என் மலர்
செய்திகள்
X
எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு- விழுப்புரம் போலீசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
Byமாலை மலர்14 March 2018 9:17 AM IST (Updated: 14 March 2018 9:31 AM IST)
பெரியார் சிலையை அகற்றவேண்டும் என்று கூறிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி விழுப்புரம் மாவட்ட போலீஸ்சுக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
பெரியார் சிலையை அகற்றவேண்டும் என்று கூறிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், பெரியபாபுசமுத்திரம், வனந்தபாளையத்தை சேர்ந்தவர் ஜெ.ஜெயரட்சகன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திராவிடர் விடுதலைக் கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டும். ஆணும், பெண்ணும் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்று பெரியார் அரும்பாடுபட்டார். சமூகநீதிக்கும், இடஒதுக்கீட்டுக்கும், பெண் சுதந்திரத்துக்கும், மக்கள் மத்தியில் பகுத்தறிவை உருவாக்குவதற்கும் போராட்டினார்.
அதனால், அவரை புதிய யுகத்தின் தீர்க்கத்தரிசி என்றும், தென்கிழக்கு ஆசியாவின் ‘சாக்ரடீஸ்’ என்றும், சமூத சீர்திருத்த இயக்கங்களுக்கு தந்தை என்றும் யுனெஸ்கோ புகழ்ந்துள்ளது. அப்படிப்பட்ட மனிதரை, பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா என்பவர் இகழ்ந்து பேசியுள்ளார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, அக்கட்சியின் தேசிய செயலாளராக இருக்கும் எச்.ராஜா, தொடர்ந்து பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் இழிவுப்படுத்தி பேசி வருகிறார்.
கடந்த 6-ந்தேதி தன் முகநூலில், ‘ரஷ்யாவை சேர்ந்த லெனின் சிலை, திரிபுரா மாநிலத்தில் அப்புறப்படுத்தப்பட்டது. அடுத்ததாக தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும்’ என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இவரது கருத்தினால், அமைதியாக இருந்த தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேவையில்லாத பதற்றமும் உருவாகியுள்ளது.
எனவே, பொது அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்திய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்களம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கடந்த 6-ந்தேதி புகார் செய்தேன். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.
எனவே, என் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கண்டமங்களம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்குள் பதில் அளிக்கும்படி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கண்டமங்களம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். #tamilnews

Next Story
×
X