என் மலர்
நீங்கள் தேடியது "வில்லிவாக்கம்"
- பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
- இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன
பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், சென்னை வில்லிவாக்கம் அருகே அரியானா மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அந்த கண்டெய்னர் லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி 500க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட பாஜக கொடிகள், தொப்பிகளை பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதனை அடுத்து லாரியில் இருந்த நபர்களையும் ஓட்டுநரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடசென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்களுக்காகவும் மத்திய சென்னையில் திறக்கப்பட உள்ள அலுவலகத்திற்காக இந்த பொருட்கள் கொண்டுவரப்பட்டது என்று காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் திருவள்ளூர்-சென்ட்ரல் மார்கமாக சென்று வரும் மின்சார விரைவு ரெயில்கள் நின்று செல்லும்.
- சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலையும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தை ஒட்டி ஜி.கே.எம். காலனி, வில்லிவாக்கம் வடக்கு பகுதி, தாதங்குப்பம், ராஜமங்கலம், கொளத்தூர், சிட்கோ நகர் திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. ரெயில் நிலையம் அருகே மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கி செல்லும் பயணிகள் பெரும்பாலானோர் ரெயில் நிலைய சாலையை பயன்படுத்தி மார்க்கெட்டில் காய்கறி வாங்கி செல்வது வழக்கம். ரெயில் பயணிகள் அதிக அளவில் இந்த மார்க்கெட் சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் சாலை கடந்த 10 ஆண்டுக்கு மேலாக குண்டும் குழியுமாக மணல் சாலையாக காட்சி அளிக்கிறது.
இதனால் வில்லிவாக்கம் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள், ரெயில் பயணிகள் மற்றும் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் தினந்தோறும் பள்ளம் மேடான சாலையால் அவதிப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனஓட்டிகள் அந்த சாலையை கடந்து செல்லவேபடாதபாடு பட்டு வருகிறார்கள்.
வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் திருவள்ளூர்-சென்ட்ரல் மார்கமாக சென்று வரும் மின்சார விரைவு ரெயில்கள் நின்று செல்லும். எனவே அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் ஏராளமான பயணிகள் இங்கு இறங்கிதான் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு பணிக்கு சென்று வருகின்றனர்.
இதன்காரணமாக இங்கு உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தில் தினந்தோறும் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அவர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லும்போது இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலையும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்த சாலை உள்ள இடம் ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் வருவதாக தெரிகிறது. இதனால் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வில்லிவாக்கம் மார்க்கெட் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் தக்காளி வியாபாரி ராமமூர்த்தி கூறியதாவது:-
வில்லிவாக்கம் மார்க்கெட் சாலை கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை குண்டும் குழியுமாக போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அதிகாலை நேரங்களில் மார்க்கெட்டுக்கு லாரிகளில் சரக்கு வரும் போது திடீரென பள்ளத்தில் லாரிகள் சரிந்து சிக்கி கொள்கின்றன. இந்த சாலையை சீரமைத்தால் வியாபாரிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
குமார் (முட்டை வியாபாரி):-
குண்டும் குழியுமான இந்த சாலையின் காட்சிகள் எந்த ஆட்சியிலும் மாறவில்லை. அப்படியேத்தான் உள்ளது. இதில் நடந்து செல்லும் வயதானோர் பல நேரங்களில் தடுமாறி விழுந்து விடுகின்றனர். மார்க்கெட் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வியாபாரி பாத்திமா:-
நாங்கள் இந்த பகுதியில் தான் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். மழைக்காலங்களில் முட்டு அளவு தண்ணீர் தேங்குவதால் நடந்து செல்வது என்பது அரிதாக இருக்கும். அப்படி இருக்கும் போது வாகனத்தில் எப்படி செல்ல முடியும்? . நான் இந்த பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016 -ம் ஆண்டு வரை அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை போடப்பட்டது. அதன் பின்னர் சாலை போடப்படவில்லை. வரும் மழைக்காலத்தில் இந்த சாலையில் பொதுமக்கள் எந்த அளவுக்கு அவதிப்பட போகிறார்கள் என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது. இதில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வியாபாரிகள் சங்க நிர்வாகி தேங்காய் கடை இரா.கிட்டு:-
வியாபாரிகளின் கோரிக்யை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கபட்டது.
ஆனால் ரெயில்நிலைய டிக்கெட் கவுண்டரில் இருந்து சில மீட்டர் தூரமே அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சாலையில் இருந்து அரை அடி உயரத்திற்கு போடப்பட்ட சிமெண்ட் சாலை பாதியில் நிறுத்தப்பட்டதால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் ஏறும் போது நிலை தடுமாறு கீழே விழுகின்றனர்.
இதனால் தினந்தோறும் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட சாலையை முழுவதுமாக அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.