என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உஸ்பெகிஸ்தான்
- உஸ்பெகிஸ்தானில் ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.
- இதில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கம் வென்றார்.
தாஷ்கண்ட்:
உஸ்பெகிஸ்தானில் ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் பங்கேற்றார்.
தீபா கர்மாகர் வால்ட் பிரிவில் 13.566 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். தென் கொரியா வெள்ளிப்பதக்கம் வென்றது.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- குண்டு வெடிப்பின் போது அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீ பற்றியது.
- குண்டு வெடிப்பில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தாஷ்கண்ட்:
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட்டில் விமான நிலையம் உள்ளது. இதன் அருகே உள்ள சுங்க கிடங்கில் நள்ளிரவு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.
இந்த குண்டு வெடிப்பில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்பின் போது அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீ பற்றியது. இதில் காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
- இந்திய வீராங்கனை ருதுஜா போசெல் 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் யோன்வூ குவை வீழ்த்தினார்.
- 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.
பில்லி ஜீன் கோப்பைக்கான பெண்கள் அணிகள் டென்னிசில் ஆசிய- ஓசியானா குரூப்-1 சுற்று ஆட்டங்கள் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் போராடி வீழ்ந்தது.
ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வைதேகி சவுத்ரி 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் டாபின் கிம்மிடம் வீழ்ந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ருதுஜா போசெல் 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் யோன்வூ குவை வீழ்த்தினார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ருதுஜா போசெல்-அங்கிதா ரெய்னா இணை 4-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் ஜி ஹீ சோய்-டாபின் கிம் ஜோடியிடம் தோல்வியை தழுவியது. 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.
- நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.
- இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று உஸ்பெகிஸ்தானை சந்திக்கிறது.
பில்லி ஜீன் கோப்பைக்கான பெண்கள் அணிகள் டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்று ஆட்டம் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா வெற்றியும், ருதுஜா போசாலே தோல்வியும் கண்டனர்.
பின்னர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-ருதுஜா போசாலே கூட்டணி வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று உஸ்பெகிஸ்தானை சந்திக்கிறது.
- கோவா விமான நிலைய இயக்குனர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்துக்கு தகவல் கொடுத்தார்.
- கோவா விமான நிலைய இயக்குனர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்துக்கு தகவல் கொடுத்தார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து அஜூர் ஏர் விமானம் கோவா நோக்கி புறப்பட்டது.
பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 238 பயணிகள் இருந்தனர். 7 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
அந்த விமானம் இன்று அதிகாலை 4.15 மணியளவில் கோவா டபோலிம் விமான நிலையத்துக்கு வந்து இறங்க வேண்டும்.
இந்த நிலையில் மாஸ்கோவில் இருந்து கோவா வந்த அந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கோவா விமான நிலைய இயக்குனருக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு இமெயில் மூலம இந்த மிரட்டல வந்தது. அஜூர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து கோவா விமான நிலைய இயக்குனர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்துக்கு தகவல் கொடுத்தார்.
இதை தொடர்ந்து அந்த விமானத்தை உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டது. அந்த விமானம உஸ்பெகிஸ் தானில் அவசரமாக தரை இறங்கியது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானம் தரை இறங்குவதையொட்டி உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
விமானம் தரை இறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்துக்குள் சென்று சோதனை நடத்தினார்கள்.
ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது 2-வது நிகழ்வாகும். கடந்த 9-ந் தேதி ரஷியாவில் இருந்து கோவா வந்த இந்த நிறுவனத்தை சேர்ந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. புரளி என்பது தெரிந்தது. சோதனைக்கு பிறகு மறுநாள் அந்த விமானம் புறப்பட்டு சென்றது.
- உஸ்பெக்கிஸ்தானில் காய்ச்சல் மற்றும் சளிக்காக குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டானிக் குடித்த 18 குழந்தைகள் இறந்துள்ளனர்.
