என் மலர்
ஆன்மிகம்

X
காவிரி ஆறு பகவத்படித்துறையை பேரூர் ஆதீனம் இளைய சன்னிதானம் மருதாசல அடிகளார் பார்வையிட்ட போது எடுத்த படம்.
காவிரி புஷ்கர விழா: கும்பகோணத்தில் 19-ந்தேதி புனித நீராடல் - மகா ஆரத்தி
By
மாலை மலர்30 Aug 2017 10:54 AM IST (Updated: 30 Aug 2017 10:54 AM IST)

காவிரி புஷ்கர விழாவையொட்டி கும்பகோணத்தில் 19-ந் தேதி காவிரியில் புனித நீராடல் மற்றும் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறுவதாக பேரூர் ஆதீனம் இளைய சன்னிதானம் மருதாசல அடிகளார் கூறினார்.

கும்பகோணத்தில் காவிரி ஆற்றை புஷ்கர விழாக்குழுவினர் பார்வையிட்டனர். பின்னர், விழா பத்திரிகையினை அகில பாரத துறவியர் சங்க செயலாளர் சுவாமி ராமானந்தா வெளியிட் டார். அதனை விழாக்குழு சார்பில் கல்யாணசுந்தரம், சத்தியநாராயணன், முரளி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர், கோவை பேரூர் ஆதீனம் இளைய சன்னிதானம் மருதாசல அடிகளார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி புஷ்கர விழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மலையில் இருந்து வங்கக் கடலில் கலக்கும் பூம்புகார் வரை கொண்டாட உள்ளோம்.
துலா கட்டமான மயிலாடுதுறையில் புஷ்கர விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் காவிரி புஷ்கர விழாவையொட்டி கும்பகோணத்தில் வருகிற 19-ந் தேதி காவிரி ஆற்றில் பகவத்படித்துறையில் காலையில் புனித நீராடலும், மாலையில் மகா ஆரத்தியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
காவிரி அன்னையை போற்றும் விதத்தில் 6 அடி உயரத்தில் கற்சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலைகள் காவிரி ஆற்றின் கரையான குளித்தலை, திருவாலங்காடு, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளது.
செப்டம்பர் முதல் வாரத்தில் கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து புஷ்கர விழாவின் போது காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்துவோம். அதே போல் தமிழகத்தில் ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி ஆற்றில் நீராடும் அளவுக்கு நீரை பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் புனித நீராட ஏதுவாக அதற்கான அனைத்து கட்டமைப்புகளையும் அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×
X