இதயங்களை அழகாக பிணைக்கும் பிணைப்பு. எதிர்காலத்தில் நான் காதலித்து தான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று கூறி உள்ளார்.
×
X