என் மலர்
செய்திகள்

X
அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
By
மாலை மலர்14 Jun 2018 6:04 PM IST (Updated: 14 Jun 2018 6:04 PM IST)

அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கம்பம்:
மத்திய மாநில அரசுகளின் கொள்ளை விரோத செயல்களை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கடமலைக் குண்டு, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பிரசார இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். போராட்டக் காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். புதிதாக யாரையும் கைது செய்யக் கூடாது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். இது கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சியாகும். அரசாங்கத்தை எதிர்த்து பேசினாலே கைது செய்யப்படுவது, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்ந்து வருகிறது. இதனை அரசு கைவிட வேண்டும்.
மத்திய அரசின் உத்தரவுக்கு பயந்து தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதனை கைவிட வேண்டும். மத்திய அரசு விவசாய விளை பொருட்களுக்கான விற்பனை விலையை உற்பத்தி செலவுடன் 1 மடங்கு கூடுதலாக சேர்த்து நிர்ணயிக்க வேண்டும். நலிந்து வரும் சிறு தொழில்களை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X