என் மலர்
நீங்கள் தேடியது "பிரம்மாஜி"
- டில்லு ஸ்கொயர் திரைப்படம் மாலிக் ராம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது.
- அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு சித்து ஜொனலகட்டா நடிப்பில் அறிமுக இயக்குனரான விமல் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் டிஜே டில்லு.
நேஹா ஷெட்டி, பிரின்ஸ் செசில் , பிரம்மாஜி மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமான டில்லு ஸ்கொயர் திரைப்படம் மாலிக் ராம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகியது.
அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இப்பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகளவில் 125 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூன்றாம் பாகமும் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்லிக்ஸ் வாங்கியுள்ளனர். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.