search icon
என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி வந்தனர்.
    • ஆட்டோ டிரைவர்களின் தற்கொலைகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் துயரமாக மாறிவிட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ.க்கள் கே.டி. ராமராவ் தலைமையில் ஆட்டோ டிரைவர் சீருடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

    ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அவர்கள் வந்தனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 நிதியுதவி மற்றும் நல வாரியம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. ஆட்டோ டிரைவர்களின் தற்கொலைகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் துயரமாக மாறிவிட்டது.

    ஆட்டோ டிரைவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

    தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்த ப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளனர். நாங்கள் ஆட்டோ டிரைவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் ஆட்டோ டிரைவர்கள் சீருடை அணிந்து வந்ததால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மார்ச் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.
    • ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது.

    தெலுங்கானாவில் அரசு விடுதியில் தங்கி படித்து வரும் 10 வகுப்பு மாணவி தொடர்ந்து 15 முறை ஏற்பட்ட எலிக் கடி காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கம்மம், தானவாய்குடத்தில் பி.சி. நல விடுதியில் தங்கி அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லக்ஷ்மி பவானி கீர்த்தி என்ற மாணவியை, இந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.

    ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து எலி கடித்ததால் லட்சுமிக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் புவ்வாடா அஜய் குமாரின் தலையீட்டுக்கு பின்னர், மாணவி தற்போது மம்தா பொது மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

    லட்சுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, குணமடைந்து வரும் நிலையில், நரம்பியல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு விடுதிகளில் நிலை குறித்து ஆளும் காங்கிரஸ் அரசை பிஆர்எஸ் கட்சி விமர்சித்துள்ளது.

    • அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.
    • அவரது மனைவி கண்ணீர் விடுவது என இணையத்தில் வீடியோக்கள் உலா வருகின்றன.

    அல்லு அர்ஜுன் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் பார்க்க சென்றபோது, தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் [டிசம்பர் 13] அவரை அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் உடனடி ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை சிறையில் இருந்து ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.

     

    அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    அல்லு அர்ஜுன் வீட்டுக்கு வந்தவுடன் அவருடைய தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷ் அவரை நோக்கி ஓடிச் செல்வதும், அதன்பின் தன்னுடைய மகனை அல்லு அர்ஜுன் ஆராதழுவி நெகிழ்ச்சி அடைந்தது, அவரது மனைவி கண்ணீர் விடுவது என இணையத்தில் வீடியோக்கள் உலா வருகின்றன.

    இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா 'நான் ஒன்றும் அழவில்லை' என்று ஆறுதல் கூறி கண் கலங்கியுள்ளார்.

     

    மேலும் தமிழ் இயக்குனரும் நயன்தாரா கணவருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் 'இதை பார்க்க தான் காத்திருந்தேன்' என அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறியுள்ளார். 

     

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐதராபாத் போலீசார் நேற்று கைது செய்த நிலையில் உள்ளூர் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கியது.
    • தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    புஷ்பா 2 படத்தை பார்க்க முன் அறிவிப்பின்றி தியேட்டருக்கு சென்றதால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டு அதில் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஐதராபாத் போலீசார் நேற்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதிமன்றம் அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சஞ்சல்கடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே தெலுங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. 50 ஆயிரம் ரூபாய் பிணையுடன் 14 நாட்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இருந்த போதிலும் சிறைத்துறை அதிகாரிகள் அவரை ரிலீஸ் செய்ய மறுத்துவிட்டனர்.

    இன்று காலை நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அல்லு அர்ஜூனை அவரது தந்தை அல்லு அரவிந்த் மற்றும் மாமனார் கஞ்சர்லா சந்திரசேகர் ரெட்டி ஆகியோர் சிறைவாசலில் வரவேற்றனர்.

