search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்கொடியேற்றத்துடன் தொடங்கியது

    பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, கோவில் நடை திறக்கப்பட்டு வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், காலை 8.30 மணிக்கு உற்சவமூர்த்திகள் கோவில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர்.

    தொடர்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 9 மணிக்கு ஆடிப்பூர உற்சவ கொடி ஏற்றப்பட்டது. அப்போது, அங்குகூடியிருந்த ஏராளமான பக்தர்கள் ஓம்நமச்சிவாய, சிவாயநம என்ற பக்திகோஷங்களை எழுப்பி, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, சாமி வீதி உலா நடைபெற்றது. ஆடிப்பூர உற்சவத்தில் வருகிற 25-ந் தேதி அம்மன் தேரோட்டமும், 26-ந் தேதி ஆடிப்பூர வளைகாப்பு உற்சவமும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள், குருக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×