என் மலர்
நீங்கள் தேடியது "பாண்டிராஜ்"
- இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர் மற்றும் மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
- இப்படம் குறித்த முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் தற்போது புதிய படப்பிடிப்பில் இறங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று உள்ளது.
இதில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர் மற்றும் மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் குறித்த முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் எனது பாணியில் குடும்பப் படமாக அமையும். இளைஞர்களுக்கு பிடிக்கும் படமாகவும் இது இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிக்கவுள்ளார்.
- படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.
இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.
- நித்யாமேனன் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர் காணலில் அவரது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டார். நித்யாமேனன் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனரான பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.
பாண்டிராஜ் இதற்கு முன் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் பரோட்டா மாஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக விஜய்சேதுபதி பிரத்தியேகமான பயிற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கப்போவதாகவும், வித்தியாசமான கதாப்பத்திரமாக இருக்கும் என நித்யா மேனன் கூறியுள்ளார். நித்யா மேனன் தற்பொழுது ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார்.
- City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார்.
City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி '. இப்படத்தின் படப்பிடிப்பு நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள எளிமையான முறையில் பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.
தனது தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்குகிறார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.
வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும் சென்னையில் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார்.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
- இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயம் ரவி. இவர் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் "காதலிக்க நேரமில்லை" படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ஜெயம் ரவி அடுத்து நடிக்க இருக்கும் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தை அடங்கமறு மற்றும் சைரன் படங்களை தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத வாக்கில் துவங்க இருப்பதாக தெரிகிறது.
இந்த படம் கிராம பின்னணியில் உருவாகும் குடும்ப பொழுதுபோக்கு கதையம்சம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இயக்குநர் பாண்டிராஜ் கடைசியாக இயக்கிய எதற்கும் துணிந்தவன் படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பசங்க, மெரினா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் பாண்டிராஜ்.
- பாண்டிராஜிடம் ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசங்க, மெரினா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இவரிடம் புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த பிரபல ஜவுளிக்கடை வைத்திருக்கும் குமார் என்பவர் ரூ.2 கோடி வணிக ரீதியில் கடனாக பெற்றுள்ளார். பாண்டிராஜிடன் நிலம் வாங்கித்தருவதாக கூறியும் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது, அவர் நிலம் ஒன்றை ஈடாக கொடுத்துள்ளார். இதனிடையே அவர் நில பத்திரத்தில் மோசடி செய்தது பாண்டிராஜிக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, காலம் தாழ்த்தியும் தகுந்த பதிலளிக்காமலும் குமார் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பாண்டிராஜ் புதுக்கோட்டை மாவட்ட குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
- நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
- இதில் இயக்குனர் பாண்டிராஜ் அரசு நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். அந்த திட்டத்தை ஆக்கப்பூர்வமாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
நடிகர் கார்த்தியின் உழவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தில் புதிய உத்திகளை செய்பவர்களுக்கும், அதனைக் காப்பாற்ற முயற்சி எடுத்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த விழாவில் சிவகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் இயக்குனர் பாண்டிராஜ் கூறியதாவது, "விவசாயம் செய்பவர்கள் பலர் நஷ்டம் அடைகிறார்கள். ஆனால், விவசாயத்தை மாற்று வழியில் செய்பவர்கள், லாபத்தை சம்பாதிக்கிறார்கள். நான் இந்த வருடம் 114 மூட்டை நெல் அறுவடை செய்தேன். சினிமா எடுத்து பல கோடிகள் சம்பாதித்து கிடைத்த மகிழ்ச்சியை விட, விவசாயம் மூலம் வரும் நெல்லில் சாப்பிடும் போது அதிகமான மகிழ்ச்சி கிடைக்கிறது.
உழவன் அறக்கட்டளை விருதுகள்
விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் தொடர்ந்து விவசாயிகள் அதையே தான் செய்கிறார்கள். இந்த வருடமாவது லாபம் பார்த்து விடுவோம் என்று மனம் தளராமல் இருப்பதுதான் விவசாயத்தின் சக்தி. கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு முன்பு விவசாயிகளின் வலிகளை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏனென்றால், எனது பெற்றோர் பத்து வருடமாக விவசாயம் செய்யவில்லை. இப்போது நான் விவசாயம் செய்ய முடிவெடுத்ததற்கான கதையை கூறினால் நேரம் போதாது. ஒரு படமே எடுக்கலாம்.
என் நண்பன் ஒரு நாள் நீ தேசிய விருது முதல் பல விருதுகளையும் வாங்கி விட்டாய். பெரிய நாயகர்களைக் கொண்ட படம் இயக்கி விட்டாய். இதனால் உனது பெற்றோர்களின் ஆத்மா சாந்தியடையுமா என்று கேட்டான். அவர்கள் சந்தோஷமாக தானே இருக்கிறார்கள் என்று கூறினேன். அவர்கள் விவசாயம் செய்த நிலம் வீணாக கிடக்கிறது. அதை பார்க்கும்போது அவர்களால் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று கேட்ட ஒரு கேள்விதான் என்னை சென்டிமெண்டாக விவசாயத்தை செய்ய வேண்டும் என்ற முடிவை தீர்க்கமாக எடுக்க வைத்தது.
இயக்குனர் பாண்டிராஜ்
எங்களது நிலத்தை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. நிறைய சிக்கல்களை சந்தித்தேன். வேலி, கிணற்றில் தண்ணீர் இல்லை, என பல தடைகளை தாண்டவே பணமும், உழைப்பும் செலவானது. சுற்றி இருந்தவர்களும், எனக்கு விவசாயத்தில் அதிர்ஷ்டம் இல்லை என கூற ஆரம்பித்தார்கள். ஆனால் விடாது அதில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்த பிறகு, நிலத்திற்கு நீர் வந்தது. இதை எல்லாம் பார்க்கும் போது, இத்தனை ஆண்டுகளாக விவசாயிகள் எதையும் எதிர்பாராமல் இதற்காக தான் உழைத்து இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், அவர்கள் அதை தாண்டி பயிரை விளையவைத்து நமக்கு கொடுக்க பாடுபடுகிறார்கள். அப்படிபட்டவர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சி.
நானும் கார்த்தி சாரும் இணைந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் எடுத்த மகிழ்ச்சியை விட, அவர் இந்த உழவன் அமைப்பு ஆரம்பித்ததில் தான் எனக்கு மகிழ்ச்சி அதிகம். அதோடு அரசு நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். அந்த திட்டத்தை ஆக்கப்பூர்வமாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். ஒரு நாள் கூலி 250 ரூபாய் பெற்றுக் கொண்டு இரண்டு மணி நேரம் கூட வேலை செய்யாமல் அடுத்தவரின் கதைகளை பேசுவதற்கான இடமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால் மத்திய அரசு நூறு ரூபாயும் மாநில அரசு 100 ரூபாயும் விவசாயி 50 ரூபாயும் கொடுத்தால் விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதேபோல தூர் வாரும் வேலைகளையும் மேலோட்டமாகவே செய்கிறார்கள். சில நாட்களிலேயே மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. தமிழ்நாடு அரசு இதற்கு உரிய முறையை முன்னெடுத்து செய்தால் நாடும், விவசாயமும் வளர்ச்சி பாதையில் செல்லும்" என்று கூறினார்.