என் மலர்
முகப்பு » நெசவு தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரம் பறிப்பு
நீங்கள் தேடியது "ஹூவாய் பி30 லைட்"
- ரசாயனம் தடவி விற்பனை செய்த 30 கிலோ பச்சை பட்டாணியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- வியாபாரி தப்பியோடி விட்டார்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி பஸ் நிலையம் அருகே உள்ள சந்தை வீதியில் ரசாயனம் கலந்த பச்சை பட்டாணி விற்பனை செய்வதாக ெதரிந்ததையடுத்து பொன்னமராவதி பேரூராட்சி துறை அலுவலர்கள், அங்கு சென்றனர்.
அப்போது அங்கு ரசாயனம் தடவிய பச்சை பட்டாணி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 30 கிலோ பச்சை பட்டாணி பறிமுதல் செய்தனர். மேலும் அதனை விற்பனை செய்த வியாபாரி தப்பியோடி விட்டார். இதையடுத்து பறிமுதல் செய்த பட்டாணியை பேரூராட்சித்துறை அலுவலர்கள்
மற்றும் பணியாளர்கள் அதே பகுதியில் குழிதோண்டி புதைத்தனர். மேலும் சந்தை பகுதியில் உள்ள பொதுமக்கள் ரசாயனம் தடவிய எந்த பொருளையும் வாங்க வேண்டாம் என அறிவுரை கூறி அவ்வாறு விற்பனை செய்தால் உடனடியாக பேரூராட்சி, சுகாதாரத்துறை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.
ஹூவாய் நிறுவனம் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனினை தொடர்ந்து பி30 லைட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #HUAWEIP30Lite
ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் பி30 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.15 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கிரின் 710 சிப்செட், 6 ஜி.பி. ரேம், GPU டர்போ 2.0, ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த EMUI 9.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ மற்றும் 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் பி30 லைட் சிறப்பம்சங்கள்:
- 6.15 இன்ச் 2312x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் 710 12 என்.எம். பிராசஸர்
- ARM மாலி-G51 MP4 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் EMUI 9.0
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், பியல் வைட் மற்று் பீகாக் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.19,990 என்றும் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. #HUAWEIP30Pro
ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் பாரிஸ் நகரில் அறிமுகம் செய்தது.
ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் OLED வளைந்த கிளாஸ் டியூ-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஹைசிலிகான் கிரின் 980 7 என்.எம். பிராசஸர், GPU டர்போ 3.0, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் எமோஷன் யு.ஐ. 9.1 இயங்குதளம் கொண்டிருக்கிறது.
இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை 30 சதவிகிதம் வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மேட் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக லெய்கா பிராண்டிங் கொண்ட நான்கு லென்ஸ் கேமரா இருக்கிறது.
இதில் 40 எம்.பி. RYYB சென்சார், 20 எம்.பி. அல்ட்ரா-வைடு சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், ToF டெப்த் சென்சிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இவை 5x லாஸ்-லெஸ் சூம், 10x ஹைப்ரிட் சூம் மற்றும் 50x டிஜிட்டல் சூம் வசதி கொண்டிருக்கிறது. இந்த கேமரா குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் ISO 409600 ரக புகைப்படங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. சார்ந்த ஹெச்.டி.ஆர். தரத்தில் செல்ஃபி எடுக்கலாம். வளைந்த கிளாஸ் பேக், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ஹூவாய் மேட் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 40 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போனினை 30 நிமிடங்களில் 70% வரை சார்ஜ் செய்திடும். இத்துடன் 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.
ஹூவாய் பி30 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.47 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ OLED ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே மற்றும் DCI-P3 Color Gamut
- ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
- 720 MHz ARM மாலி-G76MP10 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.1
- 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6, OIS
- 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
- 8 எம்.பி 5x டெலிபோட்டோ லென்ஸ், OIS, ToF டெப்த் சென்சார், லேசர் AF, PDAF, CAF, AIS
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- ஹைப்ரிட் டூயல் சிம்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 40 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீத்திங் க்ரிஸ்டர் மற்றும் அரோரா என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூவாய் பி30 ப்ரோ விலை ரூ.71,990 என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
அறிமுக சலுகைகள்:
- ரூ.15,990 மதிப்புள்ள ஹூவாய் வாட்ச் ஜி.டி.யை ரூ.2000க்கு பெறலாம்
- ஆறு மாதங்களுக்கு திரையை மாற்றிக் கொள்ளும் வசதி
- 9 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி
- 5 சதவிகிதம் கேஷ்பேக்
- ரூ.2,200 கேஷ்பேக் வவுச்சர்கள், ஜியோ வழங்கும் இருமடங்கு டேட்டா
- ரூ.5600 மதிப்புள்ள எம்.எம்.டி. கூப்பன்
- ரூ.2,200 மதிப்புள்ள சூம் கார் வவுச்சர்
×
X