search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்த்திபன்"

    • ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாக சாய்ரா பானு அறிவித்தார்.
    • முப்பது ஆண்டுகளை எட்டுவோம் என்று நம்பியிருந்த நிலையில், முடிவை எட்டியிருக்கிறது திருமண வாழ்க்கை என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.

    இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார்.

    ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

    சினிமா தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு வலம் வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் காதலை பகிர்ந்து வந்தனர்.

    இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று இரவு அறிவித்தார்.



    இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்தார்.

    தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் என நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பிரிவு அறிவிப்பு நேற்று இந்திய சினிமாவிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து முப்பது ஆண்டுகளை எட்டுவோம் என்று நம்பியிருந்த நிலையில், முடிவை எட்டியிருக்கிறது திருமண வாழ்க்கை என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பிரிவு:

    இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் , பிறக்கும் ஒரு நாதமே…

    'குடைக்குள் மழை' நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது.

    பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல ,

    புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.

    நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப் பட்டவர்கள் ஆராயலாம்.

    ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே,

    ஊர் விலகி 'பிரிவு' என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்! என்று கூறியுள்ளார். 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பார்த்திபன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் டீன்ஸ் திரைப்படம் வெளியானது
    • ஆந்திராவின் துணை முதலமைச்சரான பவன் கல்யாணை நேரில் சந்தித்தார்.

    தமிழ் சினிமாவிற்கு தனது வித்தியாசமான சிந்தனையின் மூலம் திரைப்படத்தை இயக்கி நடித்தும் வருகிறார் பார்த்திபன். அவர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான டீன்ஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. டீன்ஸ் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ஆந்திராவின் துணை முதலமைச்சரான பவன் கல்யாணை திரு. பார்த்திபன் அவர்கள் நேரில் சந்தித்து அவரது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வு குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்கலகிரி கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. அங்கு அவர்கள் பலதரப்பட்ட விஷயங்கள் மற்றும் சமூக பிரச்சனைகளை குறித்து பேசினர்.

    பவன் கல்வாண் பார்த்திபனுக்கு கடவுள் சிலைகளையும் மாறாக பார்த்திபன் ஒரு வீரரின் ஓவிய படத்தையும் தான் எழுதிய புத்தகம் ஒன்றை கொடுத்து அவர்களின் அன்பை வெளிப்படுத்திக்கொண்டனர். பின் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் தற்பொழுது இணயத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன்.
    • டீன்ஸ் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார் பார்த்திபன்

    தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நபர் பார்த்திபன். இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளியான டீன்ஸ் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார்.இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பாக சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக அமைந்தது.

    அதை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன். அப்படி ஒரு பதிவை தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. 'வந்தே பாரத்'-தில் தந்தே உணவு தரமாக இல்லை . பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.

    நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென…" என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த ஜூன் 12 ஆம் தேதி நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் வெளியானது.
    • சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியிருந்தது.

    நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் கடந்த ஜூன் 12 ஆம் தேதி 'இந்தியன் 2' படத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.

    மாணவர்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியிருந்தது.

    இந்நிலையில், தற்போது 'டீன்ஸ்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தகவலை பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொண்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி

    மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை ஜோ திரைப்படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.

    திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை சமீபத்தில் பார்த்த பார்த்திபன் பட இயக்குனரான சீனு ராமசாமி மற்றும் அப்படத்தில் நடித்த ஏகனை பாராட்டியுள்ளார்.

    அவர் கூறியதாவது " இவ்வளவு மனித நேயமிக்க படத்த நான் சமீபத்துல பாக்கல. ஏகனின் நடிப்பு மிக நன்றாக உள்ளது. ஆல் தி பெஸ்ட் ஏகன் . இதுக்கு மேல பேசுனனா எமோஷனல் ஆகிடுவேன்" என கூறிவிட்டு சென்றுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டீன்ஸ்' படத்தின் புரோமோசனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திபன் பேசியுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
    • . எனவே பார்த்திபன் மறைமுகமாக ரஜினி படத்தை தாக்கிப் பேசுகிறாரா என்று ரசிகர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.

    பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் கடந்த ஜூன் 12 ஆம் தேதி 'இந்தியன் 2' படத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் 'டீன்ஸ்' படத்தின் புரோமோசனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திபன் பேசியுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

    அந்த பேட்டியில் பேசிய பார்த்திபன், "இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆகவேண்டும் என்றால் கதை சரியாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. தமன்னாவை ஆட வைத்தால் போதும் கதை சரியாக இல்லை என்றாலும் கூட படம் ஹிட் ஆகிவிடும்" என கூறியுள்ளார்.

