என் மலர்
முகப்பு » லாரன்ஸ்
நீங்கள் தேடியது "லாரன்ஸ்"
லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காஞ்சனா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்கிறார். #Kanchana #LaaxmiBomb
லாரன்ஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘காஞ்சனா’. லாரன்ஸுக்கு ஜோடியாக ராய் லட்சுமியும், திருநங்கை வேடத்தில் சரத்குமாரும் நடித்திருந்தார்கள். காமெடி, ஹாரர் கலந்து திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து, ‘காஞ்சனா 2’, ‘காஞ்சனா 3’ பாகங்கள் வெளியாகி விட்டது.
தற்போது காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப் படுகிறது. லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது காஞ்சனா 3 படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்திருக்கும் வேதிகா, இணைய தொடரில் நடிக்க நிபந்தனை போட்டிருக்கிறார். #Vedhika
வேதிகா லாரன்சுக்கு ஜோடியாக நடித்துள்ள முனி 4 படம் இந்த வாரம் வெளியாகிறது. வேதிகா அளித்துள்ள பேட்டி:
தமிழில் சில காலம் பார்க்க முடியவில்லையே?
ஆமாம். கன்னடம் மற்றும் மலையாளத்தில் அடுத்தடுத்து அமைந்த வெற்றிப் படங்கள்தான் என்னை வேறு எங்கும் செல்லவிடாமல் செய்தன. ‘சிவலிங்கா’ கன்னட படம் பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பெற்றதும் அங்கேயே தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டிய சூழலுக்கு சென்றேன். அதேமாதிரி மலையாளத்தில் திலீப், பிருத்விராஜ் படம் என்று அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்தன. மற்றபடி எந்தக் காரணமும் இல்லை. இதோ இப்போது ‘காஞ்சனா 3’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து 2 நேரடி தமிழ் படங்கள் நடிக்க உள்ளேன்.
இந்தி அனுபவம் எப்படி இருக்கிறது?
மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்தியில் இயக்குனராக அறிமுகமாகிறார். அந்த படத்தில்தான் நானும் நாயகியாக அறிமுகமாகிறேன். திரில்லர் களம். பிடித்த கதை. உடனே சம்மதித்தேன். இவற்றை எல்லாம்விட பாலிவுட் உலகம் எனக்கு புதிது. அங்கே உள்ள சினிமா வாழ்வியலை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காகவும் காத்திருக்கிறேன்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் எப்போது பார்க்கலாம்?
கதாநாயகியை மையமாக கொண்ட கதைகளில் நடித்தால்தான் ஒரு நடிகை கவனம் ஈர்க்கப்படுவார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கதாநாயகன் படங்களில் கூட நான் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த படங்களும் இங்கே உண்டு. ஹீரோயினை மையமாக கொண்ட படத்தில் நிச்சயம் நானும் நடிப்பேன். எனக்கு சர்வதேச அளவில் வெப் சீரியலில் நடக்க ஆர்வம்.
அடுத்து இயக்குனரா?
இப்போது பாலிவுட்டில் தடம் பதித்து விட்டேன். அங்கே தொடர்ந்து நடிப்புக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இப்போதைக்கு நடிப்பை தவிர வேறு எந்தக் களத்திலும் கவனம் செலுத்தப் போவதில்லை.
ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காஞ்சனா 3’ படத்தை கோடை மாதத்தில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Kanchana3
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியான படம் `முனி'. அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா ஆகியோர் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு பாடல் மட்டும் காட்சி படுத்தாமல் இருக்கிறார்கள்.
கோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் என்பதால், ஏப்ரல் மாதம் 18ம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சூளுரை எடுத்துள்ளார். #RaghavaLawrence #Lawrence
அன்னை தெரசாவின் 108–வது பிறந்தநாள், சென்னையில் கொண்டாடப்பட்டது. விழாவில் நடிகரும், டைரக்டருமான ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார். அவருக்கு, ‘அன்னை தெரசா’ விருது வழங்கப்பட்டது. விழாவில் அவர் பேசியதாவது:-
‘‘இந்த உலகில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் கருதுவது, தாயைத்தான். அம்மா இல்லையென்றால் நான் இல்லை. ராயபுரத்தில் இருந்து கோடம்பாக்கம் வந்து நானும், அம்மா மற்றும் மூன்று சகோதரிகளும் வறுமையை எப்படியெல்லாம் அனுபவித்தோம்? என்பதை சொல்லி மாளாது. அதனால்தான் நான் இப்போது சம்பாதிப்பதை ஏழை மக்களுக்கு கொடுக்கிறேன்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு சிகரெட், மது என்று எந்த பழக்கமும் இல்லை. நடன கலைஞர் ஆனபின், நண்பர்களின் வற்புறுத்தலுக்காக, எப்போதாவது ஒருமுறை குடிப்பேன். அதையும் இப்போது நிறுத்தி விட்டேன். ரொம்ப ‘டென்ஷன்’ ஆக இருந்தால், கொஞ்சம் ஒயின் அருந்துவேன். இப்போது, அன்னை தெரசா விருது பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு மரியாதை கொடுக்க, இனி ஒயின் கூட அருந்துவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன்’ என்றார்.
இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ், ராகவேந்திரா கோவிலில் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். #RaghavaLawrence
திருமுல்லைவாயலில் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் கட்டிய ராகவேந்திரா சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று ராகவேந்திரா சுவாமியின் 347-வது ஆண்டு உத்தர ஆராதனை விழா நடை பெற்றது. இந்த விழாவுக்கு முரளி கிருஷ்ணா தலைமை தாங்கினார்.
காலை 5 மணிக்கு நரசிம்ம ஹோமம் நடந்தது. 8 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. 10 மணிக்கு ஹோமமாலினி ராஜ் குழுவினர் பரதநாட்டியம் நடந்தது.
மதியம் 12 மணிக்கு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு முக்தி முரளி குழுவினரின் இன்னிசையும் மாலை 7 மணிக்கு சிறப்பு மங்களாரத்தி பூஜையும் நடந்தது.
ராகவா லாரன்ஸ், அவரது தாயார் கண்மணி அம்மாள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதி வழங்க முடிவு செய்துள்ளார். #KeralaRain #KeralaFlood #Lawrence
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவியாக வழங்க முடிவு செய்துள்ளார். இதை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வரும் 25ம் தேதி நேரில் சென்று வழங்க இருக்கிறார்.
முன்னதாக நடிகர்கள் கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.
நடிகர் விக்ரம் ரூ.35 லட்சமும், நடிகர் விஜய் ரூ.70 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief
அரண்மனை படப்பிடிப்பின் போது சுந்தர் சி.யுடன் பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட் செய்ய சொன்னதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். #SriReddy #SriLeaks #SundarC
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தமிழ் திரையுலகின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் குற்றம்சாட்டி வருகிறார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியதால் தமிழ் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.
பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிவரும் ஸ்ரீரெட்டிக்கு ஐதராபாத்தில் நுழைய தடை விதிக்கப்படலாம் என்ற வதந்தி பரவி உள்ளது.
ஐதராபாத்தில் நுழைய தனக்கு தடை விதிக்க வேண்டாம் என்று தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகரராவுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அத்துடன் அரசியல்வாதிகள் மீதும் செக்ஸ் புகார் தெரிவித்து உள்ளார்.
தற்போது நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இதுகுறித்து ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். நான் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர்.சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.
ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும் (கேமராமேன்) சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார்.
படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்... கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஸ்ரீ ரெட்டி பேஸ்புக்கில் போஸ்ட் தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks #SundarC
×
X