என் மலர்
ஆன்மிகம்

X
துர்க்கை அம்மனின் கைகளில் உள்ள ஆயுதங்களும் - அதன் அர்த்தங்களும்
By
மாலை மலர்13 July 2016 9:32 AM IST (Updated: 13 July 2016 9:32 AM IST)

இந்து புராணத்தில் புகழ் பெற்ற கடவுளாக விளங்குகிறார் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனின் பத்து கைகள் எதனை குறிக்கிறது என்பதை பார்க்கலாம்.
மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக பார்க்கப்படும் துர்க்கை படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற அனைத்து செயல்களையும் வழி நடத்துகிறார். துர்கா என்ற வார்த்தைக்கு 'வெல்ல முடியாத' என்ற அர்த்தமாகும். மனிதர்களின் கவலைகளையும், துன்பங்களையும் போக்குபவராக விளங்குகிறார் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனின் பத்து கைகள் மற்றும் அதில் இருக்கும் பத்து விதமான ஆயுதங்கள் தான் முதலில் கவனத்திற்கு வரும்.
துர்க்கை கையில் இருக்கும் ஒவ்வொரு ஆயுதமும் ஒவ்வொன்றை குறிக்கும். துர்க்கை அம்மனின் பத்து கைகள் எதனை குறிக்கிறது என்பதை பார்க்கலாம்.
வில்லும் அம்புகளும் :
கடவுளின் கையில் இருக்கும் வில்லும் அம்புகளும் ஆற்றலை குறிக்கும். தன் கையில் வில்லையும் அம்புகளையும் ஏந்தி நிற்பதால், அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து ஆற்றல் சக்திகளையும் கட்டுப்படுத்துபவர் அவர் என்பதை அது குறிக்கும்.
இடியேறு :
கடவுளின் கையில் இருக்கும் இடியேறு அவரின் திடத்தை குறிக்கும். சவால்களை சந்திக்கும் போது இடியை மனதில் வைத்துக் கொண்டு சவால்களை சந்திக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு இது தூண்டுதலாக விளங்கும்.
பாதி மலர்ந்த தாமரை :
துர்க்கை அம்மன் கையில் இருக்கும் பாதியாக பூத்த தாமரை, வெற்றி நிரந்தரமல்ல என்பதை குறிக்கும். மேலும் சேருக்கு மத்தியில் தாமரை பூப்பதை போல், உலகத்தில் உள்ள பல சுகங்களுக்கு மத்தியில் மனித மனது ஆன்மீகத்தை நாட வேண்டும் என்பதையும் குறிக்கும்.
வாள் :
துர்க்கை அம்மன் கையில் இருக்கும் வாள் அறிவை குறிக்கிறது. அறிவே உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது என்பதை குறிக்கிறது வாளின் பளபளப்பும் கூர்மையும். மேலும் அது துரு பிடிப்பதும் இல்லை என்பதையும் குறிக்கிறது.
சுதர்சன் சக்ரா :
உலகம் தன் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்குகிறது என்பதை கடவுளின் ஆள் காட்டி விரலில் அழகாக சுழலும் சக்கரம் குறிக்கிறது. தீய சக்திகளை அளிக்க துர்க்கை அம்மன் இந்த ஆயுதத்தை பயன்படுத்துவார்.
திரிசூலம் :
திரிசூலம் என்பது மூன்று அம்சங்களை குறிக்கும் - சத்வா, ராஜாஸ் மற்றும் தாமாஸ். அமைதியையும் மோட்சத்தையும் அடைய ஒருவர் இந்த மூன்று அம்சங்களையும் சரிசமமாக கொண்டிருக்க வேண்டும்.
அபாய முத்திரை :
கடவுளின் ஒரு கை எப்போதும் தன் பக்தர்களை ஆசீர்வதிக்கும் அபாய முத்திரையை கொண்டிருக்கும். தன் பக்தர்களை பயத்திலிருந்து எப்போதும் காப்பதை இது குறிக்கும்.

Next Story
×
X