என் மலர்
முகப்பு » மோர்கன்
நீங்கள் தேடியது "மோர்கன்"
இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், உலகக்கோப்பையில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக மோர்கன் உள்ளார். இவரது தலைமையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி வலுவானதாக உயர்ந்து நிற்கிறது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
வருகிற 30-ந்தேதி இங்கிலாந்து தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தற்போது உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து நாளை ஆஸ்திரேலியாவையும், 27-ந்தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்த்து விளையாடுகிறது.
இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பீல்டிங் பயிற்சி மேற்கொண்ட கேப்டன் மோர்கனின் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் காயத்தின் வீரியம் குறித்து அறிய எக்ஸ்-ரே எடுக்கப்படுகிறது. ஒருவேளை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் மோர்கன் விளையாடுவது சந்தேகமே?

லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 54 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து 4-0 எனத் தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
2-வது, 3-வது மற்றும் நான்காவது போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த மூன்று போட்டிகளிலும் இரண்டு அணிகளும் 300 ரன்களுக்கு மேல் குவித்தனர். இங்கிலாந்து இரண்டு முறை சேஸிங் செய்தது. ஒருமுறை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 73 பந்தில் 84 ரன்களும், மோர்கன் 64 பந்தில் 76 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. கிறிஸ் வோக்ஸ் தொடக்கத்தில் அபாரமாக பந்து வீச பாகிஸ்தான் 6 ரன்கள் அடிப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் உடன் கேப்டன் சர்பராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
பாபர் ஆசம் 80 ரன்கள் சேர்த்தார். சர்பராஸ் அகமது 80 பந்தில் 97 ரன்கள் குவித்து சதத்தை தவறவிட்டார். சர்பராஸ் அகமது ஆட்டமிழக்கும்போது பாகிஸ்தான் 31.5 ஓவரில் 193 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த வீரர்கள் முடிந்த அளவிற்கு அடித்து விளையாடினார்கள். ஆசிப் அலி 22 ரன்னும், இமாத் வாசிம் 25 ரன்களும், முகமது ஹஸ்னைன் 28 ரன்களும் சேர்க்க பாகிஸ்தான் 46.5 ஓவரில் 297 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதனால் இங்கிலாந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 4-0 எனவும் கைப்பற்றியது. இந்தத் தொடரில் 8 இன்னிங்சில் 7 முறை 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி மெதுவாக பந்து வீசியதால், அந்த அணி கேப்டன் மோர்கனுக்கு ஐசிசி தடைவிதித்துள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகளில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 3-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றது. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. அந்த அணி 358 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் பேட்டிங் செய்யும்போது இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர். இதனை போட்டி நடுவர் சுட்டிக்காட்டி கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்தார். அத்துடன் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சக வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
மோர்கன் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் இதேபோன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் சில ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர்.
ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை இப்படி நடந்தால் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும். அதனடிப்படையில் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைமறுநாள் நாட்டிங்காமில் நடைபெறும் 4-வது போட்டியில் மோர்கன் விளையாடமாட்டார்.

இந்திய அணி உலகின் எந்த பகுதியில் விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம் போன்றே இருக்கும் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். #WordCup2019
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்தொடர் அடுத்த மாதம் 30-ந்தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து முதன்முறையாக உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இந்தியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என அந்த அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோர்கன் கூறுகையில் உலகக்கோப்பை கிரிக்கெட்கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இதை நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக எங்கள் அணியை வலுவாக கட்டமைத்துள்ளோம். அதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது.
நாங்கள் ஒவ்வொரு முறையும் இந்தியாவில் விளையாடும்போது, நாங்கள் வெளிநாட்டு அணியாகவே பார்க்கப்படுகிறோம். ஆனால் இந்தியா உலகின் எந்த பகுதியில் சென்று விளையாடினாலும் அது அவர்களின் சொந்த மைதான போட்டியாகவே தோன்றும். இந்தியா மிகப்பெரிய அணி. அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் அணி. அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு உள்ளது.
கடந்த இரண்டு வருடத்தில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடியது மிகவும் கடினமாக தொடராக இருந்தது. இரண்டு அணிகளுக்கும் வாய்ப்பு உள்ள நிலையில் மோத இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

