search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் அருள்பாலித்ததையும், பக்தர்கள் குண்டம் இறங்கியதையும் படத்தில் காணலாம்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் அருள்பாலித்ததையும், பக்தர்கள் குண்டம் இறங்கியதையும் படத்தில் காணலாம்.

    மேட்டுப்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

    மேட்டுப்பாளையம் மாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு செய்தனர்.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாக்குக்கார வீதியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அக்னி கம்பம் நடுதல், அம்மனுக்கு தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள், குண்டம் திறந்து அக்னி வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாகாளியம்மன் பவானி ஆற்றங்கரையில் இருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக சென்று கோவிலை வந்தடைந்தார்.



    இதையடுத்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் தலைமை பூசாரி தட்சிணாமூர்த்தி குண்டத்தை வலம் வந்து சிறப்பு பூஜைக்கு பின்னர் மல்லிகை பூப்பந்தை குண்டத்தில் வீசி கையில் வேலுடன் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள் சிவகுமார் கற்பூர தட்டு எடுத்தும், தினேஷ் படைகலம் எடுத்தும், கண்ணன் சிவன்கரகம் எடுத்தும், தனசேகர் சக்தி கரகம் எடுத்தும் குண்டம் இறங்கினார்கள்.

    அதன்பின்னர் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது சிலர் குழந்தைகளை கையில் ஏந்திக்கொண்டு குண்டம் இறங்கியது மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து பக்தர் கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×