    • ஐதராபாத் போலீசாரால் அல்லு அர்ஜூன் இன்று கைது செய்யப்பட்டார்.
    • தெலுங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

    தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் இன்று கைது செய்யப்பட்டது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத் போலீசார் இன்று காலை அல்லு அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதிமன்றம் அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில், தெலுங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

    இதற்கிடையே பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் ராம ராவ், அல்லு அர்ஜூன் கைது தேவையற்றது. பொதுவான குற்றவாளிகளை போன்று அல்லு அர்ஜூனை நடத்துவது பொருத்தமற்றது என தெலுங்கான காங்கிரஸ்க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

    அல்லு அர்ஜூன் கைதை பா.ஜ.க. தலைவர்களும் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் அல்லு அர்ஜூன் கைது விவகாரத்தில் யாருடைய தலையீடும் இருக்காது. சட்டம் தன் கடமையை செய்யும் என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்பு டீம் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீது 105 (கொலைக்கு உரியதல்ல ஆனால் குற்றமிழைக்கக் கூடிய கொலை) மற்றும் 118(1) (காயம் உண்டாக்குதல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளது. தியேட்டர் உரிமையாளர் மற்றும் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • போலீசார் இன்று அல்லு அர்ஜூன் வீடு சென்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
    • பின்னர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்வா 2 திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க, அல்லு அர்ஜூன் சிக்கடப்பள்ளியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றார்.

    அல்லு அர்ஜூன் படம் பார்க்க வந்ததை அறிந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்ப்பதற்காக அதிக அளவில் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி என்ற 35 வயது பெண் மற்றும் அவரது 8 வயது மகன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சிக்கடப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கடந்த சில நாட்களாக போலீசார் எந்த நடவடிக்கையில் எடுக்காமல் இருந்தனர். இந்த நிலையில இன்று ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜூன் வீடு சென்று அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அவரை கைது செய்ததாக அறிவித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதிமன்றம் அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்.

    இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர், வழக்கு திரும்பப்பெற தயாராக இருப்பதாக தகவல் வெளியாகிள்ளது.

    அல்லு அர்ஜூன் மக்கள் தொடர்பு குழு, ரேவதியின் கணவர் வழக்கை திரும்பப் பெற தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    "நான் வழக்கை திரும்பப் பெற தயாராக இருக்கிறேன். அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது பற்றி எனக்குத் தெரியாது. என் மனைவி இறந்த கூட்ட நெரிசலுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" ரேவதியின் கணவர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    கூட்ட நெரிசலில் ரேவதி உயிரிழந்தது கடந்த 4-ந்தேதியாகும். சமார் ஒருவாரம் கழித்து போலீசார் அவரை கைது சயெ்துள்ளனர். புதிய குற்றவியல் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) கீழ் ரேவதியின் குடும்பத்தினர் கொடுக்க புகார் அடிப்படையில் அல்லு அர்ஜூன் மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் அல்லு அர்ஜூன், எஃப்.ஐ.ஆர்-ல் இருந்து தனது பெயரை நீக்குமாறு தெலுங்கானா உயர்நீதிமன்றததில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய விருது பெற்ற நடிகரின் கைது, ஆட்சியாளர்களின் பாதுகாப்பின்மையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.
    • இந்த விசயத்தில் உண்மையிலேயே தோல்வியடைந்தது யார்?.

    "புஷ்பா 2" படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. அப்படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜூன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சிக்கடபல்லியில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக சென்றார்.

    அப்போது அல்லு அர்ஜூனை நேரில் பார்ப்பதற்காக அதிக அளவில் கூட்டம் கூடியது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குழந்தை காயம் அடைந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரை விசாரணை நடத்துவதற்கான அழைத்து சென்றனர். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் இந்த கைது தேவையற்றது என பி.ஆர்.எஸ். தலைவர் ராம ராவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பி.ஆர்.எஸ். செயல்தலைவர் ராம ராவ் கூறியதாவது-

    தேசிய விருது பெற்ற நடிகரின் கைது, ஆட்சியாளர்களின் பாதுகாப்பின்மையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும். அல்லு அர்ஜுனை பொதுவான குற்றவாளியாக நடத்துவது தேவையற்றது மற்றும் பொருத்தமற்றது.

