என் மலர்
செய்திகள்
X
காளையார்கோவிலில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை
Byமாலை மலர்7 March 2018 3:30 PM IST (Updated: 7 March 2018 3:30 PM IST)
காளையார்கோவிலில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே உள்ள பொன்னக்குளம் அழகுநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் கனகா (வயது 26). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் பாபு (32) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
அப்போது 10 பவுன் நகை, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.
இந்த நிலையில் கனகா மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.அதில், எனது கணவர் கூடுதலாக பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகவும், இதற்கு அவரது பெற்றோர் முத்து- மீனாம்பிகை உடந்தையாக இருப்பதாக வும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக் பாபு, அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
X