என் மலர்
நீங்கள் தேடியது "ரீல்ஸ்"
- சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
- சமீப காலங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
சீன பெண் ஒருவர் ரெயிலில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலானது.
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ரெயிலில் பயணிக்கும்போது அப்பெண் ரெயிலுக்கு வெளியே தலையை நீட்டி ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த சமயத்தில் ஒரு மரத்தில் மோதி அப்பெண் கீழே விழுந்துள்ளார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்பெண் ஒரு புதருக்குள் விழுந்ததால் காயமின்றி உயிர் தப்பினார்.
சமீப காலங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
A Chinese tourist had a heart-stopping moment while traveling on Sri Lanka's coastal railway line. She fell from the train after being struck by a tree branch while trying to record a video.Fortunately, she landed on a bush, which broke her fall and miraculously left her… pic.twitter.com/GmKnViyC0U
— Daily Sherlock ?? ?? (@dailysherlock0) December 12, 2024
- புதிய கார் உள்ளிட்ட சில கார்களை பயன்படுத்தி “ரீல்ஸ்” எடுத்தனர்.
- வேகமாக வரும் கார்களை ஆல்வின் ரோட்டோரம் நின்று தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி இருந்தார்.
திருவனந்தபுரம்:
செல்போனகளின் பயன்பாடு அதிகமாக உள்ள தற்போதைய காலக்கட்டத்தில், அதனை பயன்படுத்தி வித்தியாசமான வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிடுகிறார்கள்.
அவ்வாறு பதிவிடுபவர்களில் பலர், வித்தியாசமான வீடியோக்களை எடுக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான விஷயங்களிலும் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு ஈடுபடும்போது சிலர் விபத்தில் சிக்கி பலியாகும் பரிதாப சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
அதுபோன்ற ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடந்திருக்கிறது. கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு என்பவரின் மகன் ஆல்வின் (வயது20). ஐக்கிய அரபு எமிரேடசில் பணிபுரிந்து வந்த ஆல்வின் கடந்த வாரம் ஊருக்கு வந்திருந்தார்.
ஊரில் இருந்து வந்த நாள் முதல் தினமும் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து வந்தார். நேற்றும் நண்பர்களுடன் சுற்றினார். அப்போது அவர்கள் செல்போனில் "ரீல்ஸ்" எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர்கள் கோழிக்கோடு கடற்கரைக்கு சென்றனர்.
புதிய கார் உள்ளிட்ட சில கார்களை பயன்படுத்தி "ரீல்ஸ்" எடுத்தனர். வேகமாக வரும் கார்களை ஆல்வின் ரோட்டோரம் நின்று தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி இருந்தார். அப்போது அவரது நண்பர் ஓட்டிவந்த ஒரு கார், ஆல்வினின் மீது எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது.
இதில் அவர் படுகாயமடைந்தார். யாரும் எதிர்பாராத வகையில் நடந்த இந்த சம்பவத்தால் ஆல்வினின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு அவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆல்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து நடந்தது குறித்து ஆல்வினின் நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு வாரத்தில் ஆல்வின் இறந்தது அவரது குடும்பத்தினரிடையே கடும் சோகத்தில் ஆழ்த்தியது. "ரீல்ஸ்" வீடியோ எடுத்த போது நண்பனின் கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் கோழிக்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெண் போனை கீழே வைத்து விட்டு ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணை விமர்சித்து பதிவிட்டனர்.
இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் ரீல்ஸ் மோகத்தில் இருப்பதால் அவர்களின் சில செயல்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி விடுகிறது. அது போன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
கர்காலேஷ் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு பெண் போனை கீழே வைத்து விட்டு ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது மகள் அங்கிருந்து வேகமாக சாலையை நோக்கி செல்கிறார். இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன.
இதை அங்கு நின்ற குழந்தையின் சகோதரன் பார்த்து, ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த தனது தாயாரிடம் கூறுகிறான். உடனே அந்த பெண் வேகமாக சென்று தனது மகளை காப்பாற்றும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணை விமர்சித்து பதிவிட்டனர்.
