என் மலர்
நீங்கள் தேடியது "மிஷ்கின்"
- தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஷ்கின்
- விஜய் சேதுபதி வைத்து ட்ரெயின் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஷ்கின். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு உதயநிதி மற்றும் அதிதி ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான சைக்கோ திரைப்படத்தை இயக்கினார்.
அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கியான கதாப்பாத்திரத்தில் மிஸ்கின் நடித்தார். 2023 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி வைத்து ட்ரெயின் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.
இதில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். முகம் முழுவதும் அடர்த்தியான தாடியுடன் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இருக்கிறார். இப்படத்திற்கு ஃபௌசியா பாதிமா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் இதற்கு முன் உயிர், விசில், இவன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவராவர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு ஒளிப்பதிவு செய்யும் திரைப்படம் ட்ரெயின் ஆகும்.
ட்ரெயின் படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலிற்கு ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான எஸ். தாணு பங்கேற்ற நேர்காணலில் இப்படத்தின் அப்டேட்டை கூறீயுள்ளார். அதில் அவர் " டிரெயின் திரைப்படம் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மிஷ்கின் தமிழ் சினிமாவின் ஆக சிறந்த இயக்குனர். ரொம்ப பிரம்மாதமான படைப்ப உருவாக்கி இருக்கிறார். இப்படமும் மிகவும் சுவாரசியம் மிகுந்த திரில்லராக இருக்கும். ஒஉ 15 வருஷத்துக்கு முன் என்னை அவர் சந்தித்தார். அப்பொழுது நான் அவரை மிஸ் செய்து தவறவிட்டேனா? இல்லை அவர் என்னை தவறவிட்டரா என தெரியவில்லை இனிமேல அது நடக்காது." என கூறியுள்ளார்.
"VijaySethupathi's #Train is nearing the completion stage?⌛. I missed to work with Mysskin all these years?. I'm so happy with the output of movie. You will be all seated at the edge of seat for this movie?"- Producer Thanupic.twitter.com/gVd5XD6hTt
— AmuthaBharathi (@CinemaWithAB) December 27, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம்
- பாலாவின் திரையுலக பயணம் 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடினர்.
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதே விழாவில் இயக்குனர் பாலாவின் திரையுலக பயணம் 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடினர். இந்த விழாவில் திரைத்துறையை சேர்ந்த பலரும் கலந்துக்கொண்டனர்.
விழாவில் பேசியிருக்கும் மிஷ்கின், 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' படம் பார்த்துட்டு பாலா எனக்குக் கூப்பிட்டார். அந்தப் படம் சரியாகப் போகல. பாலா அழுது நான் பார்த்தது இல்ல. ஆனால், அவர் அன்னைக்கு அழுதார். அப்புறம் என்னோட தயாரிப்புல படம் பண்றியான்னு கேட்டார். எனக்கு அந்தத் தருணத்துல வாழ்க்கைக் கொடுத்த நபர்."
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மீது வழக்கு.
- ஒப்பந்தப்படி 4.85 கோடியில் 2 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநியோக உரிமைக்கான ரூ.1.84 கோடி பாக்கி தொகையை வழங்கும் வரை படத்தை வெளியிடக்கூடாது என ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மீது வழக்கு தொடர்ந்திருந்தது.
இரண்டாம் குத்து படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், ஒப்பந்தப்படி 4.85 கோடியில் 2 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
மத்தியஸ்தர் உத்தரவுப்படி பணத்தை வழங்காமல் ராக்போர்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாக பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
- 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் படக்குழு மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். மேலும் இவ்விழாவில் இயக்குனர் மிஷ்கின், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி கலந்துக் கொண்டனர்.