    சமீப காலமாக வெளியாகி வரும் ஒரு சில படங்களில் நடிகை தமன்னா நடனமாடிய பாடல்கள் படத்திற்கு வலு சேர்ப்பதாக இருந்தது.நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படத்தில் தம்மன்னாவின் துள்ளலான நடனத்துடன் இடம்பெற்ற 'காவலா' பாடல் பெரும் ஹிட் அடித்தது. எனவே பார்த்திபன் மறைமுகமாக ரஜினி படத்தை தாக்கிப் பேசுகிறாரா என்று நெட்டிஸின்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.

     

    கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த  'அரண்மனை 4' படத்தில் ராஷி கண்ணா மற்றும் தமன்னா இணைந்து நடனமாடிய 'அச்சசோ' பாடலும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ''இந்தியன் ௨ படம் குறித்து யாரும் நன்றாக சொல்லவில்லை அதனால் இன்னும் படம் பார்க்கவில்லை'' என்று பார்த்திபன் கூறியது விவாதப் பொருளானதையும் கவனிக்க வேண்டியுள்ளது. 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குநர், நடிகர் பார்த்திபன்.
    • இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குநர், நடிகர் பார்த்திபன். இவர் இயக்கிய முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்று இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்து வருகிறார்.

    பல்வேறு திரைப்படங்களில் ஏராளமான கதாபாத்திரங்களில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவர் கடைசியாக தயாரித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இதைத் தொடர்ந்து இவர் தயாரித்து, இயக்கிய படம் இரவின் நிழல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்த நிலையில், இவர் இயக்கி, தயாரித்திருக்கும் அடுத்த படம் டீன்ஸ். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இப்படம் ஒரு திரில்லர் பாணியில் கதைக்களம் அமைந்துள்ளது.

    இப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே நாளில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

    அண்மையில் படத்தை குறித்து சர்ச்சை ஒன்று எழுந்தது. படத்தின் VFX காட்சிகளை கையாண்ட நிறுவனம் குறித்த நேரத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை செய்து தரவில்லை எனவும், ஒப்பந்தத்தில் போடப்பட்ட தொகையை விட அதிகமாக கேட்கிறார்கள் என கோயம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் பார்த்திபன். அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்த நிறுவனமும் பதிலுக்கு படத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.

    இந்நிலையில் பார்த்திபன் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். அதன்படி படத்தின் டிக்கெட் விலையை 100 ரூபாய்க்கு குறைத்துள்ளார். படம் வெளியாகி சில நாட்களுக்கு மட்டுமே இச்சலுகை என குறிப்பிட்டுள்ளார்.

    தற்பொழுது அனைத்து தனியார் கார்பரேட் திரையரங்குகளிலும் ஒரு சிக்கெட்டின் விலை சராசரியாக 150 முதல் 200 ரூபாய் வரை இருக்கிறது. இதனால் பார்த்திபனின் இந்த முடிவு பாராட்டுக்குறியது.

    இதுக் குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் " எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை, பட் டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு 100/- மட்டுமே, இதில் நட்டமே இல்லை, வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராதாகிருஷ்ணன் பார்த்திபன், டீன்ஸ் என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
    • கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    பிரபல நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன், டீன்ஸ் என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். கோவையை சேர்ந்த ரியல் வோர்க்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர், டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக இருந்துள்ளார்.

    இந்நிறுவனம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், லியோ, விக்ரம் போன்ற திரைப்படங்களுக்கு பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த பிப்ரவரி மாதம் 20 -ம் தேதிக்குள் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுப்பதாக கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு கட்டணமாக சிவபிரசாத் 68 இலட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் கேட்ட நிலையில், பார்த்திபன் 42 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

    மேலும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் சொன்ன பணிகளை முடிக்க முடியவில்லை.

    இதனிடையே சிவப்பிரசாத் கடந்த மாதம் நான்காம் தேதி கிராபிக்ஸ் காட்சிகளுக்கான கட்டணமாக 88 இலட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

    ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டதும், குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்காததும் தெரியவந்துள்ளது. இவ்வாறான சூழலில் தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆனால் சிவப்பிரசாத் தரப்பில் இதுக் குறித்து கூறுவது என்ன வென்றால் " பார்த்திபன் சார் பல கரெக்ஷன்களை வைத்துக் கொண்டே இருப்பார், நாங்கள் கொடுத்த காசுக்கு அதிகமாகதான் வேலை செய்துள்ளோம். சொன்ன காட்சிகளை விட அதிகமாக வேலை இருந்ததால் சொன்ன அமவுண்டை விட அதிகமாக கேட்டோம். பணத்தை பற்றி கேட்டதற்கு பணிகளை முடித்தவுடன் மொத்தமாக வாங்கிக் கொள்ளுமாரு  கூறினார். ஆனால் நாங்கள் நம்பிகைகளின் அடிப்படையில் சில காட்சிகளை தவிர்த்து 400-க்கும் மேற்பட்ட கிராபிக் காட்சிகளை அப்படத்தில்  செய்து கொடுத்துள்ளோம், அவர்கள் அந்த காட்சிகளை வைத்துதான் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியிடவுள்ளனர்," எனவும் இதனால் அவர் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று வழக்கை சிவப்பிரசாத் தொடர்ந்துள்ளார்.

    ஆனால் படக்குழு இன்னும் 6 நாட்களில் படம் வெளியாகும் என ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். படத்தின் அடுத்த பாடலான இக்கி பிக்கி பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். இதனால் ஒரு போட்டா போட்டி சூழல் நடைப்பெற்று வருகிறது. இதனால் திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 4-ல் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவபிரசாத், முக்கிய காட்சிகளை ஏப்ரலுக்குள் முடிக்க முடியாது என கூறியிருக்கிறார்.
    • புகாரின் அடிப்படையில் 406/420 ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நடிகர் பார்த்திபன் தற்போது TEENZ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளராக கோவையை சேர்ந்த சிவபிரசாத் பணியாற்றி வந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 10 அல்லது 20-ம் தேதிக்குள் பணிகளை முடிப்பதாகக் கூறி ரூ.68.50 லட்சத்தை சிவபிரசாத் கேட்டுள்ளார். ரூ.42 லட்சம் செலுத்திய பார்த்திபன் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காததால் ஏப்.19-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளார்.


    அப்போது, 4-ல் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவபிரசாத், முக்கிய காட்சிகளை ஏப்ரலுக்குள் முடிக்க முடியாது என கூறியிருக்கிறார். மேலும் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி ரூ.88.38 லட்சம் கேட்டு பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் சிவபிரசாத்.

    இதையடுத்து, தன்னை ஏமாற்றியதாக கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவபிரசாத் மீது பந்தயசாலை காவல்நிலையத்தில் பார்த்திபன் புகார் அளித்தார்.


    புகாரின் அடிப்படையில் 406/420 ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டீன்ஸ் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்தில் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குநர், நடிகர் பார்த்திபன். இவர் இயக்கிய முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்று இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்து வருகிறார்.

    பல்வேறு திரைப்படங்களில் ஏராளமான கதாபாத்திரங்களில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவர் கடைசியாக தயாரித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இதைத் தொடர்ந்து இவர் தயாரித்து, இயக்கிய படம் இரவின் நிழல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், இவர் இயக்கி, தயாரித்திருக்கும் அடுத்த படம் டீன்ஸ். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

    ஜூலை 12 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் வெளியாக இருப்பதை தொடர்ந்து, டீன்ஸ் படமும் இதே நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இசை மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
    • வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

    உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    டிரைலரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது.

     


    பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.

    கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதிய பாதை மற்றும் ஹவுஸ் ஃபுல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்
    • புதுவிதமான படங்களை இயக்குவதும் அதில் நடிப்பதும் முயற்சி செய்வதும் இவரின் வழக்கம்.

    நக்கலும் நையாண்டித்தனமுமாக பேசுவதில் வல்லவர் பார்த்திபன். புதிய பாதை மற்றும் ஹவுஸ் ஃபுல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். இவர் இயக்கிய புதிய பாதை சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.

    இதுவரை பார்த்திபன் 15 படங்களை இயக்கியுள்ளார்., 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். புதுவிதமான படங்களை இயக்குவதும் அதில் நடிப்பதும் முயற்சி செய்வதும் இவரின் வழக்கம்.

    பார்த்திபன் இயக்கத்தில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே படம் முழுக்க நடித்திருப்பார். இதில் இந்திய சினிமாவில் ஒரு புது முயற்சியாகும். இப்படத்தை இயக்கி நடித்தற்காக மிக பெரிய பாராட்டை பெற்றார் பார்த்திபன்.

    பின் 2022 ஆம் ஆண்டு இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்து இருந்தார். இத்திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக 'டீன்ஸ்' படத்தை இயக்கிருக்கிறார். இத்திரைப்படம் ஒரு திகில் திரில்லர் படமாக அமைந்துள்ளது. படத்தின் டீசர் சென்ற வாரம் வெளியிடப்பட்டது.

    படத்தின் டிரெயிலர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை இயக்குனர் மணிரத்னம் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×