मां फोन में रील बना रही थी छोटी बच्ची बस सड़क की ओर पहुंचने वाली ही थी इतने में ही एक और बेटा आता है और इशारा करते हुए कहता है कि मां उस तरफ छोटी बहन जा रही है।
— Jitu Rajoriya (@jitu_rajoriya) December 8, 2024
सच में बच्चे कुदरत का वह उपहार है जो घटनाओं को डालने में अहम योगदान निभाते हैं। pic.twitter.com/tQ9hzDEJ0K
- ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர் ஒருவர் தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மணலை நிரப்பியுள்ளார்.
- ஜீப்பின் பின்னல் விழுந்த மண்ணால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் இளைஞர் ஒருவர் தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மணலை நிரப்பி நெடுஞ்சாலையில் ஓட்டியுள்ளார். ஜீப்பின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மீது மண் விழுந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் நகரில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர் ஒருவர் தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மணலை நிரப்பி அதை விடியோவாக பதிவு செய்கிறார். பின்னர் அந்த ஜீப்பை சாலையை ஓட்டி ரீல்ஸ் எடுத்துள்ளார். ஜீப்பின் பின்னல் விழுந்த மண்ணால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
#Meerut में अब ट्रैक्टर ट्रॉली पर नहीं बल्कि रील के लिए थार की छत पर मिट्टी भरकर पूरे शहर में उड़ाते हुए रील सोशल मीडिया पर वायरल है।? By @NavbharatTimes pic.twitter.com/dygPKuJqbF
— Lokesh Rai (@lokeshRlive) November 29, 2024
- ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார்.
- அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது. ரெயிலை பார்த்ததும் தண்டவாளத்தில் இருந்து காரை கீழே இறக்க அவர் முயன்றுள்ளார். ஆனால் கார் தண்டவாளத்தில் சிக்கியது.
தண்டவாளத்தில் கார் இருப்பதை பார்த்த ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
जब चली Railway Track पर थार#TharOnTrack #OffroadAdventure #DesiVibes #PowerRide #MahindraThar #Jaipurnews #Updateindia #Breakingnews pic.twitter.com/wcqsrb1Txs
— Update India (@UpdateIndia_TV) November 12, 2024
அப்போது சிலர் காரை தண்டவாளத்தை விட்டு வெளியே எடுக்க உதவி செய்தார்கள். கார் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்ததும் அந்த நபர் காரை வேகமாக ஓட்டி போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.
இதையடுத்து போலீசார் அந்த காரை துரத்திச் சென்று பிடித்து அவரை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.
ரயில் தண்டவாளத்தில் மக்கள் ரீல்ஸ் எடுப்பது ஒன்றும் இது முதல் முறை அல்ல. இம்மாதிரி ரீல்ஸ் எடுக்கும்போது பலரும் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஓட்டுனர் பார்த்திபனை, பணிநீக்கம் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை.
- பேருந்தை, ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்தபடி இயக்கியது சமூக வலைதளங்களில் பரவியது.
செல்போனில் ரீல்ஸ் பார்த்தபடி அரசுப் பேருந்து இயக்கிய தற்காலிக ஓட்டுனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த பேருந்தை, ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்தபடி இயக்கியது சமூக வலைதளங்களில் பரவியது.
இதைதொடர்ந்து, விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த தற்காலிக ஓட்டுனர் பார்த்திபனை, பணிநீக்கம் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
- இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.
- இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நாய்க்குட்டிக்கு ஒருவர் பீர் ஊட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிக்கந்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
#आगरारील बनाने के लिए बेजुबान कि जिंदगी के साथ खेलता रहा युवकवायरल वीडियो में कुत्ते के पिल्ले को पिला रहा है बीयरयुवक की इस हरकत का वीडियो सोशल मीडिया पर हुआ वायरलआगरा थाना सिकंदरा क्षेत्र के शास्त्री पुरम क्षेत्र का मामला@agrapolice @Uppolice #viralvideo pic.twitter.com/EeD78DMtmI
— Aviral Singh (@aviralsingh15) October 1, 2024
- 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்
- இந்த வைரல் வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது சட்டை இல்லாமல் ஒருவர் ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ரீல்ஸ் வீடியோவின் பின்னணியில் மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடல் ஒன்று ஒலிக்கிறது.
இந்த வைரல் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமேதி போலீசார் தெரிவித்தனர்.