- குழந்தைகள் உயிரிழப்புக்கு அவர்கள் குடித்த டானிக் தான் காரணமா? அல்லது வேறு காரணங்களால் குழந்தைகள் இறந்தார்களா? என்பது பற்றி மருத்துவத்துறையினர் விசாரிக்க உள்ளனர்.
உஸ்பெக்கிஸ்தான் நாட்டின் தூதரகம், இந்தியாவை சேர்ந்த குழந்தைகள் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது புகார் கூறியுள்ளது.
அந்த புகாரில் உஸ்பெக்கிஸ்தானில் காய்ச்சல் மற்றும் சளிக்காக குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டானிக் குடித்த 18 குழந்தைகள் இறந்துள்ளனர்.
இந்த மருந்தை இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று வழங்கி உள்ளது. குழந்தைகளின் சாவுக்கு இந்த மருந்துதான் காரணம். என்று கூறியுள்ளது.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது உஸ்பெக்கிஸ்தான் தூதரகம் தெரிவித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகள் சாவுக்கு அவர்கள் குடித்த டானிக் தான் காரணமா? அல்லது வேறு காரணங்களால் குழந்தைகள் இறந்தார்களா? என்பது பற்றி மருத்துவத்துறையினர் விசாரிக்க உள்ளனர்.
இதற்கிடையே இந்த பிரச்சினை குறித்து உஸ்பெக்கிஸ்தானுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.
- புதினிடம் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி மோடி கூறியது தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
- சர்வதேச சமூகத்தில் இருந்து புதின் தன்னை மேலும் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.
உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோடி ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசியபோது, உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி வலியுறுத்தினார்.
இன்றைய சகாப்தம் போருக்கான காலம் அல்ல. இதை பற்றி நான் உங்களிடம் தொலைபேசியில் பேசினேன் என்றார். அதற்கு பதிலளித்த புதின், உங்கள் கவலைகள் பற்றி எனக்கு தெரியும். இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
புதினிடம் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி மோடி கூறியது தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி நிருபர்களிடம் கூறியதாவது:-
உக்ரைனில் புதின் என்ன செய்து வருகிறார் என்பதில் அவருக்கு முழு அனுதாபம் கிடைக்கவில்லை என்பது உஸ்பெகிஸ்தானில் இந்தியா, சீனா ஆகிய இரு தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சுட்டிக் காட்டுவதாக நினைக்கிறேன் என்றார்.
அப்போது இந்தியாவை போல் மற்ற நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக மாற்றிக் கொள்ளும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று ஜான் கிர்பியிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஜான் கிர்பி கூறும் போது, சர்வதேச சமூகத்தில் இருந்து புதின் தன்னை மேலும் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். உக்ரைனில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்து, ரஷியாவுடன் வழக்கம் போல் வர்த்தகத்தை செய்ய வேண்டிய நேரம் இது என்று நாங்கள் நம்பவில்லை.
ரஷியாவிடம் வணிகம் செய்வது சரி என்று எப்படி தீர்மானிக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. புதினை எதிர்த்து குரல் கொடுக்காத மற்றும் கடுமையாக இல்லாத நாடுகள்கூட உக்ரைனில் அவர் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளது. அங்கு நடப்பது முற்றிலும் கொடூரமானது.
புதின் மற்றும் அவரது வீரர்கள் மிக மோசமான முறையில் என்ன செய்தார்கள் என்பது பற்றி சர்வதேச சமூகத்தின் மற்றவர்களுக்கு மேலும் தெளிவாக தெரிவிக்கிறேன் என்றார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் கூறும்போது, உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகள் பற்றி சர்வதேச அளவில் உள்ள கவலைகளை சீனா, இந்தியா தெரிவித்துள்ளது. இந்த போர் உக்ரைன் மக்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நாடுகள் மற்றும் மக்கள் மீது பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
ரஷியாவின் போரால் உணவு பாதுகாப்பில் சவால்கள் ஏற்பட்டுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள தலைவர்களின் உணர்வும் ஒன்றாக உள்ளது. இந்த போர், மக்களின் நலன்களுக்கு எதிரான வெளிப்பாடு. இது போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று நினைக்கிறேன் என்றார்.
