search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி பாதயாத்திரை தொடங்கினார்
    X

    ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி பாதயாத்திரை தொடங்கினார்

    ஆந்திராவில் இன்று ஜெகன்மோகன்ரெட்டி 3 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரை செல்கிறார். 125 சட்டசபை தொகுதிகளுக்கு செல்லும் ஜெகன் மோகன்ரெட்டி சுமார் 2 கோடி மக்களை சந்திக்கிறார்.

    நகரி:

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ‘பிரஜா சங்கல்பா யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை நடத்த ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்தார்.

    இதில் மக்களை சந்தித்து சந்திரபாபுநாயுடு அரசின் செயல்பாடுகள், தேர்தலின் போது சந்திரபாபு நாயுடு அறிவித்த 600 வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை என்று விளக்கி கூறுகிறார்.

    இந்த பாதயாத்திரையை இன்று காலை ஜெகன் மோகன்ரெட்டி தொடங்கினார். கடப்பா மாவட்டம் இதுபுல்லபையா எஸ்டேட், புலிவெந்தூரில் உள்ள தனது தந்தையும், முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டி கல்லறையில் அஞ்சலி செலுத்தி அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அதன்பின்பு தனது பாதயாத்திரையை தொடங்கினார். இதில் ஜெகன்மோகன்ரெட்டி 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு நடந்து செல்கிறார்.

    125 சட்டசபை தொகுதிகளுக்கு செல்லும் ஜெகன் மோகன்ரெட்டி சுமார் 2 கோடி மக்களை சந்திக்கிறார். 3 மாதம் நடைபெறும் பாதயாத்திரையில் 180 பொதுக் கூட்டங்களில் ஜெகன் மோகன் ரெட்டி பேசுகிறார்.

    Next Story
    ×