என் மலர்
ஆன்மிகம்
X
சிறுவாச்சூரில் புற்று மாரியம்மன் கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்4 May 2018 10:56 AM IST (Updated: 4 May 2018 10:56 AM IST)
தலைவாசலை அடுத்த சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தலைவாசலை அடுத்த சிறுவாச்சூர் கிராமத்தில் புற்று மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி சக்தி அழைத்தல், சொற்பொழிவு, திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியசாமிக்கு அபிஷேகம், அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். பிறகு சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் புற்று மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் தலைவாசல், வரகூர், புத்தூர், ஊனத்தூர், மணிவிழுந்தான் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் புற்று மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் தலைவாசல், வரகூர், புத்தூர், ஊனத்தூர், மணிவிழுந்தான் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X