    உயிரிழந்த பெண்ணிற்கான நான் அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இந்த விசயத்தில் உண்மையிலேயே தோல்வியடைந்தது யார்?. நேரடியாகப் பொறுப்பேற்காத ஒரு விஷயத்திற்காக அல்லு அர்ஜுனை ஒரு சாதாரண குற்றவாளியைப் போல நடத்துவது தேவையற்றது.

    இவ்வாறு ராம ராவ் தெரிவித்துள்ளார்.

    • உயிரிழந்த பெண்ணின் மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமுற்றான்
    • பெண் உயிரிழந்த சம்பவத்தில் திரையரங்கு மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இன்று (டிசம்பர் 5) வெளியான திரைப்படம் புஷ்பா 2 தி ரூல். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

    திரைப்படம் வெளியான நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்றபோது ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

    உயிரிழந்த பெண்ணின் மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமுற்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு பிரீமியர் காட்சி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு வந்த அல்லு அர்ஜுனைக் காண கூட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்த போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.

    பெண் உயிரிழந்த சம்பவத்தில் திரையரங்கு மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யபட்ட நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீசார் வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டிருந்தனர்.

    இந்நிலையில் விசாரணை செய்வதற்காக ஐதராபாத் சிக்கடபல்லி போலீசார் அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் இருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் தொடர்ந்து 2 மணி நேரமாக விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மனோஜ் சில சமூக விரோதிகளுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை ரங்காரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் அருகே ஜல்பல்லியில் தனது வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்தார்.
    • எனக்கும், என் வீட்டில் இருப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள் என்று மோகன் பாபு தெரிவித்துள்ளார்.

    பழம்பெரும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு தனது மகன் மஞ்சு மனோஜ் மற்றும் மருமகள் மோனிகா ஆகியோர் தன்னை மிரட்டுவதாகவும் அவர்கள் மூலம் தனக்கு ஆபத்து இருப்பதாவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    மோகன் பாபு தனது புகாரில் கூறியதாவது, மனோஜ் சில சமூக விரோதிகளுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை ரங்காரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் அருகே ஜல்பல்லியில் தனது வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்தார்.

    எனக்கும், எனது சொத்துக்களுக்கும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதால் நான் அஞ்சுகிறேன்.

    எனக்கும், என் வீட்டில் இருப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள் என்று மோகன் பாபு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மனோஜுக்கு இடையிலான சொத்து பிரச்சனை தொடர்பாக செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் சென்றுள்ளனர்.

    அப்போது ஐதராபாத்தில் தனது வீட்டின் முன் திரண்டிருந்த பத்திரிகையாளர்களின் மைக்கை பறித்து நடிகர் மோகன் பாபு தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மோகன்பாபு வீட்டில் இருந்த பாதுகாவலர்கள், பவுன்சர்கள் பத்திரிகையாளர்களின் கேமரா மற்றும் மைக்கை பறித்து உடைத்துள்ளனர்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோகன் பாபுவின் இந்த செயலுக்கு தெலங்கானா பத்திரிகையாளர்கள் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எனக்கும், எனது சொத்துக்களுக்கும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதால் நான் அஞ்சுகிறேன்.
    • என்னை நிரந்தரமாக என் வீட்டை கைவிட அவர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள்.

    பழம்பெரும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு தனது மகன் மஞ்சு மனோஜ் மற்றும் மருமகள் மோனிகா ஆகியோர் தன்னை மிரட்டுவதாகவும் அவர்கள் மூலம் தனக்கு ஆபத்து இருப்பதாவும் போலீசில் புகார் அளித்துள்ளார். எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    மோகன் பாபு தனது புகாரில் கூறியதாவது, மனோஜ் சில சமூக விரோதிகளுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை ரங்காரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் அருகே ஜல்பல்லியில் தனது வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்தார்

    எனக்கும், எனது சொத்துக்களுக்கும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதால் நான் அஞ்சுகிறேன். இந்த நபர்கள் என்னைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் வெளியே சென்ற நான் மீண்டும் வீடு திரும்புவதற்காகக் காத்திருந்தனர் என்பதை அறிந்து நான் பயந்துவிட்டேன். என்னை நிரந்தரமாக என் வீட்டை கைவிட அவர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள்.

