என் மலர்
ஆன்மிகம்
X
பராசக்தி மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
Byமாலை மலர்29 July 2017 9:24 AM IST (Updated: 29 July 2017 9:24 AM IST)
கடலூர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று செடல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தமாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் செடல் உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடலூர்புதுக்குப்பம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் எழுந்தருளி உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் 52-வது ஆண்டு செடல் உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.விழாவையொட்டி பெண்ணையாற்றில் இருந்து பக்தர்கள் சக்தி கரகத்தில் புனிதநீர் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் புனிதநீரால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அம்மனுக்கு படைக்கப்பட்ட கூழை பக்தர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வழங்கினார். லீமா அய்யப்பன் அன்னதானம் வழங்கினார். விழாவில் ஆயுதப்படை ஆய்வாளர் சிவசங்கரன், கோ.சூரியமூர்த்தி, தங்கமணி, தொழில் அதிபர் எஸ்.பி.கே.உமாச்சந்திரன், சரவண பெருமாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் செடல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் தங்கள் உடலில் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினார்கள். இரவில் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணன், குமார், ராமு, ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story
×
X