விழாவில் பேசிய மிஷ்கின் மிகவும் அழகாக , இலக்கிய நயத்தோடு படத்தையும் , படக்குழுவையும், இயக்குனரையும் பாராட்டி பேசினார். அதில் அவர் சொன்ன முக்கியமான விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம். அதில் அவர்
"இப்படத்தை ஓட வைப்பதற்காக நான் இந்த மேடையில் அம்மணமாக கூட ஆட தயார் . இந்த படத்தை எடுத்த இயக்குனர் வினோத் ராஜ் மிகப் பெரிய நன்றி. இந்த படத்தை எடுத்ததற்காக அவனுடைய காலை கூட முத்தம் இடுவேன். நான் இளையராஜாவிற்கு பிறகு ஒருவனின் காலை முத்தமிடுவேன் என்றால் அது வினோத் ராஜின் காலை தான், சூரி அந்த கதாப்பாத்திரமாவே வாழ்ந்து இருக்கிறான். தமிழ் நடிகைகள் இந்த மாதிரி நல்ல படங்களில் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள், அன்னா பென்னிற்கு கண்டிப்பாக இந்த வருடம் தேசிய விருது கிடைக்கும் என வாழ்த்துகிறேன். படத்திற்கு பின்னணி இசையே இல்லாமல் படத்தை இயக்கி என்னை செருப்பால் அடித்து விட்டான் இயக்குனர் வினோத்ராஜ். இப்படத்தை தயவு செய்து அனைவரும் சென்று பாருங்கள். எதெற்கோ பணம் செலவு செய்கிறோம் இப்படத்தையும் சென்று பார்க்க வேண்டும் என மக்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டார்."
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'.
- படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் அவரால் நடிக்க முடியவில்லை அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
அதற்கு முக்கிய காரணம் பாலாவின் பிதா மகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருந்ததே ஆகும். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணங்கான் படமாக்கப்பட்டது.
படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இதுக்குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
- இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.
பிரபல நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார்.
இந்நிலையில் கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
'ஆக்ஷன்' படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்குகிறார். ரித்விகா, அசோக் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.இந்த படத்தின் முதல் பார்வை கடந்த மாதம் வெளியானது. அதைதொடர்ந்து படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. படத்தின் பணியாற்றிய அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். யூகி சேது, இயக்குனர் மிஷ்கின், சினேகன், ரோபோ சங்கர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
அதில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கோயிலுக்கு போகாதீங்க தியேட்டருக்கு போங்க என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது பேசும் பொருளாகி வருகிறது. கோயிலுக்கு போனாலாவது மன் நிம்மதி கிடைக்கும், சமீபத்தில் வெளிவந்த தமிழ் படங்களை தியேட்டருக்கு சென்று பார்த்தால் பிபி தன் ஏறுகிறது என ட்ரோல் செய்து வருகின்றனர்.
வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா, புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும் என மிஷ்கின் சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என பேசியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர்.
- அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர்.
ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் 'டபுள் டக்கர்'.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "இந்த படத்தின் நாயகன் தீரஜ்ஜை எனக்கு பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன்."
"எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம் பெறும் போது, அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான்."
"தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன். சினிமாவில் மட்டும் தான் less is more. பத்திரிகைக்காரர்கள் எப்போதும் என்னை தூக்கிவிட்டிருக்கிறீர்கள். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களை நன்றாக இல்லை என்று சிலர் சொன்ன போது, அதை தூக்கிப் பிடித்தவர்கள் நீங்கள் தான்."
- ’துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பு சில வருடங்களுக்கு முன் தொடங்கியது.
- விஷால் மற்றும் மிஷ்கினுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் நிறுத்திவைக்கப்பட்டது.
கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'துப்பறிவாளன்'. இந்த படத்தில் நடிகர் விஷால், பிரசன்னா, அனு இமானுவேல், சிம்ரன், வினய் என பலர் நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியைத் தேடி தந்தது.
இதைத்தொடர்ந்து, 'துப்பறிவாளன்' இரண்டாம் பாகம் சில வருடங்களுக்கு முன் தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதிலும் நடித்தனர். இதன் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான விஷால், மிஷ்கினை படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். பின்னர் இந்த படத்தைத் தானே இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், 'துப்பறிவாளன் 2' திரைப்படத்தின் பணிகளை விஷால் தொடங்கியுள்ளதாகவும் இப்படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக வரும் 1-ம் தேதி விஷால் லண்டன் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'.
- இப்படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.
மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் இசையமைப்பாளர் மிஷ்கின் பேசியதாவது, வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்.