உலகக்கோப்பை தொடருக்கு தயாராக ஐபிஎல் சரியான தளம் என்று இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். #IPL2019 #WorldCup2019
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கு முன் தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களைத் தவிர மற்ற நாட்டு வீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.
உலகக்கோப்பைக்கும் ஐபிஎல் தொடருக்கும் இடையில் குறைந்த நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. இதனால் வீரர்களின் வேலைப்பளு குறித்து அனைத்து நாடுகளும் கவலை அடைந்துள்ளது.
ஆனால் ஐபிஎல் தொடர் உலகக்கோப்பைக்கான சிறந்த தளம் என்று இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘மிகுந்த நெருக்கடியான சூழ்நிலையில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
சூழ்நிலைகள், அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்வது, நெருக்கடிகளை தனக்குள் எடுத்துக் கொண்டு விளையாடுவது உலகக்கோப்பைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது உலகக்கோப்பைக்கு தயாராகுவதற்கான சிறந்த தளமாகும்’’ என்றார்.

சொந்த மண்ணில் களமிறங்குவது, இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். #2019WorldCup
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற மே மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. கடந்த நான்கு வருடங்களாக ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி முதன்முறையாக 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்து அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என முன்னாள் வீரரும், டிவி வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘2011 மற்றும் 2015 உலகக்கோப்பை தொடர்களை பார்த்தீர்கள் என்றால், போட்டியை நடத்திய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள்தான் கோப்பையை தட்டிச் சென்றது. அதேபோல் தற்போது இங்கிலாந்துக்கு சொந்த மண் சாதகமாக இருக்கும்.
மோர்கன் மிகவும் தலைசிறந்த கேப்டனாக திகழ்கிறார். கடந்த நான்கு வருடங்களாக அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றுள்ளார். கடந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து விளையாடிய விதத்தை பார்த்தீர்கள் என்றால், அது வரலாற்றுக்கு முந்தைய பகுதி. நாங்கள் தவறான அதிகாரிகளுடன் சென்றோம்.
அதன்பின் மோர்கன் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார். ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் கலாசாரத்தை மாற்றினார். எந்தவித பயமின்றி விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை கையாண்டனர். இதனால் அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதைவிட சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
இங்கிலாந்து அணி தற்போது உலகின் சிறந்த அணியாக திகழ்கிறது. இதை கடந்த நான்கு வருடங்களாக நிரூபித்துள்ளனர். ஆனால் இன்னும் சில அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி தற்போது சில வீரர்களை இணைத்து நல்ல நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். விராட் கோலியோடு இந்திய அணி நாங்களும் தயாராக இருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது.
இரண்டு அணிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று சொன்னால், இந்தியா அல்லது இங்கிலாந்து என்பதை உறுதியாகச் சொல்வேன்.
இரண்டு வருடத்திற்கு முன் சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆகவே, சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் சாதகமாக இருக்கும். ஆனால், சொந்த மண்ணில் விளையாடும்போது கூடுதலாக நெருக்கடியும் ஏற்படும்’’ என்றார்.

இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் இங்கிலாந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 31 ரன்னில் வெற்றி பெற்றது. #SLvENG
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 10-ந்தேதி தம்புல்லாவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இங்கிலாந்து அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் வெற்றித் தோல்வியின்றி முடிவிற்கு வந்தது.
இந்நிலையில் 2-வது ஆட்டம் தம்புல்லாவில் இன்று பகல் ஆட்டமாக நடைபெற்றது. இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. ஜோ ரூட் (71), மோர்கன் (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 50 ஒவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி சார்பில் மலிங்கா 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஒல்லி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சால் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. குசால் பெரேரா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.
6-வது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வா உடன் திசாரா பேரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இலங்கை அணி 29 ஓவரில் 140 ரன்கள் அடித்திருக்கும்போது மழை பெய்தது.
கனத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பெற்று டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் ஆட்டம் மழையால் முடிவில்லாமல் போனது. ஆனால், 2-வது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போதிலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து வெற்றி என அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் 17-ந்தேதி பல்லேகலே மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அளித்தனர். #SLvENG
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தம்புல்லாவில் தொடங்கியது. பகல்-இரவு போட்டியினான முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜேசன் ராய் 27 பந்தில் 24 ரன்களும், பேர்ஸ்டோவ் 24 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஜோ ரூட்டும், கேப்டன் மோர்கனும் அதிரடியை தொடங்கினார்கள். ஜோ ரூட் 28 பந்தில் 25 ரன்களும், மோர்கன் 11 பந்தில் 14 ரன்களும் அடித்திருந்த போது இங்கிலாந்து 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது கனமழை பெய்ய ஆரம்பித்தது. நீண்ட நேரம் மழை விடாததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தார். இதனால் முடிவின்றி முதல் ஆட்டம் முடிவுக்கு வந்ததது. மழையால் ஆட்டம் தடைபட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 2-வது போட்டி தம்புல்லாவில் நாளைமறுநாள் (13-ந்தேதி) நடக்கிறது.

ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் நீடிப்பதைவிட, இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்வதே முக்கியமானது என மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி லண்டன் லார்ட்ஸில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை லீட்ஸில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து தொடரை 1-2 என இழந்தால் கூட மாற்றம் ஏதும் வராது.
இருந்தாலும் தரவரிசையை விட இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவதே முக்கியமானது என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘இந்தியா மிகவும் வலுவான அணி. முதல் போட்டியில் அவர்களது ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இதனால் தொடரில் அவர்களை வீழ்த்தினால் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கும். குறிப்பாக நம்பிக்கை அதிகரிக்க முக்கியமானதாக இருக்கும்.
2-வது போட்டியில் பெற்ற வெற்றியை எல்லா போட்டிக்கும் எடுத்துச் சென்றால் சிறந்ததாக இருக்கும். அதேபோல் ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகமிக முக்கியமானது.
நாளை நடக்கும் போட்டியில் குலதீப் யாதவ் சிறப்பாக பந்து வீசலாம். அதேபோல் உமேஷ் யாதவும் சிறப்பாக பந்து வீசலாம். இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிப்பதை விட இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றுவதே சிறந்தது’’ என்றார்.

மான்செஸ்டரில் இருந்து வேறுபட்ட கார்டிஃப் சூழ்நிலை வெற்றிக்கு உதவியது என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND #Morgan
இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கார்டிஃபில் நடைபெற்ற நேற்றைய 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் அள்ளினார். இந்த போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. மான்செஸ்டரில் இருந்து மாறுபட்ட கார்டிஃப் சூழ்நிலையே நாங்கள் வெற்றி பெற காரணம் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘இன்றைய (நேற்று) ஆட்டத்தில் சூழ்நிலை முற்றிலும் வேறுபாடாக இருந்தது. குல்தீப் யாதவ் மிகவும் சிறப்பான பந்து வீச்சாளர். பெரும்பாலான நேரங்களில் சிறப்பான பந்து வீச்சையே வெளிப்படுத்துவார். ஆனால், கார்டிஃப் சூழ்நிலையை விட மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு அவருக்கு அருமையாக அமைந்தது.
கார்டிஃப் விக்கெட்டில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்தது. குறிப்பிடத்தகுந்த வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆனால், எங்களுடைய திட்டம் மிகவும் தெளிவாக இருந்தது. நாங்கள் அவரை சிறப்பாக எதிர்கொண்டோம்’’ என்றார்.

ஆஸ்திரேலியா போன்று எங்களை சாதாரணமாக எடை போடாதீர்கள் என்று மோர்கனுக்கு விராட் கோலி எச்சரிக்கை விடுத்துள்ளார். #ENGvIND
ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சென்று ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இங்கிலாந்தின் அபார ஆட்டத்திற்கு ஆஸ்திரேலியாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6 போட்டியிலும் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. தற்போது இந்தியா தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா விளையாட இருக்கிறது.
டி20 தொடரின் முதல் ஆட்டம் மான்செஸ்டரில் இன்றிரவு 10 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் எங்களை ஆஸ்திரேலியாவை போல் சாதாரணமாக எடை போடாதீர்கள் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு விராட் கோலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எங்களுடைய திறமை மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. உண்மையிலேயே எங்கள் வீரர்களுக்கு எராளமான டி20 போட்டியில் விளையாடிய அனுபவம் உண்டு. ஐபிஎல் தொடருக்குப்பின் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டியில் சிறப்பாக விளையாடினோம். அணி சிறப்பானதாக உள்ளது.
எங்களை ஆஸ்திரேலியா போன்று எடை போட வேண்டாம். எங்களுக்கு இங்கிலாந்து கடும் சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இது மிகவும் சிறந்த தொடராக இருக்கும். முக்கியமான தருணத்தில் நாம் வெற்றி பெற்றால் எதுவேண்டுமென்றாலும் நடக்கலாம்’’ என்றார்.

×
X