என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 10 தலைவர்கள் பங்கேற்பு கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 10 தலைவர்கள் பங்கேற்பு](https://img.maalaimalar.com/Articles/2017/Jun/201706021052572539_Karunanidhi-birth-day-event-10-leaders-Participation_SECVPF.gif)
X
கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 10 தலைவர்கள் பங்கேற்பு
By
மாலை மலர்2 Jun 2017 10:52 AM IST (Updated: 2 Jun 2017 10:52 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழாவில் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், லல்லு பிரசாத் யாவ் உள்ளிட்ட 10 தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை (3-ந் தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்கிறார்.
விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன் ஆகிய 10 தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்கள். மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றி கூறுகிறார்.
![](http://img.maalaimalar.com/InlineImage/201706021052572539_nitish-kumar1._L_styvpf.gif)
கருணாநிதி பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 2 வாரங்களாக நடந்து வருகிறது. கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் சட்டசபை வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மேடைக்கு எதிரில் பார்வையாளர்கள் அமர மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Next Story
×
X