என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![இரு அணிகள் இணைப்பு: 8 மாதங்களுக்கு பின்னர் களை கட்டியது அ.தி.மு.க. தலைமை நிலையம் இரு அணிகள் இணைப்பு: 8 மாதங்களுக்கு பின்னர் களை கட்டியது அ.தி.மு.க. தலைமை நிலையம்](https://img.maalaimalar.com/Articles/2017/Aug/201708211221226270_ADMK-Merger-enjoyment-staffs-in-ADMK-Head-office_SECVPF.gif)
X
இரு அணிகள் இணைப்பு: 8 மாதங்களுக்கு பின்னர் களை கட்டியது அ.தி.மு.க. தலைமை நிலையம்
By
மாலை மலர்21 Aug 2017 12:21 PM IST (Updated: 21 Aug 2017 12:21 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அ.தி.மு.க. அணிகள் இணைவதால் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையம் மீண்டும் களை கட்டியுள்ளது.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணிகள் இணைப்பு நிகழ்ச்சி அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் இன்று நடைபெறுவதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளளனர். தலைமை நிலையம் முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல தலைமை நிலையம் முன்பு அவ்வை சண்முகம் சாலையில் இடது மற்றும் வலதுபுற சந்திப்பிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் கட்சி அலுவலகம் களை இழந்து காணப்பட்டது. கடந்த 8 மாதங்களாகவே அந்த நிலைதான் நீடித்தது. இன்று 2 அணிகளும் இணையும் நடவடிக்கை இறுதி வடிவம் பெற்றுள்ளதால் தலைமை நிலையத்தில் மீண்டும் உற்சாகம் கரை புரண்டது.
கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் அங்கு அதிக அளவில் குவிந்து வருகிறார்கள். அங்கு திரண்டுள்ள தொண்டர்களின் முகத்தில் பூரிப்பு காணப்பட்டது.
![](http://img.maalaimalar.com/InlineImage/201708211221226270_1_jayalalithaamemorial._L_styvpf.jpg)
மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கும் அ.தி.மு.க. தலைவர்கள் செல்ல இருப்பதால் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா சமாதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அங்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனால் ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.

Next Story
×
X