என் மலர்
நீங்கள் தேடியது "நமஸ்காரம்"
- கணபதியை வணங்கி விட்டு சண்டிகேஸ்வரரையும், நந்தீஸ்வரரையும் வணங்கவும்.
- பிரசித்திப் பெற்ற கோவில் ஸ்தலங்களில் பொதுவாக சிவன் ஸ்தலங்களில் தீர்த்த குளம் இருக்கும்.
பிரசித்திப் பெற்ற கோவில் ஸ்தலங்களில் பொதுவாக சிவன் ஸ்தலங்களில் தீர்த்த குளம் இருக்கும்.
கோவில் உள்ளே செல்லும் முன்பு தீர்த்த குளத்தில் கை கால்களை சுத்தம் செய்து கொண்டு அந்த தீர்த்தத்தை தலையிலும் தெளித்துக் கொள்ளவும், பிறகு கோபுரத்தை பார்த்து வணங்கவும்.
கோபுரம் தரிசனம் முடித்துக் கொண்டு கணபதியை வணங்கவும், கணபதியை வணங்கி விட்டு சண்டிகேஸ்வரரையும், நந்தீஸ்வரரையும் வணங்கவும்.
சிவாலயத்தில் பலி பீடத்தருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும்.
3, 4, 7, 9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம்.
வடபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக்கூடாது.
ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.
கிழக்கு நோக்கிய சன்னதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.
தெற்கு, மேற்கு நோக்கிய சன்னிதிகளில் பலி பீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.
வடக்கு நோக்கிய சன்னிதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.
சூரிய கிரகணத்தின்போதும், சங்கராந்தி காலத்திலும் மேற்கே கால் நீட்டி நமஸ்கரிக்கலாகாது.
அஷ்டாங்க நமஸ்காரத்தில் முதலில் தலையை வைத்து, மார்பு பூமியில் படும்படி வலக்கையை முன்னும், இடக்கையைப் பின்னும் நேரே நீட்டி, பின்னர் அம்முறையே மடக்கி, வலத்தோளும், இடத்தோளும் தரையில் பொருந்தும்படி கைகளை இடுப்பை நோக்கி நீட்டி, வலக் காதை முதலிலும், இடக்காதைப் பிறகும் பூமியில் படும்படி செய்ய வேண்டும்.