search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை உருண்டை
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை உருண்டை

    குழந்தைகளுக்கு சாப்பிட சத்தானது இந்த வேர்க்கடலை உருண்டை. இந்த வேர்க்கடலை உருண்டையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை - 200 கிராம்
    வெல்லம் - 200 கிராம்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

    செய்முறை :

    * வேர்க்கடலையைத் தோல் நீக்கிக்கொள்ளவும்.



    * வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி, உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும்.

    * ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை போட்டு அதனுடன் வெல்ல பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

    * சத்தான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை உருண்டை ரெடி.

    * இந்த வேர்க்கடலை உருண்டையை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து ஒரு வாரம் வரை சாப்பிடலாம்.

    குறிப்பு: புரதமும், இரும்புச்சத்தும் இதில் மிக அதிகம். ரத்த சோகை வராது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×