search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகில இந்திய பால்பேட்மின்டன்: மேற்கு ரெயில்வே, ஐ.சி.எப். அணிகள் வெற்றி
    X

    அகில இந்திய பால்பேட்மின்டன்: மேற்கு ரெயில்வே, ஐ.சி.எப். அணிகள் வெற்றி

    8-வது செயின்ட் ஜோசப்ஸ் டிராபிக்கான அகில இந்திய பால்பேட்மின்டன் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் மேற்கு ரெயில்வே, ஐ.சி.எப். அணிகள் வெற்றி பெற்றுள்ளது.
    8-வது செயின்ட் ஜோசப்ஸ் டிராபிக்கான அகில இந்திய பால்பேட்மின்டன் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ‘ஏ’ பிரிவில் தெற்கு ரெயில்வே ‘ஏ’ மற்றும் ஐ.சி.எப். அணிகள் வெற்றி பெற்றன.

    தெற்கு ரெயில்வே ‘ஏ’ அணி 38-36, 35-29 என்ற கணக்கில் குப்பு பைவ்ஸ் அணியையும், ஐ.சி.எப். அணி 35-32, 29-35, 35-23 என்ற கணக்கில் தெற்கு ரெயில்வே அணியையும் தோற்கடித்தன.

    ‘பி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் கேரளாவும், ‘சி’ பிரிவில் நடந்த போட்டிகளில் மேற்கு ரெயில்வே, பி.டி.எல். அணிகளும், ‘டி’ பிரிவில் அம்பத்தூர், தெற்கு ரெயில்வே ‘பி’ அணிகளும் வெற்றி பெற்றன.
    Next Story
    ×