என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![12 ராசிக்காரர்கள் கால பைரவரை வழிபடும் முறை 12 ராசிக்காரர்கள் கால பைரவரை வழிபடும் முறை](https://media.maalaimalar.com/h-upload/2024/02/24/2011725-003.webp)
12 ராசிக்காரர்கள் கால பைரவரை வழிபடும் முறை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பைரவர் சிவனின் 64 திரு உருவத்தில் ஒருவர் ஆவார்.
- பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.
சிவனின் அம்சமான கால பைரவர், எந்தெந்த நாளில், எந்த ராசியினர் வழிபடுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்.
பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார்.
சொர்னாகர் சன பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப் படுகின்றார்.
பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.
அவர் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார், என்பதால் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது.
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.
அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும்.
பைரவ விரதம் தொடர்ச் சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
இத்தனை சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள், அதற்குரிய கிழமைகளில், வழிபட்டால், சிறந்த பலனை அடையலாம்.