search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஸ்வாசம் அப்டேட் - மீண்டும் வீரம் லுக்குக்கு மாறிய அஜித்
    X

    விஸ்வாசம் அப்டேட் - மீண்டும் வீரம் லுக்குக்கு மாறிய அஜித்

    சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஐதராபாத் சென்றுள்ள நிலையில், அஜித்தின் தற்போதைய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Viswasam #AjithKumar
    அஜித் - சிவா 4-வது முறையாக இணைந்திருக்கும் படம் ‘விஸ்வாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் துவங்கியிருக்கிறது. அதற்காக விஸ்வாசம் படக்குழு சென்னையில் நேற்று ஐதராபாத் சென்றுள்ளது. 

    அஜித், இயக்குநர் சிவா சென்னை விமான நிலையத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அஜித் வெள்ளை முடி, தாடியுடன் வீரம் பட லுக்கில் தோற்றமளிக்கிறார். இன்று நடக்கும் விஸ்வாசம் படப்பிடிப்பில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களும் பங்கேற்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பும் படக்குழு அடுத்ததாக, அஜித்தின் இளமை தோற்றம் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க இருக்கிறது.

    இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #Viswasam #AjithKumar
    Next Story
    ×