என் மலர்
செய்திகள்

X
ரூ.100 கோடி செலவில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கம்: அமைச்சர்கள் ஆய்வு
By
மாலை மலர்28 July 2018 6:10 PM IST (Updated: 28 July 2018 6:10 PM IST)

புதுவை கோரிமேட்டில் ரூ.100 கோடி செலவில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேட்டில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி விரிவுபடுத்தப்பட உள்ளது. அங்கு ரூ.100 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்காக ஆஸ்பத்திரி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை இ.எஸ்.ஐ. நிர்வாகம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் இன்று கோரிமேடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆஸ்பத்திரி முழுவதும் பார்வையிட்ட அவர்கள் பின்னர் ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு தேவைப்படும் நிலத்தையும் பார்வையிட்டனர்.
இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு தேவையான அரசுக்கு சொந்தமான நிலத்தை கொடுப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்றார்.
Next Story
×
X