என் மலர்
முகப்பு » புவனேஸ்வர்
நீங்கள் தேடியது "புவனேஸ்வர்"
ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் உலககோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழா இன்று மாலை நடைபெற்றது. #HockeyWorldCup2018 #HWC2018
புவனேஸ்வர்:
14-வது உலககோப்பை ஹாக்கிப்போட்டி ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரத்தில் நாளை (28-ம் தேதி) தொடங்குகிறது. டிசம்பர் 16-ந்தேதி வரை அங்குள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.
அர்ஜென்டினா, ஸ்பெயின், பிரான்ஸ், நியூசிலாந்து (‘ஏ’ பிரிவு), நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா (‘பி’ பிரிவு), இந்தியா, பெல்ஜியம், தென்ஆப்பிரிக்கா, கனடா (‘சி’ பிரிவு), நெதர்லாந்து, ஜெர்மனி, பாகிஸ்தான், மலேசியா (‘டி’ பிரிவு) உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்கின்றன.
வரும் 9-ம் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிகின்றன. 2-வது சுற்று 10 மற்றும் 11-ம் தேதியும், கால்இறுதி 12 மற்றும் 13-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது. 15-ம் தேதி அரை இறுதியும், 16-ம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கிறது.
மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 2-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரத்தில் உலககோப்பை ஹாக்கிப் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஒடிஷா முதல் மந்திரி நவீன் பட்நாயக் பங்கேற்றார்.
இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி மற்றும் ஷாருக் கான், மாதுரி தீட்சித் ஆகியோரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. #HockeyWorldCup2018 #HWC2018
×
X