என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுகாதி"

    • மாநிலங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • யுதாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தென்னிந்திய மாநிலங்களில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் ஒன்று யுகாதி பண்டிகை. இது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தெலுங்கு வருட பிறப்பின் முதல் நாள் யுகாதி பண்டிகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இன்று யுகாதி திருநாள் கொண்டாடப்படுவதை அடுத்து, தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்று்ம பலர் வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோருக்கு யுதாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மைசூருவில் இருந்து கார்வாருக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
    • ரெயில்கள் இருமார்க்கமாகவும் மண்டியா, யஷ்வந்தபுரம், குனிகல், ஹாசன், ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    யுகாதி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பெங்களூருவில் இருந்து சென்னை, கலபுரகிக்கும், மைசூருவில் இருந்து கார்வாருக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    * கே.எஸ்.ஆர். பெங்களூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07319) வருகிற 28-ந்தேதி காலை 8.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு சென்னையை சென்றடையும்.

    * டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07320) அதே நாளில் பகல் 3.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    * எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கலபுரகி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06519) வருகிற 28-ந்தேதி இரவு 9.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு கலபுரகியை சென்றடையும்.

    * கலபுரகி-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06520) வருகிற 29-ந்தேதி காலை 9.35 மணிக்கு கலபுரகியில் இருந்து புறப்பட்டு அதே நாள் இரவு 8 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.

    இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் எலகங்கா, தர்மாவரம், அனந்தபூர், குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், கிருஷ்ணா, யாதகிரி, சகாபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    * மைசூரு-கார்வார் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06203) வருகிற 28-ந்தேதி இரவு 9.35 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.15 மணிக்கு கார்வாரை சென்றடையும்.

    * கார்வார்-மைசூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06204) வருகிற 29-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.40 மணிக்கு மைசூருவுக்கு செல்லும்.

    இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும், மண்டியா, கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், குனிகல், ஹாசன், சக்லேஷ்புரா, சுப்பிரமணியா ரோடு, கபகாபுத்தூர், பண்ட்வால், சூரத்கல், முல்கி, உடுப்பி, பர்கூர், குந்தாபுரா, பைந்தூர், பட்கல், முருடேஸ்வர், ஒன்னாவர், குமட்டா, கோகர்ணா, அங்கோலா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • யுகாதி ஆஸ்தானம் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் சேவை நடைபெறுகிறது.
    • மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு ஏழுமலையானிடம் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, புது பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி யுகாதி ஆஸ்தானம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு தெலுங்கு வருட பிறப்பு வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பதி கோவிலில் யுகாதி ஆஸ்தானம் வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது.

    யுகாதி ஆஸ்தானத்தையொட்டி வரும் 21-ந் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் யுகாதி பண்டிகையொட்டி 21 மற்றும் 22-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் 22-ந் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவ சேவை, ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. யுகாதி ஆஸ்தானம் நடைபெறும் அன்று கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

    யுகாதி ஆஸ்தானம் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் சேவை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் மற்றும் விஷ்வகேஸ்வரருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்படும். காலை 7 மணி முதல் 9 மணிக்குள் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி சாமி வீதி உலா நடைபெறுகிறது. மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு ஏழுமலையானிடம் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, புது பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 79,561 பேர் தரிசனம் செய்தனர். 36,784 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.82 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×