search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாலமேடு அருகே நடந்த கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    பாலமேடு அருகே நடந்த கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

    பாலமேடு அருகே நடந்த கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் கைகொண்ட அய்யன், சுடலை மாடசாமி மற்றும் உப கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது.

    இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் சிறப்பு பூஜைகள் முதல்நாள் நடந்தது. அன்று மாலையிலும் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாத்துதல் போன்ற நிகழ்வு கள் நடந்தது. மறுநாள் காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

    அதைதொடர்ந்து மேளதாளம் முழங்க யாக சாலையில் வைக்கப் பட்டிருந்த ராமேசுவரம், கும்பகோணம், பாபநாசம், அழகர்மலை, வைகை நதி, காசி, உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த தீர்த்தகுடங்கள் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கு சிவாச்சாரியர் களின் வேத மந்திரங்கள் முழங்க குடம்குடமாக கலசத்தில் தீர்த்தங்கள் ஊற்றப்பட்டன. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. கோவிலை சுற்றி நின்ற பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த் தங்களும் வழங்கப்பட்டன.

    விழாவையொட்டி சுற்று வட்டாரங்களிலிருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை சத்திரவெள்ளாளபட்டி கிராம பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.

    Next Story
    ×