     

    எனக்கும், என் வீட்டில் இருப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள் என்று மோகன் பாபு தெரிவித்துள்ளார்.

    மனோஜ், மோனிகா மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை தனது சொத்துக்களிலிருந்து வெளியேற்றுமாறும் மோகன் பாபு போலீசை வலியுறுத்தியுள்ளார்.

    முன்னதாக, மனோஜ் மஞ்சு தனது தந்தையால் தாக்கப்பட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது மகனுக்கு எதிராக மோகன் பாபு புகார் அளித்துள்ளார்.

    தந்தை - மகன் இருவருக்கும் இடையில் சொத்து தொடர்பான தகராறால் சுமூகமான உறவு இல்லை என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • சந்திரசேகர ராவ் கட்சியின் முன்னாள் தலைவர் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
    • ஜெர்மனி குடியுரிமை பெற்றிருந்த நிலையில் அதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேக ராவ் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் ஜெர்மனி நாட்டின் குடியுரிமையை வைத்துக் கொண்டு மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார் என தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்தள்ளார்.

    2009-ம் ஆண்டு வெமுலாவாடா தொகுதியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரமேஷ். 2010-ல் சந்திரசேகர ராவ் கட்சிக்கு தாவினார். தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகி 2010 முதல் 2018 வரை இடைத்தேர்தல் உள்பட மூன்று முறை சந்திரசேகர ராவ் கட்சி எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    ஜெர்மனி குடியுரிமை பெற்றிருந்த அவர், அதை மறைத்து தன்னை இந்திய குடிமகன் என மோசடியான ஆவணங்களை வைத்து வெமுலாவாடா தொகுதியில் போட்டியிட்டுள்ளார் என உயர்நீதிமன்றம் தேர்வித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் ஆதி ஸ்ரீனிவாஸ் ரமேஷ்க்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜெர்மனி தூதரகத்தில் இருந்து, அவர் ஜெர்மனி குடியுரிமை பெறவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்பிக்க தவறிவிட்டார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், 25 லட்சம் ரூபாயை ஆதி ஸ்ரீனிவாஸ்க்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2023-ல் ஸ்ரீனிவாஸிடம் ரமேஷ் தோல்வியடைந்தார். பொய் சான்றிதழ் வழங்கி தேர்தல் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரமேஷ்க்கு நீதிமன்றம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது, அவருக்கு பின்னடைவு என ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

    இந்திய சட்டப்படி இந்திய குடியுரிமை பெறாத ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. வாக்களிக்கவும் முடியாது.

    ரமேஷ் 2023-ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் ஜெர்மனி பாஸ்போர்ட்டை வைத்திருப்பதாகவும், அவர் தனது விண்ணப்பத்தில் உண்மைகளை மறைத்ததன் காரணமாக அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் 2020-ம் ஆண்டில் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இதே காரத்திற்காக 2013-ல் இடைத்தேர்தல் வெற்றியை ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    • மணிகண்டா மட்டும் காரின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து அலறி கூச்சலிட்டார்.
    • காரின் கதவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பேரும் மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹயாத் நகரை சேர்ந்தவர்கள் ஹர்ஷா, தினேஷ், வம்சி, பாலு, வினய், மணிகண்டா. நண்பர்களான இவர்கள் 6 பேரும் இன்று அதிகாலை நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக காரில் சென்று கொண்டு இருந்தனர்.

    போச்சம்பள்ளி, ஜலால்பூர் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த குளத்தில் பாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. மணிகண்டா மட்டும் காரின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து அலறி கூச்சலிட்டார்.

    அப்பகுதியினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கிய காரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். காரின் கதவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பேரும் மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது. உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×