search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிளி முகம் கொண்ட சுக முனிவர்
    X

    கிளி முகம் கொண்ட சுக முனிவர்

    வேதங்களை நான்காக பகுத்தவரும், புராணங்களில் பலவற்றை எழுதியவருமான வேதவியாசரின் மகன் தான் சுக முனிவர். இவர் கிளி முகம் கொண்டவர்.
    வேதங்களை நான்காக பகுத்தவரும், புராணங்களில் பலவற்றை எழுதியவருமான வேதவியாசரின் மகன் தான் சுக முனிவர். மிகுந்த நினைவு சக்தி கொண்ட இவரால் வேதங்களையும், சாஸ்திரங்களையும் நொடிப்பொழுதில் கற்க முடிந்தது. சுக முனிவர் கிளி முகம் கொண்டவர்.

    இவரை அடிக்கடி திருமணம் செய்து கொள்ளச் சொல்லி, வியாசர் வற்புறுத்திய காரணத்தால் வீட்டிற்கு வருவதை தவிர்த்தார். பின்னர் கெஞ்சிக் கூத்தாடி அழைத்ததன் பேரில் சுக முனிவர், வீட்டிற்கு வந்தார். அதன் பிறகும் கூட வியாசர், மகனை திருமணத்திற்கு கட்டாயப்படுத்த முயல, சுக முனிவர் மீண்டும் அங்கிருந்து சென்றார்.

    அவரைப் பின் தொடர்ந்தார் வியாசர். வான் வழியாக அவர்கள் இருவரும் பறந்து சென்றனர். அப்போது ஒரு குளத்தில் பெண்கள் பலரும் குளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் குளத்தை சுக முனிவர் கடந்து சென்றார். அதே போல் வியாசரும் அந்த வழியாக வந்தபோது, பெண்கள் அனைவரும் தங்கள் உடலை மறைத்துக் கொண்டனர்.

    அப்போது வியாசர் அதிர்ச்சியடைந்து, “பெண்களே! என்னை விடவும் என் மகன் வயதில் சிறியவன். அவனைப் பார்த்து நீங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் வயதான என்னைப் பார்த்து உங்கள் உடலை மூடிக்கொள்கிறீர்களே” என்றார்.

    அதற்கு அந்தப் பெண்கள், “சுக முனிவர் அனைத்தையும் துறந்தவர். அவர் கடவுளுக்கு நிகரானவர். தாங்கள் பெரும் தவசி என்றாலும், நீங்கள் ஒரு மனிதராகவே எங்களுக்கு தெரிகிறீர்கள்” என்று கூறினர்.
    Next Story
    ×