புதினிடம் போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியதற்கு, இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
- உக்ரைன் போர் குறித்து ரஷிய அதிபரிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் மீதான படையெடுப்புக்காக ரஷியாவை இந்தியா இதுவரை விமர்சிக்கவில்லை.
தாஷ்கண்ட்:
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவும் ரஷியாவும் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்றைய சகாப்தம் போருக்கானது அல்ல. அமைதிப் பாதையில் எவ்வாறு நாம் முன்னேறலாம் என்பதைப் பற்றி பேச இன்று நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியா - ரஷியா இரு தரப்பு விஷயங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாம் பலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்பதற்காக உதவிய ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்" என்றார்.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பிறகு புதினும் மோடியும் நேருக்கு நேர் முதல் முறையாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த புதின், 'உக்ரைன் மோதல் விஷயத்தில் உங்களின் நிலைப்பாட்டை நான் அறிவேன். போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்' என்றார்.
உக்ரைன் மீதான படையெடுப்புக்காக ரஷியாவை இந்தியா இதுவரை விமர்சிக்கவோ, கண்டனம் தெரிவிக்கவோ இல்லை. பேச்சுவார்த்தை மூலம் சிக்கலை தீர்க்கவேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தியாவும் ரஷியாவும் பனிப்போர் காலத்திலிருந்தே நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளன. அத்துடன், ரஷியா இந்தியாவிற்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் முக்கிய நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
- நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது.
தாஷ்கண்ட்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் பங்கேற்ற 2 நாள் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கொரோனா தொற்று நோய் காலத்திற்குப் பிறகு, உலகம் பொருளாதார மீட்சிக்கான சவாலை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா காலம் மற்றும் உக்ரைன் போர், உலகளாவிய விநியோக சங்கிலியில் தடைகளை உருவாக்கியது. இதன் விளைவாக உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் நெருக்கடி ஏற்பட்டது.
ஷாங்காய் அமைப்பு எங்கள் பிராந்திய பகுதியில் நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலியை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இதற்கு சிறந்த இணைப்பு மற்றும் போக்குவரத்து உரிமைகளை வழங்குவது முக்கியம். நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது.
இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு பாரம்பரிய மருந்துகளுக்கான மையத்தை குஜராத்தில் தொடங்கியது. பாரம்பரிய சிகிச்சைக்கான முதல் மற்றும் ஒரே உலகளாவிய மையம் இதுவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்குகிறது.
- கொரோனாவால் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு கடந்த 2 ஆண்டாக நடக்கவில்லை.
தாஷ்கண்ட்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019-ம் ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன்பிறகு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று மாலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரைச் சென்றடைந்தார்.
இந்த மாநாட்டின் போது மோடி உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்.
உக்ரைனில் ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கிய பிறகு, பிரதமர் மோடி மற்றும் புதின் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் களைய இந்தியா உறுதி பூண்டுள்ளது.
- தாஷ்கண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தாஷ்கண்ட்:
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாட்டில், பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிராக தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் களைந்து பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலவச் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது.
தீவிரவாதிகளின் புகலிடமாக ஆஃப்கன் பிராந்தியத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, ஆப்கானிஸ்தானில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ இந்தியா ஆதரவு அளிக்கிறது.பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தேசிய அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அனைத்து வழிகளிலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
ரஷியா உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வுகாண இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற இந்தியா ஆதரவு அளிக்கிறது.அங்கு மனிதநேய உதவி அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ நா பொதுச் செயலாளர், ஐ நா அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக தாஷ்கண்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு ராஜ்நாத்சிங் மரியாதை செலுத்தினார். அவரது எளிமை மற்றும் நேர்மைக்காக, மறைவுக்கு பின்னர் அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்