#amethi:किलोमीटर के सांकेतिक बोर्ड पर पुशअप करता नजर आया युवकजान हथेली पर डालकर सड़क से 10 मीटर ऊपर बोर्ड पर पुशअप कर रहा युवक युवक का वीडियो सोशल मीडिया पर हो रहा है वायरलसचिन नाम के इंस्टाग्राम आईडी से वीडियो किया गया है पोस्ट @amethipolice @DmAmethi pic.twitter.com/QHc1hIUugZ
— News Time Nation amethi (@NtnAmethi) September 29, 2024
- சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- காளிமுத்து என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள பள்ளபாளையத்தில் சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
காளிமுத்து என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். சிறுமிகளுக்கு ஜீப் ஓட்ட கற்றுக்கொடுத்து இந்த வீடியோவை அவர் படம் பிடித்துள்ளார்.
சிறுமிகள் ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் இந்த வீடியோவிற்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரசு அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.
ஆபத்தான முறையில் சிறுமி வாகனத்தை இயக்கியது சட்டப்படி குற்றம்தான். தனது சொந்த விவசாய நிலத்தில் உரிமையாளர், வாகனத்தை சிறுமியிடம் கொடுத்து இயக்கச் சொல்லியுள்ளார். சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- சைக்கிளில் சென்ற முதியவர் மீது நுரை ஸ்பிரே அடித்து யூடியூபர் வினய் யாதவ் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார்.
- சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில், சைக்கிளில் சென்ற முதியவர் மீது நுரை ஸ்பிரே அடித்து கிண்டலடிக்கும் விதமாக யூடியூபர் வினய் யாதவ் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து முதியவரை பொதுவெளியில் துன்புறுத்திய யூடியூபர் வினய் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து யூடியூபர் வினய் யாதவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்பு வினய் யாதவ் கால் வலியோடு மெதுவாக நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
யூடியூபர் வினய் யாதவின் ஆக்சனுக்கு இதுதான் சரியான ரியாக்சன் என்று இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Youth sprayed on an old man on a bicycle for fun and making reels in Jhansi.UP Police has arrested him and given him course on manners. His walk tells the intensity of course.pic.twitter.com/DBJKAZ8iQn
— Megh Updates ?™ (@MeghUpdates) September 22, 2024
- ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
- குழந்தையின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அப்பெண் ரீல்ஸ் எடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வெளியிடும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
தற்போது குழந்தையை வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கிணற்றுக்கு அருகில் அமர்ந்துள்ள பெண் ஒரு பாடலுக்கு ஏற்றவாறு நடன அசைவுகள் செய்து ரீல்ஸ் எடுத்துள்ளார்.
அப்போது அவளது காலை பிடித்தவாறு கிணற்றுக்குள் அருகில் அவளது குழந்தை உள்ளது. சிறிது கை கழுவினால் கூட குழந்தை கிணற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. ஆனால் குழந்தையின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் அப்பெண் ரீல்ஸ் எடுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் பலரும் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Family court in custody case: Only mother can love child more. Even more than father.Le mother:#ParentalAlienation pic.twitter.com/mc1kl5ziFj
— Raw and Real Man (@RawAndRealMan) September 18, 2024
- சிவராஜ் தனது செல்போனில் சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார்.
- வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார்.
தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையை சேர்ந்தவர் கங்காதர். பாம்பு பிடிக்கும் தொழிலாளி. இவரது மகன் சிவராஜ் (வயது 20).
பாம்பு பிடிக்க செல்லும்போது சிவராஜ் தந்தையுடன் சென்று பாம்பு பிடிக்க கற்றுக் கொண்டார்.
மேலும் சிவராஜ் தனது செல்போனில் சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் நாகப்பாம்பு புகுந்து விட்டதாக கங்காதருக்கு தகவல் தெரிவித்தனர். கங்காதர் உள்ளூரில் இல்லாததால் அவரது மகன் சிவராஜ் பாம்பு பிடிக்க சென்றார்.
வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார்.
பின்னர் பாம்புக்கு முத்தமிட்டபடி தனது செல்போனில் ரிலீஸ் எடுத்தார். அப்போது நாக பாம்பு சிவராஜின் நாக்கில் கொட்டியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சிவராஜை மீட்டு பாண்சுவாடா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
சிவராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.