என் மலர்
செய்திகள்
X
கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் காயம் அடையாமல் தடுக்க விதிமுறையை மாற்ற பரிந்துரை
Byமாலை மலர்13 April 2017 9:23 AM IST (Updated: 13 April 2017 9:23 AM IST)
கிரிக்கெட் விதிமுறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வரும் இங்கிலாந்தில் உள்ள மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) விக்கெட் கீப்பர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆட்ட விதிமுறையில் திருத்தம் கொண்டு வர பரிந்துரை செய்துள்ளது.
லண்டன் :
கிரிக்கெட் விதிமுறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வரும் இங்கிலாந்தில் உள்ள மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) விக்கெட் கீப்பர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆட்ட விதிமுறையில் திருத்தம் கொண்டு வர பரிந்துரை செய்துள்ளது. அதாவது கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சாளர்கள் ‘கிளன் போல்டு’ செய்கையில் ‘ஸ்டம்பில்’ இருக்கும் பெய்ல்ஸ்கள் வேகமாக எகிறும். பந்தை சிரத்தையுடன் கவனிக்கும் விக்கெட் கீப்பர்கள் சில சமயங்களில் பெய்ல்ஸ்சின் எதிர்பாராத தாக்குதலுக்கு ஆளாகி பாதிப்பை சந்திக்கிறார்கள். 2012-ம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பயிற்சி ஆட்டத்தின் போது பெய்ல்ஸ் தாக்கியதில் தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சருக்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனமானது.
2012-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரின் போது தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரின் இடது கண்ணை, பெய்ல்ஸ் தாக்கிய காட்சி.
இதை கவனத்தில் கொண்டுள்ள எம்.சி.சி, பந்து பட்டதும் பெய்ல்ஸ் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் எகிறாத அளவுக்கு ‘ஸ்டம்ப்-பெய்ல்ஸ்’ இடையே லேசான இணைப்பு கொடுத்து கட்டுப்படுத்தலாம். அதற்காக கிரிக்கெட் விதிமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளது. தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த கம்பெனிகள் புதிய ஸ்டம்ப் மற்றும் பெய்ல்ஸ்சை வடிவமைத்துள்ளன. இந்த விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டி தான் இறுதி முடிவை எடுக்க முடியும்.

Next Story
×
X