என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிகம்
![கண்ணனின் முகத்தழகு கண்ணனின் முகத்தழகு](https://img.maalaimalar.com/Articles/2016/Sep/201609011258166738_cute-kannan_SECVPF.gif)
X
கண்ணனின் முகத்தழகு
By
மாலை மலர்1 Sept 2016 12:58 PM IST (Updated: 1 Sept 2016 12:58 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கண்ணன் அழகிய திருமேனியையுடையவன், அவனுடைய குழலோசை இனியது, அந்த ஓசையால் பூரிப்படைந்த சந்திரனைப் போன்ற முகம் அவனுடையது.
கண்ணனின் புன்சிரிப்பு இனிமை மிக்கது. புன்சிரிப்பென்ற அமுதத்தால் அழகு பெற்ற தாமரை முகக்கொழுத்த மயில் இறகால் அலங்கரிக்கப்பட்ட திருமுகமனதிற்கினியதாயிருக்கும் விசாலமான கண்களையுடையது. கிருஷ்ணனின் கண் தாமரை மொட்டு போன்றது, அவனுடைய கன்னப்பிரதேசம் கண்ணாடி போல் வழவழப்பும் மென்மையும் உடையது. அவனுடைய முகம் தாமரை போன்றது, வேணுகானமாகிற தேன் நிரம்பியது.
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குழந்தை வடிவம் கொண்டவன், அழகிய திருமேனியையுடையவன், அவனுடைய குழலோசை இனியது, அந்த ஓசையால் பூரிப்படைந்த சந்திரனைப் போன்ற முகம் அவனுடையது. கண்ணனின் முகம் லட்சுமி தேவியின் கையில் விளையாட்டாக இருந்து கொண்டிருக்கும் தாமரை போன்ற முகம். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருப்பவன், ரகசியமான பாவனைகளைப் புல்லாங்குழலின் துவாரங்களில் நுழைத்து வாசிப்பவன், ஊஞ்சலின் ஆட்டம் போன்ற பார்வையை உடையவன், கண்களுக்கு இனியவன்.
அவனது சிரிப்பு வெட்கத்துடன் கூடியது போலும், அதுஅழகானது, தேனால் நனைக்கப்பட்டது போன்ற கீழுதடு, அது காந்தியால் பிரகாசிப்பது. பூர்ண சந்திரனே கொண்டாடுகிற (சந்திர) முகத்தையுடையவன். சூரியனுடைய கிரகணங்கள் பனியை விரட்டியடிப்பவை இக்கிரகணங்களால் மெதுவாகத் தொடப்பட்டது. அழகுடன் கூடியது, மிக்க மகிழ்ச்சி தருவது, அப்படிப்பட்ட புஷ்பத்துக்கு சமமான கண்கள் கிருஷ்ணனுடையவை, கோகுலப் பெண்களுடன் விளையாட்டாகச் சண்டை போட்டான். ஜெயித்தவன் அவனே, இந்த லீலையால் கர்வமடைந்து மகிழ்கிற சந்திரனைப் போன்ற முகத்தையுடையவன்.
கண்ணனுடைய புல்லாங்குழலின் நாதம், அவனுடைய கை விரல்களால் அது மீட்டப்படுகிறது. அந்த விரல் தாமரையின் இதழ் போன்றவை. அந்த இனிமையான நாதத்தில் பெருகுகிற அமுதம் நிறைந்த தடாகம் போன்றவன் அவன். அவனுடைய புன்முறுவல் இயற்கையான ஆனந்த ரசம் நிரம்பியது. அந்த ரசத்தை எப்போதும் தாங்குகிற கீழுதடு ரத்னம் போன்றது. தன்னைத் தானாகவே கோகுலத்தில் பிறப்பை எடுத்துக் கொண்டவன், ஆனால் சர்வ வியாபகனான பகவான் அவன், அதிசயமான வேஷதாரியானவன், சம்கார பயத்திற்கு ஒரே மருந்தானவன்.
காதுகளில் தொங்கட்டான், பூக்கொத்தினுடைய இதழ்கள் அவனுடைய கன்னப் பிரதேசத்தை சிவப்பாகச் செய்கின்றன. பரிசுத்தமானவன். வேத வாக்கியங்களுக்கும் எட்டாதவன். கண்ணனின் கண்கள் நீலோத்பலம் போன்றவை. அவனுடைய உதடுகள் இரு பாதியாக பிரிக்கப்பட்ட அரும்பு போன்றவை. அவனுடைய கைவிரல் நுனிகள் வேகமாகப் புல்லாங்குழலின் மேல் அசையும், அக்குழலின் இனிமையை அவன் அனுபவிக்கிறான்.
ஸத்த-சித்து-ஆனந்தம் ஆகியவையே ரூபமாக உடையவன், எல்லா மாயையையும் ஒழித்தவன், சத்தியமென்ற தனத்துக்கு சகாயமாயிருப்பவன், மனத்திடனடக்கமும், புலன்களின் அடக்கமும் சாந்தமும் கூடுமிடம், எல்லா விக்கனங்களும் நீங்கிய இடம், நல்ல இதயம் படைத்த ஜனங்களின் ஆஸ்தியானவன்.
சிரசில் மயிலிறகு, நெற்றித் தலத்தில் கஸ்தூரி- திலகம், இரு காதுகளிலும் பச்சிலைகள், மூக்கில் முத்து, கழுத்தில் தொங்கும் முத்து மாலை, மந்தாரப்பூ மாலையின் வாசனையுடன் விளங்குவது. மஞ்சள் பட்டாடையுடனும் புல்லாங்குழலுடனும் உள்ள கண்ணனை கோகுலப் பெண்கள் சூழ்ந்திருக்கின்றனர். அவ்வாறானவன் நம்மை ரட்சிக்கட்டும்.

Next Story
×
X