ஒரு படத்தை நீங்கள் உண்மையாக எடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த படத்திற்குள் கேளிக்கைகள், சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கலாம். அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று சொல்வேன். அதுதான் திரைப்படத்திற்கான உயிர். நான் விதார்த்திடம் நீ இன்னும் 50 வருடம் நடித்துக் கொண்டிருப்பாய்… என்று கூறினேன். அவன் சினிமா இல்லை என்றால் இறந்துவிடுவான்… சினிமாவில் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்கும் நபர் விதார்த்.. நானும் அப்படித்தான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன். விஜய் சேதுபதியைப் போல் விதார்த் முகத்திலும் தமிழ் லான்ஸ்கெப் இருக்கும்.
Living truthfully in an imaginary situation என்பது நடிப்பு பற்றி கொடுக்கப்படும் விளக்கம். நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர், நடிகைகள் என்பேன்.. பூர்ணா அந்த மாதிரியான நடிகை. சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன்… அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா… பூர்ணாவின் குழந்தை காலை எடுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன்.. அது போல் தான் பூர்ணாவின் காலையும்… பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என்னையும் அவளையும் குறித்து சிலர் தவறாகப் பேசுவார்கள். அவள் எனக்குத் தாய் போன்றவள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள்.
என் தம்பி மிக எளிமையானவன், வாழ்க்கையின் கஷ்டங்களை இப்பொழுது புரிந்து கொள்ள துவங்கியிருக்கிறான்…. அவன் மொழியில் வளமை இல்லை என்றாலும் உணர்வு இருக்கிறது… வெற்றிமாறனுக்குப் பிறகு நாவலில் இருந்து கதையை எடுத்திருக்கிறான்… அந்த ஸ்கிரிப்டில் என்னை தலையிடக்கூடாது என்று சொல்லிட்டான்.. இன்றுவரை அந்த ஸ்கிரிப்டை எனக்கு படிக்க கொடுக்கவில்லை. கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன்… வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எதற்காக வாழ வேண்டும் என்பதற்கான கேள்விகளின் பதில் இருப்பதால் இப்படம் நல்ல படம் என்பேன்… சில முயற்சிகள் எடுத்திருக்கிறான்… மிகச்சிறந்த படம் என்று சொல்வதற்கில்லை.
ஒரு பெண்ணின் உணர்வு நிலையில் ஏற்படும் குழப்பநிலை இது காதலா.. இல்லை காமமா என்கின்ற குழப்பத்தை பதிவு செய்திருக்கிறான்… இசையில் நூறு மார்க் வாங்குபவர்கள் எப்பொழுதும் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தான். நான் இளையராஜா ஐயாவிடம் இருந்து சண்டை போட்டு வந்ததற்குப் பின்னர் 6 ஆண்டுகளாக இசையை கற்று வருகிறேன்… இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டதும் ஏற்றுக் கொண்டு இசையமைத்து இருக்கிறேன்…. என் இசைக்கு 35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன்… தம்பி படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும்… நன்றாக இல்லை என்றால், ஓடாது… பரவாயில்லை. தொடர்ச்சியாக நீ ஓடு… தோல்வி என்பது ஒன்றுமே இல்லை. நீ தொடர்ச்சியாக ஓடிக் கொண்டே இரு.. இந்த நிகழ்விற்கு வந்த அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.
- இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டெவில்".
- "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் மிஷ்கின்.
'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.
மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பெருந்திணை' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- வெற்றிமாறன் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் நடிகராக அறிமுகமாகவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'ட்ரெயின்' (Train). இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே 'ட்ரெயின்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், 'ட்ரெயின்' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பல படங்களை இயக்கிய வெற்றிமாறன் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
- இயக்குனர் மிஷ்கின் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி முதல் முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ளார். 'ட்ரெயின்'(Train) என தலைப்பிடப்பட்ட இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே 'ட்ரெயின்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'ட்ரெயின்' திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார். நடிகை டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இந்நிலையில், 'ட்ரெயின்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முரளி ராமசாமி, ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன் , கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.