என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா
![சிம்புவுடன் இணையும் கார்த்திக் நரேன் சிம்புவுடன் இணையும் கார்த்திக் நரேன்](https://img.maalaimalar.com/Articles/2018/Jun/201806270850259647_STR-and-Karthick-Naren-to-join-hands-for-Vijaya-Productions_SECVPF.gif)
X
சிம்புவுடன் இணையும் கார்த்திக் நரேன்
By
மாலை மலர்27 Jun 2018 8:50 AM IST (Updated: 27 Jun 2018 8:50 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சிம்புவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சிம்பு அடுத்ததாக இளம் இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #STR34 #KarthikNaren
வெங்கட் பிரபுவுடனான சந்திப்புக்கு பிறகு, சிம்பு சமீபத்தில் `துருவங்கள் பதினாறு' பட இயக்குநர் கார்த்திக் நரேனையும் சந்தித்திருக்கிறார்.
சிம்பு - கார்த்திக் நரேன் இடையேயான சந்திப்பின் போது கார்த்திக் நரேன், சிம்புவிடம் த்ரில்லர் கதை ஒன்றை கூறியிருப்பதாகவும், சிம்பு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் அடுத்த கட்ட பணிகள் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், கார்த்திக் நரேன் அடுத்ததாக `நாடகமேடை' படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார். `நாடகமேடை' படத்தின் பணிகள் தாமதமாகி இருக்கும் நிலையில், கார்த்திக் நரேன் முதலில் சிம்புவை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201806270850259647_1_STR34-STR-Karthik-Naren2._L_styvpf.jpg)
இதுதவிர கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படத்திலும் சிம்பு நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி, சிம்பு இயக்கும் படம் மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 என அடுத்தடுத்து சிம்பு பிசியாக இருப்பதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனவே சிம்புவின் அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு நடிப்பில் அடுத்ததாக `செக்கச் சிவந்த வானம்' விரைவில் ரிலீசாக இருக்கிறது. #STR34 #KarthikNaren
Next Story
×
X