என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிகம்
![சித்தூரில் கங்கையம்மன் திருவிழா 17, 18-ந்தேதிகளில் நடக்கிறது சித்தூரில் கங்கையம்மன் திருவிழா 17, 18-ந்தேதிகளில் நடக்கிறது](https://img.maalaimalar.com/Articles/2016/May/201605110916372044_gangai-amman-temple-festival-on-17th-and-18th_SECVPF.gif)
X
சித்தூரில் கங்கையம்மன் திருவிழா 17, 18-ந்தேதிகளில் நடக்கிறது
By
மாலை மலர்11 May 2016 9:16 AM IST (Updated: 11 May 2016 9:16 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சித்தூரில் கங்கையம்மன் திருவிழா 17, 18-ந்தேதிகளில் நடக்கிறது
சித்தூரில் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் கங்கையம்மன் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிகழ்ச்சி நிரல் பற்றிய சுவரொட்டிகள் வெளியீட்டு விழா நேற்று சித்தூரில் உள்ள பொன்னியம்மன் கோவில் முன்பு நடந்தது. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., சி.கே.பாபு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சித்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கங்கையம்மன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் கங்கையம்மன் திருவிழா கோலாகலமாக நடத்தப்படும். திருவிழாவை யொட்டி இன்று (அதாவது நேற்று) காலை காப்புக் கட்டப் பட்டது. மேலும் அம்மன் சிலை வைக்கும் இடம், பஜார் தெருவில் சிறப்பு பூஜைகள் நடத்தும் இடம் ஆகியவை தேர்வுப்பட்டுள்ளது.
மேற்கண்ட 2 நாட்களும் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு பாட்டுக் கச்சேரி நடக்கிறது. ஓம் சக்தி அம்மன் குழுவினர் நேர்த்திக்கடன்படி லாரி, ஆட்டோக்கள், தேர் ஆகியவற்றை இழுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம். கங்கையம்மன் திருவிழாவை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து கங்கை யம்மன் திருவிழா நிகழ்ச்சி நிரல் அடங்கிய சுவரொட்டிகள் வெளியீட்டு விழா நடந்தது. அதில் சி.கே.பாபு மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டு சுவரொட்டிகளை வெளியிட்டனர்.

Next Story
×
X